ஐ.எஸ். தீவிரவாதிகள் லிபியாவின் சிர்ட் நகரில் மதுபானத்தை அருந்திய குற்றச்சாட்டில் மூவருக்கு மரணதண்டனையும் பிறிதொருவருக்கு கசையடித் தண்டனையும் தம்மால் நிறைவேற்றப்படுவதை வெளிப்படுத்தும் புதிய புகைப்படங்களை வெளியிட்டுள்ளனர்.
அதேசமயம் தெய்வ நிந்தனை, மத எதிர்ப்பு மற்றும் கொள்ளையில் ஈடுபட்ட ஏனைய 3 ஆண்களுக்கும் தீவிரவாதிகளால் மரணதண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது.
அந்தப் புகைப்படங்களில் அற்ககோலை அருந்தியதாக குற்றச்சாட்டுக்குள்ளான நால்வரும் தீவிரவாதிகள் முன்பாக மண்டியிட்டு அமர்ந்திருக்க தீவிரவாதியொருவர் அவர்களால் மேற்கொள்ளப்பட்ட குற்றங்கள் தொடர்பில் அறிக்கையொன்றை வாசிக்கிறார்.
தொடர்ந்து அவர்களில் மூவருக்கு தலை யில் துப்பாக்கியால் சுட்டு மரணதண்டனை நிறைவேற்றப்படுகிறது. இதனையடுத்து நான்காவது நபர் கசையடித் தண்டனைக்கு உள்ளாகிறார்.
இந்தத் தண்டனை நிறைவேற்றங்கள் பெருமளவு தீவிரவாதிகள் மற்றும் பொது மக்கள் முன்னிலையில் இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.