“நான் காத­லித்த பெண்­ணினால் என் மனம் காயப்­பட்டுப் போனது. என்­னு­டைய காதல் தோல்வி என்னை எங்கோ, எப்படியெல்­லாமோ வாழ வைத்­து­விட்­டது.

காத­லி­யினால் வெறுத்து ஒதுக்­கப்­பட்ட நான் என் சொந்த மண்­ணையும், சொந்­தங்­க­ளையும் விட்டு வெகு தூரம் வந்துசேர்ந்தேன்.

எனினும், அதற்­கு­பி­றகும் என்­னு­டைய பயணம் முட்கள் நிறைந்த­தா­கவே காணப்­பட்­டது. சேரக் கூடாத இடத்தில் சேர்ந்து செய்­யக்­கூ­டாத பெரும் தவறைச் செய்­து­விட்டேன். அதனால் தான் எனக்கு இன்று இப்­ப­டி­யொரு தண்­டனை.

இது கொலைக்­குற்­றத்­துக்­காக சந்­தே­கத்தின் பேரில் கைது செய்­யப்­பட்டு சிறையில் தன் விடு­தலை நாட்­களை எண்­ணிக்­கொண்­டி­ருக்கும் தர்­ஷ­னவின் புலம்­ப­லாகும். அவன் மனம் திறந்து கூறு­கையில்,

“நான் என் குடும்­பத்தில் இளை­யவன். எனக்கு இரு சகோ­த­ரர்­களும், ஒரு சகோ­த­ரியும் இருக்­கின்­றார்கள். சகோ­தரர்கள் இரு­வரும் திரு­மணம் முடித்து அய­லூரில் வசித்து வரு­கின்­றார்கள்.

என் தந்தை விவ­சாயி. நான் கல்­விப்­பொ­துத்­த­ரா­தர சாதா­ர­ண­தர பரீட்சை எழு­திய போதும் எனக்கு உயர்­த­ரத்தை தொடரும் அள­வுக்கு பெறு­பே­றுகள் அமை­ய­வில்லை.

எனவே, நான் எனது தந்­தைக்கு உத­வி­யாக விவ­சாய நட­வ­டிக்­கை­களில் ஈடு­பட்டேன். எனது வீட்டைச் சுற்றி இருந்தவர்கள் எல்­லா­ருமே என் தந்­தையின் உற­வுக்­கா­ரர்கள்.

என் தந்­தையின் சகோ­த­ரியின் வீடு எங்கள் வீட்­டுக்கு பக்­கத்தில் இருந்­தது. என் மாமிக்கு இரண்டு பெண்­பிள்­ளைகள். மூத்த மகள் என்னை விட பெரி­யவள். இரண்­டா­வது மகள் என்னை விட இளை­யவள்.

அவள் தான் மது­வந்தி (பெயர் மாற்­றப்­பட்­டுள்­ளது.) பார்ப்­ப­தற்கு அழ­காக இருப்பாள். சிறு­வ­யது முதலே மது­வந்தி என் மீது மிகுந்த அன்­பு­டனும் அக்­க­றை­யு­டனும் இருப்பாள்.

அதுவே பருவ வயதை அடைந்­த­வுடன் காத­லாக மாறி­யது. நானும் மது­வந்­தியும் காத­லித்தோம். அவள் என்னை உண்மை­யாக காத­லித்தாள். எனினும், என் மாமிக்கு எங்கள் காதல் விவ­காரம் பிடிக்­க­வில்லை.

“என் மகளை ஒரு விவ­சா­யிக்கு திரு­மணம் செய்து வைக்க மாட்டேன்” என்று கூறி என்னைப் புறக்­க­ணித்தார். அதுமட்டுமின்றி, ஊரி­லுள்ள அனை­வ­ரி­டமும் மாமி அப்­ப­டியே கூறி­யி­ருந்தார்.

எனவே எங்­கா­வது போய் திரு­மணம் செய்­து­கொள்வோம் என்று மது­வந்­தியை வீட்டை விட்டு வர சொன்னேன். எனினும், அவள் வர மறுத்து விட்டாள். பெற்­றோ­ருக்­காக என் காதலை உதறித் தள்ள ஆரம்­பித்தாள்.

மாமி அவ­ளுக்கு நல்ல வச­தி­யான வரன் ஒன்றை பார்த்தாள். மது­வந்­திக்கு ஆரம்­பத்தில் அந்த மாப்­பிள்­ளையை பிடிக்­க­வில்லை.

இருப்­பினும், மாமியின் கட்­டா­யத்தின் பேரில் திரு­ம­ணத்­துக்கு சம்­மதம் தெரி­வித்தாள். எனவே, என் கண்­ணெ­திரே நான் விரும்­பிய ஒரு பெண் இன்­னு­மொ­ரு­வரை திரு­மணம் செய்­து­கொள்­வதை என்னால் ஏற்­றுக்­கொள்­ள­மு­டி­ய­வில்லை..

நான் அங்­கி­ருந்தால் என்னை அறி­யாமல் மது­வந்­திக்கும், மாமிக்கும் ஏதும் செய்­து­வி­டு­வேனோ. என்ற பயம் எனக்குள் இருந்­தது.
என்னால் எல்­லோ­ரையும் போல் சக­ஜ­மாக இருக்க முடி­ய­வில்லை. எனவே, நான் ஊரை விட்டுச் செல்ல தீர்­மா­னித்தேன்.

நான் அதி­காலை 4 மணிக்கு எங்கள் ஊரி­லி­ருந்து கொழும்பு நோக்கி புறப்­படும் பஸ்ஸில் ஏறி இர­க­சி­ய­மாக கொழும்பு வந்து சேர்ந்தேன். குறைந்த பட்சம் என்­னு­டைய தாய், தந்தை கூட அதை அறிந்­தி­ருக்­க­வில்லை.

நான் வீட்­டி­லி­ருந்து புறப்­ப­டு­வ­தற்கு முதல் நாள் இரவு எல்­லோரும் நித்­திரை கொள்­வ­தற்கு முன்பே நான் நித்­தி­ரைக்கு சென்றேன்.

அதன்பின் எல்­லோரும் நித்­தி­ரைக்கு சென்று ஆழ்ந்த உறக்­கத்­தி­லி­ருக்கும் நேரத்தில் நான் வீட்டை விட்டு வெளியேறினேன்.

எனக்கு வீட்­டி­லி­ருந்து எடுத்து வர பெரி­தாக எதுவும் இருக்­க­வில்லை. இரண்டு மூன்று சேட், காற்­சட்­டை­களை மட்­டுமே பையொன்றில் போட்­டுக்­கொண்டு வந்தேன்.

சந்­தியில் பஸ் நிறுத்­தப்­பட்­டி­ருந்­தது. பஸ்­ஸி­லி­ருந்­த­வர்கள் யாரும் என்னை அடை­யாளம் காண­வில்லை. எனினும், பஸ் சார­தியும், பஸ் நடத்­து­நரும் என்னை எப்­ப­டியோ அடை­யாளம் கண்­டு­கொண்­டார்கள்.

அவர்கள் என்­னிடம் “நீ குண­பாலின் மகன் தானே? எங்க தம்பி இந்த அதி­கா­லையில் போகின்­றீர்கள்?” என்று வினவினார்கள்.

அதற்கு நான் “இல்லை அங்கிள் கொழும்­பி­லி­ருக்கும் மாமியின் வீட்­டுக்கு போகின்றேன் ” என்று பதி­ல­ளித்து, எனக்­கு­ரிய யன்னல் ஓரத்­தி­லுள்ள ஆச­னத்தில் அமர்ந்­து­கொண்டேன். அதன்பின் பஸ் வண்டி அதன் பய­ணத்தை ஆரம்­பித்­தது.

அதி­கா­லையில் வீசும் சில்­லென்ற தென்றல் காற்று என் மன­துக்கு இத­மாக இருந்­த­துடன், என்னைப் பல­வாறு சிந்திக்கவும் வைத்­தது.

அந்த நேரம் வரை எனது பய­ணத்தின் நோக்கம் எனக்கே தெரி­யாது. அன்­றைய நிலையில் எனக்கு ஊரை விட்டுப்போனால் போதும் என்­பது மட்­டுமே என் சிந்­தையில் ஓடிக்­கொண்­டி­ருந்­தது. நான் ஒரு­வ­ழியாய் கொழும்பு வந்துசேர்ந்தேன்.

கொழும்­புக்கு வந்­த­வுடன், எனக்கு தங்­கு­வ­தற்கு என்று ஒரு இடம் இருக்­க­வில்லை. பாதை­களும் சரி­யாக தெரி­யாது. பல நாள் கொழும்பில் அங்கும் இங்கும் அலைந்து திரிந்தேன்.

இறு­தியில் கொழும்பு புகை­யி­ரத நிலை­யத்­துக்கு முன்­பாக இரவு நேரங்­களில் ஒரு பிச்­சைக்­கா­ரனைப் போல் உறங்கி வந்தேன்.

அந்த நாட்கள் மிகவும் கொடூ­ர­மா­னவை. இத்­த­கைய ஒரு சந்­தர்ப்­பத்தில் தான் புகை­யி­ரத நிலை­யத்­துக்கு முன்­பாக வைத்து முத­லா­ளி­யொ­ரு­வரை சந்­திக்கும் வாய்ப்பு எனக்கு கிடைத்­தது..

அவர் என் கைகளைப் பிடித்துக் கொண்டு ,“நீ பல நாள் இந்த இடத்தில் இருப்­பதை அவ­தா­னித்­தி­ருக்­கின்றேன். நீ வா என்னோடு போகலாம் ” என்று அழைத்தார்.

நானும் செல்­வ­தற்கு இடம் இல்­லாமல் தவித்­துக்­கொண்­டி­ருந்­ததால் அவ­ருடன் செல்ல சம்­ம­தித்தேன். அதன்பின் அவர் என்னை காரில் ஏற்றி அவ­ரு­டைய வீட்­டுக்கு அழைத்துச் சென்றார்.

விசா­ல­மான காணி பரப்பில் ஓங்கி வளர்ந்து நிற்கும் தென்னை மரங்­க­ளுக்கு நடுவே அவ­ரு­டைய சொகுசு வீடு அமைந்திருந்­தது..

ஒரு நிமிடம் எனக்கு பிர­மிப்­பா­க­வி­ருந்­தது. என்­னு­டைய வாழ்நாளில் அப்­ப­டி­யொரு வீட்டை நான் நேரில் கண்­டது கிடை­யாது.

அவர் வீட்­டுக்குள் அழைத்துச் சென்று எனக்­கென்று தனி­யான அறை­யொன்றை ஒதுக்கிக் கொடுத்தார். அதன்பின் எனக்கு வயிறு நிறைய உண்ண உணவு கொடுத்து ஓய்வு எடுக்கச் சொன்னார்.

நன்­றாக சாப்­பிட்டு முழு நாளும் நித்­தி­ரை­கொண்டேன். அதற்கு பிறகு தான் எனக்கு புது தெம்­பொன்று வந்­தது. மறுநாள் காலை முத­லாளி என்னை அவ­ரு­டைய காரில் வெளியில் அழைத்துச் சென்றார். அப்­படி போகும் வழியில் தான் அவர் என்னைப் பற்­றிய விட­யங்­களை கேட்­ட­றிந்து கொண்டார்.

நான் என்­னு­டைய காதல் விவ­காரம் எல்­லா­வற்­றையும் அவ­ரிடம் மறைக்­காது கூறினேன். அவை எல்­லா­வற்­றையும் கேட்­ட­றிந்த அவர், “தம்பி இந்த கொழும்பு நகரில் ஒன்­றுக்கு இரண்டு பெண்­பிள்­ளை­களை பார்க்­க­மு­டியும்.

அதை எல்லாம் நினைத்து கவ­லைப்­ப­டாதே.. நான் உனக்கு சம்­ப­ள­மொன்று தரு­கின்றேன்.. நீ நான் சொல்­வது போல் இந்த வீட்டில் எனக்கு விசு­வா­ச­மாக இருந்தால் போதும். ” என்று கூறினார்.

அதன் பிறகு நான் அந்த வீட்டில் இருந்தேன். அங்கு எனக்கென்று பெரி­தாக வேலைகள் எதுவும் இருக்­க­வில்லை. முத­லா­ளியின் வீட்டில் அவரும், சமையல் வேலை­களை பார்ப்­ப­தற்கு என்று ஒரு வய­தான பெரி­ய­வ­ருமே இருந்­தார்கள்.

மனைவி, பிள்­ளைகள் என்று யாரும் இருக்­க­வில்லை. நான் அது தொடர்­பாக தேடி பார்க்­கவும் விரும்­ப­வில்லை. முத­லாளி வீட்டில் இருப்­பது குறைவு.

எப்­போ­தா­வது தான் வீட்­டிற்கு வருவார். அதுவும், சில நாட்­களில் நள்­ளி­ரவில் வேனில் வந்து ஏதோ பொருட்­களை இறக்­குவார்.

அது­மட்­டு­மின்றி, இரண்டு வாரங்­க­ளுக்கு ஒரு முறை முத­லா­ளி­யுடன் யாரா­வது ஒரு பெண் வீட்­டுக்கு வந்து போவார்கள்.

முத­லாளி ஒரு நாள் என்­னிடம் வந்து லேனர்­ஸுக்கு சென்று டிரைவிங் பயிற்சி எடுக்­கு­மாறு கூறி பணம் கொடுத்தார். அதன்­படி நானும் லேனர்­ஸுக்கு சென்று பயிற்சி பெற்று சாரதி அனு­மதி பத்­தி­ரத்தைப் பெற்­றுக்­கொண்டேன். அதன்பின் முத­லாளி அவ­ரு­டைய காரை எனக்கு கொடுத்து ஓட்டச் சொன்னார்.

இதற்­கி­டையில், ஒரு நாள் முத­லா­ளியை தேடி பெண்­ணொ­ருவர் வீட்­டுக்கு வந்தார். அவர் பார்க்க அழ­கா­கவும், கவர்ச்சியா­கவும் காட்­சி­ய­ளித்தார்.

நான் உடனே யாருக்கும் தெரி­யாமல் முத­லா­ளியின் தொலை­பே­சிக்கு அழைப்பை ஏற்­ப­டுத்தி விட­யத்தை சொன்னேன். அதன்பின் முத­லாளி உட­ன­டி­யாக வீட்­டுக்கு வந்தார்.

அப்­போது தான் அவர் முத­லா­ளியின் மனைவி என்­பதை நான் அறிந்­து­கொண்டேன்.. அவர் ஒரு வாரம் வரை வீட்டிலிருந்தார்.

அந்த நாட்­களில் முத­லாளி மிகுந்த பொறுப்­புடன் நடந்­து­கொண்டார். முத­லா­ளியின் மனைவி என்­னி­டமும் வந்து முதலாளி தொடர்­பாக கேட்டார்.

நான் முத­லா­ளியை தேடி வீட்­டுக்கு வரும் பெண்கள் தொடர்­பாக எது­வுமே சொல்ல போக­வில்லை. முத­லாளி தொடர்பாக அவ­ரிடம் நல்­ல­வி­த­மாக தான் சொன்னேன். அவர் ஒரு வாரத்­துக்கு பின்னர் மிகுந்த மகிழ்ச்­சி­யுடன் வீட்­டி­லி­ருந்து புறப்­பட்டு சென்றார்.

அதற்கு பிறகு முத­லா­ளியின் மனைவி எந்த நேரத்­திலும் வீட்­டுக்கு வரலாம் என்ற அச்­சத்தில் முத­லாளி மிகுந்த அவ­தா­னத்­துடன் இருந்தார்.

அது­மட்­டு­மின்றி, அடிக்­கடி வீட்டைச் சுற்றி பொலி­ஸாரும் ரோந்து நட­வ­டிக்­கையில் ஈடு­ப­டு­வதை நான் பல நாள் அவதானித்தேன்.

எனினும், ஏன்? எதற்கு? என்று எனக்கு ஒன்­றுமே புரி­ய­வில்லை. இது தொடர்­பாக நான் முத­லா­ளி­யி­டமும் சொன்னேன். அதற்கு அவர் என்­னையும், சமையல் வேலை செய்யும் அங்­கி­ளையும் கவ­ன­மாக வீட்டில் இருக்­கு­மாறு கூறினார்.

இத­னி­டையே ஒருநாள் இதற்கு முதல் வீட்­டிற்கு வராத பெண் ஒரு­வ­ருடன் முத­லாளி வீட்­டுக்கு வந்தார். அதன்பின் சிறிது நேரத்தில் முத­லா­ளிக்கும் அந்த பெண்­ணுக்கும் இடையில் கடும் வாக்­கு­வாதம் இடம்­பெற்­றது.

அறைக்குள் இரு­வரும் தகாத வார்த்­தை­களால் ஒரு­வரை ஒருவர் திட்­டிக்­கொண்­டார்கள்.. எனக்கும் அங்­கி­ளுக்கும் ஒன்றுமே புரி­ய­வில்லை.

முத­லாளி அறை­யி­லி­ருந்து வெளியே வந்து சிறிது நேரத்­துக்கு என்­னையும் அங்­கி­ளையும் தோட்­டத்தில் சென்று இருக்­கு­மாறு கூறினார். எனவே, நாங்கள் இரு­வரும் தோட்­டத்­திற்கு சென்று வெகு நேரம் கதைத்­துக்­கொண்­டி­ருந்தோம்..

அதன்பின் சிறிது நேரத்தில் நாங்கள் இரு­வரும் மீண்டும் வீட்­டுக்குள் சென்றோம். அப்­போது எந்­த­வித சத்­தமும் இருக்கவில்லை.

முத­லா­ளியின் அறைக் கதவு மூடப்­பட்­டி­ருந்­தது. எனவே அந்தப் பெண்ணும் முத­லா­ளியும் நித்­திரை கொண்­டி­ருப்­பார்கள். என்று நினைத்து நாங்கள் இரு­வரும் நித்­தி­ரைக்குச் சென்றோம்.

மறுநாள் நான் நித்­தி­ரை­யி­லி­ருந்து எழுந்து எனது அறை­யி­லி­ருந்து வெளியில் வரும் போது முத­லாளி வீட்­டி­லி­ருந்து சென்­றி­ருந்தார்.

அவ­ரு­டைய கார் அங்­கி­ருக்­க­வில்லை. அதன்பின் சிறிது நேரத்தில் நான் வழ­மைபோல் முத­லா­ளியின் அறையை சுத்தம் செய்ய சென்றேன். அப்­போது அந்த பெண் நித்­தி­ரை­யி­லி­ருந்தார்.

எனவே, நான் அறையை சுத்தம் செய்­யாது வந்­து­விட்டேன். அதன்பின் சிறிது நேரத்தில் அவர் நித்­தி­ரை­யி­லி­ருந்து எழுந்­தி­ருப்பார் என்று நினைத்து தேநீ­ரையும் எடுத்­துக்­கொண்டு மீண்டும் அறைக்குள் சென்றேன்.

எனினும், அப்­போதும் அவர் நித்­தி­ரை­யி­லேயே இருந்தார். எனவே, எனக்கு அது சந்­தே­கத்தை உண்­டு­பண்­ணி­யது. அவரை எழுப்ப முயற்­சித்தேன்.

பல­முறை கூப்­பிட்டு பார்த்தேன். அவர் எழுப்­ப­வில்லை. அதன்பின் நான் அவ­ரு­டைய உடம்பில் கை வைத்து பார்த்தேன். அப்­போது உடம்பு குளிர்ச்­சி­யா­க­வி­ருந்­தது.

நான் அரை மணித்­தி­யா­லத்­திற்கு மேல் அவரை எழுப்ப முயற்­சித்தேன். எனினும் அவர் எழும்­ப­வில்லை. அதன்பின் நான் அறை­யி­லி­ருந்து வெளியில் வந்து அங்­கி­ளிடம் விட­யத்தைக் கூறினேன்.

அதன்பின் அவரும் வந்து பார்த்­து­விட்டு அவர் இறந்­தி­ருக்க வேண்டும் . நாங்கள் பொலிஸ் நிலை­யத்­துக்கு அறி­விப்போம் என்று கூறினார்.

அதன்­படி நாங்கள் மேற்­படி சம்­பவம் தொடர்பில் பொலிஸ் நிலை­யத்­துக்கு தகவல் வழங்­கினோம். எனினும், துரதிஷ்டவ­ச­மாக பொலிஸார் என்­னையும் அங்­கி­ளையும் சந்­தே­கத்தின் பேரில் கைது­செய்­தார்கள்.

முத­லாளி அதற்­கு­பி­றகு எங்கு சென்றார், என்ன ஆனார் என்று ஒன்­றுமே தெரி­யாத நிலையில். அவர் எங்கோ தலை­ம­றை­வா­கி­யி­ருந்தார்.

இந்த நிலையில் அந்த பெண்ணின் சடலம் பிரேத பரி­சோ­த­னைக்­குட்­ப­டுத்­தப்­பட்­டது.. அதன் முடி­வு­களின்படி அந்த பெண்ணின் கழுத்து நெரிக்­கப்­பட்டு கொலை செய்­யப்­பட்­டி­ருக்­கின்றார் என்­பது உறு­தி­செய்­யப்­பட்­டது..அதன்பின் பொலிஸார் அங்­கிளை ஒரு­வா­று­வி­டு­தலை செய்த போதும் சந்­தே­கத்­தின்­பேரில் என்னை பல நாள் விளக்­க­ம­றி­யலில் வைத்து விசா­ரணை செய்­தார்கள்.

எனினும் அவ்­வி­சா­ர­ணை­களின் அடிப்­ப­டையில் இக்­கொ­லை­யுடன் எனக்கு தொடர்­பில்லை என்­பது உறு­தி­யா­னது. அதன்­பின்­னரே என்னை விடு­தலை செய்­தார்கள்.

ஆயினும், நான் விளக்­க­ம­றி­யலில் இருந்த அந்த நாட்­களில் உடல், உள­ரீ­தியில் பல்­வேறு சித்­தி­ர­வ­தை­க­ளுக்கு ஆளானேன்.

எனவே, முத­லா­ளியை எப்­ப­டி­யா­வது கண்டு­பி­டித்து பழி­வாங்க வேண்டும் என்ற ஆத்­திரம் எனக்குள் இருந்­தது. முதலாளியை அங்­கு­மிங்கும் தேடித் திரிந்தேன். அவரைத் தெரிந்­த­வர்­க­ளிடம் அவரை பற்றி விசா­ரித்தேன்.

அப்­போது தான் முத­லாளி ஒரு போதைப்­பொருள் வியா­பாரி என்­பதை நான் அறிந்­து­கொண்டேன். எனினும், அந்த பாவப்பட்ட பணத்தில் தான் நானும் இத்­தனை நாள் வாழ்ந்­தி­ருக்­கின்றேன். என்­பதை நினைக்­கும்­போது தர்­ம­சங்­க­ட­மா­க­வி­ருந்­தது.

அதன் பின்னர் நான் எந்த தவ­றான தொழி­லிலும் ஈடு­ப­ட­வில்லை. எனது வாழ்க்­கையை கொண்டு நடத்­து­வ­தற்­காக நேர்­மை­யான முறையில் பல்­வேறு தொழில்­களில் ஈடுபட்டேன்.

எனக்கு கஷ்டம் என்று நினைத்து எப்போதுமே மீண்டும் ஊருக்கு செல்ல நினைக்கவில்லை. தனிமையிலேயே என்னுடைய பொழுதுகள் கழிந்தன.

இதனிடையே, ஒருநாள் எதேச்சையாக முதலாளியை சந்திக்கும் வாய்ப்பு எனக்கு கிடைத்தது. அப்போது நான் ஒரு பழக்கடையில் வேலை செய்துகொண்டிருந்தேன். முதலாளி நான் யார் என்று அடையாளம் காணவில்லை.

எனினும், எனக்கு அவரை கண்டவுடன் கொலை செய்யும் அளவுக்கு ஆத்திரம் பீரிட்டு வந்தது. நான் கையிலிருந்த கத்தியை எடுத்து “நீ தானே கொலையை செய்துவிட்டு என்னை மாட்டிவிட்டவன்” என்று கூறிக்கொண்டே முதலாளியை சரமாரியாக கத்தியால் குத்தினேன்.. முதலாளி துடிதுடித்து நிலத்தில் சாய்ந்தார்.

அவருடைய உயிர் பிரிந்தது. அதன்பின்னரே பொலிஸார் என்னை கைது செய்தனர். அன்று நான் செய்யாத குற்றத்துக்காக சிறைக்கு வந்து தண்டனை அனுபவித்தேன். இன்று செய்த குற்றத்துக்காக தண்டனை அனுபவிக்கின்றேன். இது தான் என் தலை விதி.

மூலம்: சிங்கள நாளேடு

Share.
Leave A Reply