மட்டக்களப்பு, ஏறாவூர் பொலிஸ் பிரிவில் உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் காரியாலயத்திற்கு சமீபமாக நேற்று வெள்ளிக்கிழமை இரவு இளைஞர் ஒருவர் மீது கத்தி மற்றும் கோடரியால் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
இதனால் படுகாயமடைந்த இளைஞர் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக ஏறாவூர் பொலிஸார் தெரிவித்தனர்.
ஏறாவூர் தாமரைக்கேணி கிராமத்தைச் சேர்ந்த மன்சூர் முஜாஹித் (வயது 26) என்ற இளைஞனே மேற்படி தாக்குதலுக்கு இலக்காகி படுகாயமடைந்துள்ளார்.
மேற்படி குற்றச் செயலுக்குப் பயன்படுத்தப்பட்ட கத்தி, கோடரி என்பன அந்த இடத்திலேயே விட்டுச் செல்லப்பட்டுள்ளன.
இந்த இளைஞன் சிடி விற்பனை நிலையமொன்றுக்கு சிடி வாங்க வந்தபோது தாக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.