அமெ­ரிக்­காவில் செக்ஸ் நடி­கை­யாக வாழ்க்­கையைத் தொடங்­கி­யவர் சன்னி லியோன் ‘ஜிஸ்ம் 2’ படத்தின் மூலம் பொலிவூட் நடி­கை­யாக தனது பய­ணத்தை தொடங்­கி, இப்­போது பொலிவூட்டில் முன்னிலை நடிகைகளில் ஒருவராக இருக்கிறார்.

அண்மையில் தொலைக்காட்சி பேட்டி ஒன்றின்போது புபேந்­திரா சௌத்­திரி எனும் சிரேஷ்ட ஊட­க­வி­ய­லாளர் ஒருவரால் ஆபா­ச­மா­கவும், அனை­வரும் முகம் சுளிக்கும் வகை­யிலும் கேட்­­கப்­பட்ட கேள்­வி­களால் பெரும் பர­ப­ரப்­புகள் கிளம்பியுள்ளன.

இதேவேளை, அவரின் எடக்­கு­ம­டக்­கான பல கேள்­வி­க­ளுக்கு சன்னி லியோன் இலாவ­க­மாகப் பதில் சொல்லி அசத்­தியுள்ளார்.

தற்­போது ஜன­வரி 29 இல் வெளி­யாகவுள்ள தனது ‘மஸ்­தி­ஜாடே’ படத்தின் ப்ரோமோஷன் வேலை­களில் ஈடு­பட்­டுள்ளார். ப்ரோமோஷன் நிகழ்ச்­சியில் பிர­பல தொகுப்­பாளர் மற்றும் நிருபர் ஒருவர் சன்னி லியோ­னிடம் கேட்ட கேள்­விகள், பலபொலிவூட் பிர­ப­லங்­களை கொதித்­தெழ செய்­துள்­ளது.

‘‘பணத்­துக்­கா­கத்­தானே நீங்கள் இப்­படி ஒரு செக்ஸ் வாழ்க்கை வாழ்ந்­தீர்கள்?’’ என்ற கேள்­விக்கு, ‘‘நீங்­கள்­கூட பணத்­துக்­கா­கத்­தானே என்னைப் பேட்டி எடுக்­கி­றீர்கள்?’ என்று மடக்­கினார் சன்னி லியோன்.

” தங்­க­ளது படங்­களை பார்க்க நிறைய திரு­ம­ண­மான பெண்­களின் கண­வர்கள் வரு­கின்­ற­னரே, அதை பற்றி நீங்கள் கவலைப்­ப­டு­வதே இல்­லையா?, நீங்கள் அமீர் கானுடன் பணி­யாற்ற விரும்­பு­கிறீர்கள். ஆனால், அமீர் கான் தங்­க­ளுடன் பணி­யாற்ற விரும்­பு­வாரா?, “

“உங்­களால் இந்­திய அற­நெறி கெடு­த­லுக்கு உள்­ளா­கி­யுள்­ளது என, நாடா­ளு­மன்­ற உறுப்­பினர் ஒருவர், நாடாளுமன்றத்தில் கூறி­யதை நீங்கள் எப்­படி எடுத்­துக்­கொண்­டீர்கள்? நீங்கள் ஒரு முன்னாள் பாலியல் படம் சார்ந்த தொழி­லாளி என ஒப்­புக்­கொள்­கி­றீர்­களா?

இந்­தி­யா­விற்கு தாங்கள் வந்­த­தி­லி­ருந்து ஆபாச படங்­களைப் பார்­ப­்பவர்­களின் எண்­ணிக்கை அதி­க­ரித்­துள்­ளதே, இதற்கு தாங்கள் பொறுப்பு ஏற்­றுக்­கொள்­கி­றீர்­களா போன்ற கேள்­வி­களை ஊடகவியலாளர் கேட்­டுள்ளார்.

இக்­கேள்­வி­க­ளுக்கு துணிச்­ச­லாக பதி­ல­ளித்தார் சன்னி லியோன். தமது கண­வ­ருக்கு சன்னி லியோன் ஓர் அச்­சு­றுத்தல் என திரு­ம­ண­மான பெண்கள் கரு­து­கி­றார்கள். தமது கண­வரை சன்னி லியோன் பறித்­துக்­கொள்வார் என அஞ்­சு­கி­றார்­களே என கேட்­ட­கப்­பட்ட கேள்­விக்கு,
“உங்கள் கண­வர்கள் எனக்கு வேண்­டி­ய­தில்லை. என்கு சொந்­த­மாக ஒருவர் உள்ளார். அவரை நான் நேசிக்­கிறேன். அவர் மிக வசீ­க­ர­மான, திற­மை­யான செக்­ஸி­யா­னவர்” என சன்னி பதி­ல­ளித்­தார்.

14375sunny-leone2சன்னி லியோனின் படங்­களை பார்ப்­ப­வர்கள் உங்­களை பேட்டி காண்­பதால் தமது மனம் களங்­க­ம­டை­கி­றது என பலர் எண்­ணு­கின்­றனர். நான் உங்­களை செவ்வி காண்­கிறேன். அதனால் எனது மன­ம் களங்­க­ம­டை­கி­றதா எனவும் ஊட­க­வி­ய­லாளர் கேள்வி எழுப்­பினார்.

அப்­போது, உங்­க­ளுக்குத் தேவை­யானால் நான் போய்­வி­டு­கிறேன்” என சன்னி பதி­ல­ளித்­த­போது மேற்­படி ஊடகவியலாளர் தடு­மா­றினார்.

சன்னி நிதா­ன­மா­கவும், அமை­தி­யா­கவும் பதி­ல­ளித்­துள்­ளதை பலர் பாராட்­டி­னாலும், இப்­ப­டிப்­பட்ட கேள்­வி­க­ளுக்கு பலர் தங்­க­ளது எதிர்ப்­பினை தெரி­வித்து வரு­கின்­றனர்.

என்­னதான் சன்னி லியோன் ஆபாச படங்­களில் நடிப்­ப­வ­ராக இருப்­பினும் , அவரும் ஒரு மனிதர், பெண் என நினைக்­காமல் இப்­ப­டியும் கேள்­விகள் கேட்­க­லாமா? எனப் பலரும் கேள்விகள் எழுப்பியுள்ளனர்.

14375sunny-leone5அந்த வீடியோவில் சன்னி லியோன் பல கேள்விகளுக்கு அமைதியாக சிரித்த வண்ணம் பதிலளிக்கிறார் என்றாலும் சில கேள்விகளுக்கு அவரால் மேற்கொண்டு பேச முடியாது தவிப்பதும் அப்பட்டமாகவே தெரிவது பலரையும் கோபமாக்கியுள்ளது.

பொலிவூட் நட்­சத்­தி­ரங்­க­ளான ரிஷி கபூர், அலியா பட், உட்­பட சமூக வலைத்­தள வாசிகள் பலர் சன்னி லியோ­னுக்கு ஆத­ர­வாக குரல் எழுப்­பி­யுள்­ளனர்.

சன்னி லியோன் தனது கடந்த காலத்­தி­லி­ருந்து மீண்­டால்­கூட, அதி­லி­ருந்து புபேந்­திரா சௌத்­தி­ரி­யினால் மீள முடி­ய வில்லை போலும் என சிலர் விமர்சித்துள்ளனர்.

20 நிமிடங்களாக ஒரே கேள்வியை அவர் கேட்டுக்கொண்டிருந்தார் என சிலர் விமர்சித்துள்ளனர்.

&nbsp

Share.
Leave A Reply