டிக்கோயா கிளங்கன் வைத்தியசாலை நேற்று மேற்கொண்ட அறுவை சிகிச்சையில் சாதனை படைத்துள்ளது.
அக்கரப்பத்தனை பிரதேசத்தை சேர்ந்த பெண் ஒருவருக்கு நான்கு மணி நேரம் மேற்கொண்ட அறுவை சிகிச்சையின் மூலம் இந்த சாதனை நிகழ்ந்துள்ளதாக டிக்கோயா கிளங்கன் வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
இது தொடர்பாக மேலும் தெரியவருவதாவது, தனக்கு வயிற்று வலி என நீண்ட காலமாக அவதியுற்று வந்த இப்பெண் டிக்கோயா கிளங்கன் வைத்தியசாலையின் சிகிச்சைக்கென சென்றுள்ளார்.
இவரை பரிசோதித்த வைத்தியர்கள் வயிற்றில் கட்டி ஒன்று இருப்பதாக தெரிவித்துள்ளனர். இதனையடுத்து இவருக்கு ஒளி கதிர் வீச்சு சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.
இதில் இப்பெண்ணின் வயிற்றில் பாரிய சதைக் கட்டி ஒன்று இருப்பதாக கண்டறியப்பட்டுள்ளது. எனவே இது தொடர்பாக டிக்கோயா கிளங்கன் வைத்தியசாலை அறுவை சிகிச்சை வைத்திய நிபுணர்களுடன் தொடர்பு கொண்டு நேற்று இவர்க்கு நான்கு மணி நேர அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.
இதில் அறுவை சிகிச்சைக்குட்படுத்திய பெண்ணின் வயிற்றிலிருந்து 8 கிலோ மதிக்கதக்க கட்டியொன்று அறுவை சிகிச்சையின் ஊடாக மீட்கப்பட்டுள்ளது.
கிளங்கன் வைத்தியசாலை அறுவை சிகிச்சையின் ஊடாக வைத்தியசாலையின் வரலாற்றில் முதல்முறையாக இவ்வாறான அறுவை சிகிச்சையின் ஊடாக பாரிய கட்டி எடுத்திருப்பது வைத்தியசாலைக்கு சாதனையாகும்.
அதேவேளை சிகிச்சைக்குட்படுத்திய பெண் நலமாக இருப்பதாகவும் சிகிச்சை பாரிய வெற்றியை தந்திருப்பதாகவும் டிக்கோயா கிளங்கன் வைத்தியசாலை அறுவை சிகிச்சை வைத்திய நிபுணர் சி.யூ. குமாரசிரி தெரிவித்தார்.