பதவிய ஸ்ரீபுர பிரதேசத்தைச் சேர்ந்த 11 வயது சிறுமியை 11 மாதங்களாக துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தியதாக கூறப்படும் சிறுமியின் பாட்டன், சகோதரன் மற்றும் அயல் வீட்டு இளைஞன் ஆகியோரை பதவிய பொலிஸார் கைது செய்துள்ளனர்.
இந்த சிறுமியினது தாயினது தந்தையான பாட்டன் 12 வயதான சகோதரன் மற்றும் அயல் வீட்டிலுள்ள 20 வயது இளைஞன் ஆகியோரே இவ்வாறு கைது செய்யப்பட்டவர்களாவர்.
சிறுமியின் தாய் கடந்த பெப்ரவரி மாதம் ஒரு நாள் வீட்டை விட்டு ஒரு தேவைக்காக வெளியே சென்றபோது சிறுமியை பாதுகாப்பாக பாட்டனாரிடம் ஒப்படைத்துச் சென்றுள்ளார்.
இச்சந்தர்ப்பத்திலேயே முதன்முறையாக பாட்டன் சிறுமியை துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தியுள்ளதாக பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.
இதன் பின்னர் இந்த விடயத்தை அறிந்த சிறுமியின் சகோதரனும் அயல் வீட்டு இளைஞனும் சிறுமியை அச்சுறுத்தி அவ்வப்போது தனித்தனியாக துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தி வந்துள்ளதாகவும் தெரியவந்துள்ளது.
இச்சம்பவம் தொடர்பாக தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபைக்கு கிடைத்த தகவலை அடுத்து பதவிய பொலிஸார் சம்பந்தப்பட்ட மூவரையும் கைது செய்துள்ளனர். பரிசோதனைக்காக கெபித்து கொல்லாவ வைத்திய சாலையில் சேர்க் கப்பட்டுள்ளார்.
சந்தேக நபர்களை நேற்று நீதிமன்றத்தில் ஆஜர் செய்ய பொலிஸார் நடவடிக்கை மேற்கொண்டிருந்தனர்.