இந்தோனேசியாவின் ஜாவாவில் உள்ள வெகு சிறப்பான சுற்றுலா தலங்களை கொண்ட பகுதியே இந்த யோக்யகர்த்தா.
இது ஜோக்ஜா என்றும் அழைக்கப்படுகிறது.
யோக்ய- கர்த்தா என்றால் இயற்கையின் வளமைக்கு பொருத்தமான நிலப்பகுதி என்ற அர்த்தத்தில் இருந்தே இதன் அருமை நமக்கு புரியும்.
இந்தோனேசியாவில் தேசிய புரட்சி நடந்த காலத்தில் (1945 – 1949) யோக்யகர்த்தாவே தலைநகரமாக இருந்தது.
யோக்யகர்த்தாவின் இருபெரும் உலகப் பாரம்பரியம்
உலகிலேயே மிகப்பெரிய போரோபுதூர் (Borobudur) மற்றும் பிராம்பணன் (Prambanan) புத்த தேவாலயங்கள் இங்கு காணவேண்டிய அரிய பழம்பெரும் சுற்றுலா தலங்கள்.
இந்த கோவில்கள் புத்தமத ஆலயங்கள் என்பதையும் கடந்து அதன் கட்டட அமைப்பு மற்றும் வழிபாட்டுமுறைகளில் இந்தோனேசியன் மற்றும் ஜாவா மக்களின் கலாசாரம் பண்பாட்டையும் பிரதிபலிக்கிறது.
புகழான இவைகள் இரண்டும் யுனெஸ்கோவால் அறிவிக்கப்பட்ட பாரம்பரிய பகுதிகளாகும். உலகளாவிய தொல்பொருள் தலங்களாகவும் உள்ளன.
இங்குள்ள பாறை சார்ந்த சிறப்பான ஒன்பது கட்டட அமைப்புகள் உலக பாரம்பரிய பகுதிகளாக யுனெஸ்கோவால் அறிவிக்கப்பட்டது. அனைத்துமே சுற்றுலாதலங்களாக மாற்றப்பட்டுள்ளது.
சிங்கப்பூரிலிருந்து விமானத்தின் மூலம் நேரடியாக இங்கு செல்ல வசதி உண்டு.
பெரும்பாலான சுற்றுலாப் பயணிகள் இவை இரண்டையும் தங்கியிருந்து பார்த்து ரசிக்கும் ஆர்வத்திலே இந்தோனேசியா வருகின்றனர்.
இந்தோனேசியாவில் உள்ள பழமையும் புதுப்பொழிவும் கொண்ட சுல்தானிய அரண்மனை சொக்கவைக்கும் பிரம்மாண்டமும் வேலைப்பாடுகளும் கொண்டது.
யோக்யகர்த்தா பல நூற்றாண்டுகளாகவே சுல்தான்களின் ஆட்சியின் கீழ் இருந்தது. உலகம் பரவிய ஆங்கிலேயரின் காலனி ஆதிக்கத்தின் போது, டச்சு மற்றும் கிழக்கிந்திய கம்பெனிகளால், இந்தோனேசியா மற்றும் அதனை சுற்றியுள்ள ஜாவா உட்பட்ட தீவுகள் ஆளப்பட்டு வந்தன.
1945 ல் ஜப்பானிய பேரரசு படையெடுத்து ஆங்கிலேயர்களை வீழ்த்தியது. பேரரசர் சுகர்னோ இந்தோனேசியாவிற்கு சுதந்திரம் அளித்து குடியரசு ஆட்சியையும் கொண்டுவந்தார்.
அவர் பெருங்குணத்திற்கு மதிப்பளித்து, இனி யோக்யகர்தாவும் இந்தோனேசிய குடியரசில் ஒரு பகுதியாக விளங்கும் என சுகர்னோவுக்கு சுல்தான் ஒரு கடிதம் எழுதி மகிழ்ச்சியோடு ஒன்று சேர்த்தார்.
நகர அமைப்பு
யோக்யகர்த்தா 32.5 சதுர கி.மீ. பரப்பளவு கொண்டது Kraton என்ற சுல்தான் அரண்மனையை சுற்றி நிறைந்த வீடுகள், தெரு அமைப்புகளில் அமைந்துள்ளன.
கலாசார உயிரோட்டமாக kraton ல் உள்ள மியூசியம் செயல்படுகிறது.
இதன் வடக்கு பகுதியில் காலனிய காலத்து பழைய கட்டடங்கள் இன்னும் உள்ளன. இதற்கு, மத்தியில் ஒரு நவீன நகரமே உருவாக்கப்பட்டுள்ளது. சுற்றுலாப் பயணிகளை கவரும் மாபெரும் சந்தைகளும் ஷொப்பிங் மால்களும் அமைந்துள்ளது.
தெற்கு பகுதியில் Beringharjo என்ற உள்ளூர் சந்தை, vredeburg கோட்டைக்கு அருகில் உள்ளது. இந்த கோட்டை டச்சுக்காரர்கள் வாணிப பொருள்களை பாதுகாக்க கட்டிய கோட்டை.
தாமான் சாரி நீர் கோட்டை 1758 ம் ஆண்டில் கட்டப்பட்டது. இங்கு பார்க்க வேண்டிய வரலாற்று அதிசயங்களில் இதுவும் ஒன்று.
இப்போது அதன் சுற்றுச்சுவர்கள் பழுதடைந்துள்ளது. ஆனாலும் வரலாற்று தடமாக விடப்பட்டுள்ளது. அதனை ஒட்டிய பெரிய தோட்டம் ரசிக்கவேண்டியது.
Sleman ல் உள்ள வரலாற்று காலத்துக்கும் முந்திய எரிமலை படிமங்கள், குனுங்கிடுல் நகரில் பிண்டுல் குகை, களிசுசி குகை, டிமாங் பீச், கிராகல் பீச். Bantul நகரில் உள்ள மணற் குன்றுகள் சுற்றுலாப் பயணிகள் காண சிறந்தது.
-மருசரவணன்