சமீபத்தில் நடிகை அசின் மற்றும் பிரபல தொழிலதிபர் ராகுல் ஷர்மாவின் திருமணம் நடைபெற்றது. இதில் ஓர் ஸ்பெஷல் என்னவென்றால், இவர்களின் திருமணம் கிறிஸ்துவ முறைப்படியும், இந்து முறைப்படியும் நடைபெற்றது.
கிறிஸ்துவ முறைப்படி நடந்த திருமணத்தின் போது, நடிகை அசின் வெள்ளை நிற கவுனில் தேவதைப் போன்று காணப்பட்டார். இந்து முறைப்படி நடந்த திருமணத்தின் போது சப்யசாச்சி லெஹெங்காவை அணிந்திருந்தார்.

இவர்களது திருமண புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் அதிகம் இல்லை. இங்கு தமிழ் போல்ட் ஸ்கை அசின் மற்றும் ராகுல் ஷர்மாவின் சில திருமண புகைப்படங்களை உங்கள் பார்வைக்கு கொடுத்துள்ளது.
25-1453708490-1-asin-rahul-wedding-dress

கிறிஸ்துவ முறை திருமணம்
இது தான் கிறிஸ்துவ முறைப்படி நடந்த திருமணத்தின் போது, அசின் அணிந்து வந்த வெள்ளை நிற கவுன் மற்றும் ராகுல் அணிந்து வந்த கருப்பு நிற கோட் சூட்.
25-1453708496-2-asin-rahul-accessories

சிம்பிள் லுக்
அசின் வெள்ளை நிற கவுனிற்கு எந்த ஒரு ஆபரணங்களும் அணியாமல், கண்களுக்கு கண் மை மற்றும் உதட்டிற்கு லேசாக பிங்க் நிற லிப்ஸ்டிக் மட்டும் போட்டு, சிம்பிளாக இருந்தார்.
25-1453708501-3-asin-rahul-wedding

மணமேடையில் தம்பதிகள்
இது மணமேடையில் அசின் மற்றும் ராகுல் ஒன்றாக அமர்ந்திருந்த போது எடுத்த போட்டோ.
25-1453708507-4-asin-with-rahul

இணைந்த கைகளுடன் தம்பதிகள்
மணமேடையில் ஒன்றாக அமர்ந்திருந்த போது, ராகுல் அசினின் கைகளை இறுக்கமாக பிடித்துக் கொண்டு, உன்னை விட்டு என்றும் பிரியேன் என்ற நிலையில் அமர்ந்திருந்தார்.
25-1453708513-5-asin-rahul-smiling0pic

குதூகலத்தில் தம்பதிகள்
இது திருமணம் முடிந்து இருவரும் ஆனந்த புன்னகைக் கொள்ளும் போது எடுத்த போட்டோ.
25-1453708519-6-asin-rahul-aksay

அக்ஷய் குமார்
அசின் மற்றும் ராகுல் இணைவதற்கு முதன்மைக் காரணம் நடிகர் அக்ஷய் குமார் தான். இது ராகுலுக்கு மணமகன் தோழனாக அக்ஷய் குமார் இருந்த போது எடுத்த போட்டோ.

25-1453708524-7-asin-wedding-lehenga

லெஹெங்கா மற்றும் ஷெர்வானி
இந்து முறைப்படி நடந்த திருமணத்தின் போது, நடிகை அசின் அழகாக எம்பிராய்டரி செய்யப்பட்ட சப்யசாச்சி லெஹெங்காவையும், ராகுல் ராகவேந்திரா ரத்தோர் ஷெர்வானியையும் அணிந்திருந்தனர்.
25-1453708530-8-asin-makeup

அசின் மேக்கப்
அசின் சப்யசாச்சி லெஹெங்காவில் அற்புதமாக காட்சியளிக்க, கண்களுக்கு சற்று பட்டையாக கண் மை தீட்டி, உதட்டிற்கு அடர் சிவப்பு நிற லிப்ஸ்டிக் அணிந்து, கன்னங்களுக்கு பிங்க் நிற பிளஷ் அடித்திருந்தார்.

asin

அசினின் ஆபரணங்கள்
அசின் இந்த அழகிய லெஹெங்காவிற்கு, அழகிய நெற்றிச்சுட்டி, பெரிய காதணி மற்றும் கழுத்திற்கு பல அடுக்குகளைக் கொண்ட நெக்லேஸ் அணிந்திருந்தார். இந்த ஆபரணங்கள் அசினின் அழகை மேலும் அதிகரித்துக் காட்டியது.
25-1453708542-10-asin-wedding

மணமேடை வரும் அசின்
இது அசின் மணமேடையை நோக்கி வரும் போது எடுத்த போட்டோ.
25-1453708547-11-asin-rahul-romantic-poses

ரொமான்டிக் போஸ்
இது அசின் மற்றும் ராகுல் திருமணத்திற்கு பின் கொடுத்த ரொமான்டிக் போஸ்கள்.

90bdd58af6ff47478af7220f0d2ef1e7aa7231ae-tc-img-preview0b4ea35f47a506a78e6032495bc31a6f13cf2906-tc-img-preview9336fa2f406030a8405dfeb093f2e55a7ef68e27-tc-img-preview96446b6cc7d5bd045ba4ae6ae56647a9aa23de0e-tc-img-previewb08b2f8c69ccb86319c12d290965b8c871db1895-tc-img-preview5e3deb99a79b8c2c6d6a96820467dd8820f3642a-tc-img-preview49eeddc95e6f47ef7c05520711c440729c9187aa-tc-img-preview8457feb4c31daebd09e8958d2dc854ed7b90264e-tc-img-preview49eeddc95e6f47ef7c05520711c440729c9187aa-tc-img-previewfd023367ad8bcd2491b003b2f5e3da5b8781e2ce-tc-img-preview

Share.
Leave A Reply