உகண்­டா­வைச் சேர்ந்த முன்னாள் கிளர்ச்சிக் குழுவின் கட்­டளைத் தள­ப­தி­யான டொமினிக் உங்வென், பொது­மக்­களைக் கொன்று சமைத்து உண்ண தனது கிளர்ச்சிக் குழுவைச் சேர்ந்த உறுப்­பி­னர்­க­ளுக்கு உத்­த­ர­விட்­டி­ருந்­த­தாக சர்­வ­தேச விசா­ர­ணை­யா­ளர் கள் வியா­ழக்­கி­ழமை தெரி­ வித்­தனர்.

அவர் சர்­வ­தேச குற்­ற­வியல் நீதி­மன்­றத்தில் ஆஜர்­ப­டுத்­தப்­பட்ட எல்.ஆர்.ஏ. (லோர்ட் ரெஸிஸ்ரன்ஸ் ஆர்மி) கிளர்ச்சிக் குழுவைச் சேர்ந்த முத­லாவது உறுப்­பினர் என்ற பெயரை பெறுகிறார்.

அவர் மீது சிறுவர்­க ளைப் பாலி யல் அடி­ மை­க­ளா­க வும் படை­வீ­ரர்­க­ளா­கவும்

மாற்ற பாலியல் பலாத்­கா­ரத்தை ஆயு­த­மாகப் பயன்­ப­டுத்­தி­ய­தா­கவும் குற்­றச்­சாட்­டுகள் சுமத்­தப்­பட்­டுள்­ளன.

டொமினிக் மீது 70 போர்க் குற்­றச்­சாட்­டு­களும் மனி­தா­பிமானத்­துக்கு எதி­ரான குற்­றச்­சாட்­டு­களும் சுமத்­தப்­பட்­டுள்­ளமை குறிப்­பி­டத்­தக்­கது.

உலகில் மிகவும் தேடப்­பட்டு வந்த குற்­ற­வா­ளி­யாக இருந்த அவர், பல வருட கால தலை­மறைவு வாழ்க்­கை­யை­ய­டுத்து கடந்த வருடம் ஜன­வரி மாதம் சர­ண­டைந்தார். டொமினிக் தனது 10 ஆவது வயதில் பாட­சா­லைக்கு செல்லும் வழியில் எல்.ஆர்.ஏ. கிளர்ச்­சி­யா­ளர்­க ளால் கடத்­தப்­பட்டு கிளர்ச்சிப் படை­வீ­ர­ராக மாற்­றப்­பட்­டி­ருந்தார்.

இந்­நி­லையில் காலப்­போக்கில் அந் தக் கிளர்ச்சிக் குழுவின் கட்­டளைத் தள­ப­தி­களில் ஒரு­வ­ராக மாறிய டொமினிக்,, சிறுமி­களை பாலியல் அடி­மை­களாகவும் சிறு­வர்­களை படை­வீ­ரர்­க­ளா­கவும் பயன் படுத்தியதுடன் ஒரு சந்தர்ப்பத்தில் பொது மக்களைக் கொன்று சமைத்து உண்பதற்கு ஏனைய கிளர்ச்சிக் குழு உறுப்பினர்களுக்கு உத்தரவிட்டிருந்ததாக கூறப்படுகிறது

Share.
Leave A Reply