இவ்­வாரம் சம்பூர் கிரா­மத்தில் இடம்­பெற்ற பாலகன் தரு­ஷனின் மரணம் அக்­கி­ரா­மத்­தையே சோக வெள்­ளத்தில் ஆழ்த்தி­யுள்­ளது.

பள்­ளிக்குப் போய் ஒரு மாதங்­கூட ஆக­வில்லை. படு­கொலை செய்­யப்­பட்­டானா? பரி­தா­ப­கரமாக இறந்­தானா? தவறுதலாக விதியின் விளை­யாட்டா என்று கண்­டு­பி­டிக்க முடி­யாத அள­வுக்கு மரணம் நிகழ்ந்து விட்­ட­தாக சம்பூர் மக்கள் ஓல­மி­டு­கி­றார்கள்.

பட்ட காலி­லே­படும் கெட்ட குடியே கெடும் என்­ப­துபோல் கடந்த 9 வரு­டங்­க­ளுக்குப் பிறகு அண்­மையில் குடியேற்றப்பட்ட மக்­க­ளுக்கு இடிக்­குமேல் இடி விழுந்­த­துபோல் இச்­சம்­பவம் கடந்த திங்­கட்­கி­ழமை (25.01.2016) மாலை நடந்­துள்­ளது.

7 ஆம் வட்­டாரம் சம்பூர் கிரா­மத்தைச் சேர்ந்த செல்­வ­ரட்ணம் குகதாஸ், ஜெய­வாணி ஆகி­யோ­ருக்கு மூன்­றா­வது புத்திரனாகப் பிறந்த தருஷன் விளை­யா­டு­வ­தற்­காக மாலை தனது அண்­ண­னு­டனும் அயல் வீட்டு நண்­ப­னு­டனும் சென்றுள்ளான்.

மாலை பட்டுப் போன நிலையில் தனது பிள்­ளையைத் தேடி­யுள்ளார் தாய். அயல் வீட்டு நண்பன் வீடு சென்று விட்டான். உடன் பிறந்த அண்ணன் தனது தம்­பியை விளை­யாட விட்டு வீடு சென்­று­விட்டான்.

தருஷன் தனது வீட்­டுக்கு முன்­னுள்ள தெரு வெள்­ளத்தில் விளை­யாடிக் கொண்­டி­ருந்­தி­ருக்­கிறான் தந்தை இதை அவ­தா­னித்­தி­ருக்­கிறார்.

தரு­ஷ­னுக்கு மூத்த சகோ­த­ரர்கள் இருவர். விதுஷன், வினோஜன். ஐந்து வயது பூர்த்­தி­யா­கிய நிலையில் சம்பூர் மகா வித்தி­யா­ல­யத்தில் தரம் ஒன்­றுக்கு சேர்க்­கப்­பட்டு சுமார் இரு வாரங்­க­ளுக்கு முன்­பி­ருந்­துதான் பள்ளி செல்லத் தொடங்கி­யுள்ளான்.

தனது மகனைக் காணாத தாய் ஜெய­வாணி மிக அரு­கி­லுள்ள சம்பூர் பொலிஸ் நிலை­யத்தில் முறைப்­பாடு செய்­த­துடன் பொலிஸார் மற்றும் உற­வி­னர்கள் ஊர­வர்­களின் உத­வி­யுடன் பிள்­ளையை தேடி­யுள்ளார்.

மகனை எங்­குமே காணாத நிலையில் சந்­தேகம் கொண்ட நிலையில் தனது வீட்­டுக்கு பின்­பு­ற­மாக சுமார் 30 மீற்றர் தொலை­வி­லுள்ள பாவிக்கப்படாத பாது­காப்பு அற்ற கிணற்­ற­டிக்குச் சென்று ஊரவர், உற­வினர், பொலிஸார் தேடியுள்ளனர்.

ecffad0d-a054-434d-9a4b-68c1f3cf84701மாலை நேர­மா­ன­ப­டியால் கிணறு தெளி­வற்றுக் காணப்­பட்ட நிலையில் ரோச்சின் உத­வி­யுடன் தேடிய போது சிறுவன் அந்த பாழடைந்த ­கி­ணற்றில் குப்­புற கிடப்­பது கண்­டு­பி­டிக்­கப்­பட்­டது.

மிக நீண்­ட­கா­ல­மாக பாவிக்­கப்­ப­டா­மலும் பாது­காப்­பாக கட்­டப்­ப­டா­மலும் தரை­யோடு தரை­யா­க­வுள்ள இக்­கி­ணற்­றுக்குள் இறங்கி சட­லத்தை மீட்­ப­தற்கு சுழி­யோடி ஒரு­வரின் துணை வேண்­டி­யி­ருந்­தது.

இச்­சம்­பவம் தொடர்பில் இப்­ப­கு­திக்­கு­ரிய மரண விசா­ரணை அதி­காரி ஏ.கே.ஏ. நூருள்லாவுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

மரண விசா­ரணை அதி­காரி ஊட­க­வி­ய­லாளர் ஒரு­வ­ருடன் சம்­பவம் நடை­பெற்ற இடத்­துக்கு சுமார் இரவு 10.45 போல் வருகை தந்­துள்ளார்.

சுழி­யோடி கிணற்­றுக்குள் இறக்­கப்­பட்டார். பொலிஸார் மற்றும் பெருந்­தி­ர­ளான மக்கள் சூழ்ந்து நிற்க. சிறுவன் தரு­ஷனின் உடல் மீட்­கப்­பட்­டது. சுமார் நடு­நிசி 12.10 போல் சடலம் வெளியே எடுக்­கப்­பட்­டுள்­ளது.

ஊர­வர்­க­ளுக்கும் பொலி­ஸா­ருக்கும் அதிர்ச்சி காத்­தி­ருந்­தது. பால­கனின் வயிற்­றுடன் சுமார் 3 கிலோவுக்கு மேற்­பட்ட எடை­யுடன் கல்­லொன்று பிணைக்­கப்­பட்டு அந்த பிணைப்­புக்­கு­ரிய முடிச்சு முதுகுப்­புறம் போடப்­பட்­டி­ருந்­தது.

கல்லைப் பிணைப்­ப­தற்கு பாவிக்­கப்­பட்ட கயிறு சப்­பாத்து கட்­டு­வ­தற்கு பயன்­ப­டுத்­தப்­படும் பல­முள்ள லேஸ் இந்த லேஸ் சாதா­ரண ஒரு நபர் பாவிக்கும் லேஸ் அல்ல என்ற கருத்தும் அவ்­வி­டத்தில் பேசப்­பட்­ட­தாக ஊட­க­வி­ய­லாளர் தெரி­வித்தார்.

மரண விசா­ரணை அதி­கா­ரிக்கு சிறு­வனின் மர­ணத்தின் மீது ஒரு முடி­வுக்கு வர­மு­டி­ய­வில்லை சந்­தே­கங்­களும் ஊகங்களும் பல­வாக இருந்த கார­ணத்­தினால் மரண விசா­ரணை அதி­காரி பொலி­ஸாரின் உத­வி­யுடன் மூதூர் நீதி­மன்ற நீதிவான் ஐ.என்.ரிஸ்வானுக்கு தகவல் தெரி­விக்­கப்­பட்­டது.

சிறுவர் துஷ்­பி­ர­யோகம், படு­கொ­லைகள் பாலியல் வன்­மங்கள் பெரி­ய­ளவில் காணப்­ப­டாத மாவட்­ட­மாக திருகோணமலை மாவட்டம் காணப்­ப­டு­கி­ன்ற ­போதும் அங்­கொன்றும் இங்­கொன்­று­மாக சில சம்­ப­வங்கள் இடம்­பெற்­றுள்­ளன என்­பது மறுப்­ப­தற்கு இல்­லை­யென்றே கூற­வேண்டும்.

ஞாப­கத்­துக்கு எட்­டிய வகையில் சுமார் 45 வரு­டங்­க­ளுக்­குமுன் புற­நகர் பகு­தி­யான ஜமா­லியா கிரா­மத்தில் நடந்த அலிகரன் படு­கொலை, 2009 இல் பாலை­யூற்று ஜூட் ரெஜி­வர்ஷா படு­கொலை, 2014 ஆம் ஆண்டில் குச்­ச­வெளிப் பிரதேசத்தில் நடை­பெற்­ற­தாகக் கூறப்­படும் சிறுமி துஷ்­பி­ர­யோகம் போன்ற சம்­ப­வங்கள் திரு­கோ­ண­மலைப் பிர­தே­சத்தில் பரபரப்பை ஏற்­ப­டுத்­திய சம்­ப­வங்­க­ளாகும்.

9d4e8c17-3fa7-428e-b783-7c424e5727f2தரு­ஷனின் படு­கொ­லை­யா­னது சம்பூர் மக்­களை சோகத்தில் ஆழ்த்­தி­யுள்ள அதே­நேரம், இக்­கொலை ஏன் செய்யப்பட்டது? யாரால் செய்­யப்­பட்­டது? கொலை செய்­யப்­பட்­ட பின் சிறுவன் கல்­லுக்­கட்டி கிணற்­றுக்குள் போடப்பட்டானா?

அல்­லது உயி­ருடன் கிணற்­றுக்குள் போடப்­பட்­ட­தனால் மூச்­சுத்­தி­ணறி உயிர் இழந்­தானா? இதன் சூத்­தி­ர­தா­ரிகள் யார் என்ற சந்­தே­கங்­களும் மர்­மங்­களும் பொலி­ஸாரை மாத்­தி­ர­மல்ல பெற்­றோ­ரையும் கிரா­மத்தைச் சேர்ந்­த­வர்­க­ளையும் அதிர்ச்­சிக்­குள்­ளாக்­கி­யி­ருக்­கி­றது.

மரண விசா­ரணை அதி­காரி, நீதிவான் ஆகி­யோரின் ஆலோ­ச­னைக்கும் அறி­வு­றுத்­த­லுக்கும் அமைய சிறு­வனின் சடலம் செவ்­வாய்க்­கி­ழமை (26.01.2016) திரு­கோ­ண­மலை பொது வைத்­தி­ய­சா­லைக்கு பிரேத பரி­சோ­த­னைக்­காக அனுப்பி வைக்கப்­பட்­டது.

இந்த சம்­பவம் தொடர்பில் சம்பூர் மக்கள் மத்­தியில் மாத்­தி­ர­மல்ல திரு­கோ­ண­மலை மாவட்டம் முழு­வ­துமே பல்­வேறு சந்­தே­கங்கள் எழுப்­பப்­பட்டு வரு­கின்­றன.

அண்­மையில் மீள்­கு­டி­யேற்­றப்­பட்ட சம்பூர் பிர­தே­சத்­தி­லுள்ள மக்கள் இன்னும் குடி­யேற்­றப்­ப­டாத குறை­நிலை காணப்படு­கி­றது. 818 ஏக்கர் நிலம் அண்­மையில் விடு­விக்­கப்­பட்­ட­போதும் இம்­மக்கள் குடி­யேற்­றத்தில் இன்னும் காலதாமத நிலைகள் காணப்­ப­டு­கின்­றது.

பூரண பிர­தேச குடி­யேற்றம் இடம்­பெ­ற­வேண்­டு­மாயின் அடிப்­படை வச­தி­க­ளான நீர், மின்­சாரம், போக்­கு­வ­ரத்து, பாடசாலை, முன்­பள்ளி, குடிநீர் விநி­யோகம், பொது வச­திகள் இன்னும் செய்­யப்­பட வேண்­டு­மென மக்கள் தமது அதிருப்தி­களை தெரி­வித்து வரு­கின்­றார்கள்.

இது தவிர இன்னும் விடு­விக்­கப்­ப­டாத 237 ஏக்கர் நிலப்­ப­ரப்பில் தான் சம்பூர் மக்­களின் பூர்­வீக வாழ்க்கை முறைகள் அமைந்­த­தாக கூறப்­ப­டு­கி­றது.

விடு­விக்­கப்­ப­டாத பகு­தியில் இரு பாட­சா­லைகள், கூட்­டு­றவு சங்கம், சன­ச­மூக நிலையம், பொது மண்­டபம் என ஏகப்­பட்ட மக்­களின் பாவ­னைக்கு வேண்­டிய வச­திகள் இருப்­ப­தா­கவும், இவை விடு­விக்­கப்­ப­டு­கிற போதே சம்பூர் மக்­களின் பூரண மீள்­கு­டி­யேற்றம் இடம்­பெற்­ற­தாக கரு­த­மு­டி­யு­மென சம்­பூரைப் பிறப்­பி­ட­மாகக் கொண்ட கிழக்கு மாகாண சபையின் உறுப்­பினர் கு.நாகேஸ்­வரன் தெரி­வித்தார்.

இவை ஒரு­பு­ற­மி­ருக்க சம்பூர் அனல் மின்­நி­லையம் தொடர்பில் அம்­மக்கள் கொண்­டி­ருக்கும் அவ­நம்­பிக்­கைகள் அதிகமான­வை­யாகும்.

இந்­திய அரசு நிர்­மா­ணிக்க இருக்கும் அனல் மின்­நி­லை­யத்­தினால் அங்கு வாழும் மக்­க­ளுக்கும் சுற்றுச் சூழ­லுக்கும் விபரிக்க முடி­யாத பாதிப்­புக்கள் ஏற்­படும், இதனால் சம்பூர் கிரா­மத்தில் தொடர்ந்தும் மக்கள் வாழ­மு­டி­யாத ஆபத்து நிலை­யொன்றே ஏற்­படும்.

04f46c5f-7733-4354-892d-0b3e63629f39அர­சாங்கம் சம்­பூரை விடு­வித்த போதும் அனல் மின்­நி­லையம் நிர்­மாணம் எதிர்­கால தம் வாழ்­வி­ய­லுக்கு பெரும் சவாலா­கவே இருக்கப் போகி­றது என்ற அவ­நம்­பிக்கை கொண்­ட­வர்­க­ளா­கவே சம்பூர் மக்கள் விடு­விக்­கப்­பட்ட காணி­களில் குடி­யேறி வரு­கின்­றார்கள்.

இவற்­றுக்கு மேலாக ஜப்பான் நாட்டு தனியார் நிறு­வ­ன­மொன்றும் அனல்மின் நிலை­ய­மொன்றை இப்­பி­ர­தே­சத்தில் நிர்மா­ணிப்­ப­தற்­கான ஒப்­பந்­தங்களை மேற்கொண்டு வரு­கின்­றது என்ற வதந்­திகள் அடி­பட்டுக் கொண்­டி­ருக்­கிற நிலையில் தான் இச்­சி­று­வ­னுக்கு இப்­ப­டி­யொரு ஆபத்தும் நேர்ந்­துள்­ளது.

சம்பூர் மக்­களின் வாழ்­வி­யலைப் பொறுத்­த­வரை அவர்­களின் அடிப்­படைக் கட்­டு­மா­னங்கள் உடைந்­து­போன நிலையில் தான் 9 வரு­டங்­க­ளுக்குப் பிறகு மீள்­கு­டி­யே­றி­வ­ரு­கின்­றார்கள். போதிய பிழைப்­புக்கள் இல்லை.

விவ­சா­யமும் மீன்­பி­டியும் பழைய நிலைக்கு மீள்­எ­ழுச்சி பெறு­வ­தற்­கு­ரிய பொரு­ளா­தார வள பற்­றாக்­கு­றை­யுடன் அர­சாங்­கத்தின் உத­வி­யென்­பது ஆனைப்­ப­சிக்கு சோளப்­பொ­ரி­போட்ட கதை­யா­க­வே­யி­ருக்­கின்­றது.

இவை அனைத்­துக்கும் மத்­தியில் தான் தாங்கள் சொந்த மண்ணில் குடி­யே­றி­வி­டு­வோ­மென்ற ஆர்­வத்­து­டனும் ஆதங்கத்து­டனும் சம்பூர் மக்கள் குடி­யே­றி­வ­ரு­கின்­றார்கள்.

குடி­யேறும் அந்த மக்­க­ளுக்­குத்தான் சாண் ஏற முழம் சறுக்­கு­வ­துபோல் இவ்­வ­கைக்­கெ­டு­திகள் நடை­பெற்றுக் கொண்டிருக்­கி­றன. சிறு­வ­னுக்கு நேர்ந்த இச்­சம்­ப­வத்தின் பின்­ன­ணியில் எவ்­வகைச் சூத்­திரம் இருக்­கி­றது என கதிகலங்கிப் போயி­ருக்­கி­றார்கள் சம்பூர் மக்கள்.

இச்­சி­று­வனின் படு­கொலை அல்­லது மரணம் தொடர்பில் பல்­வேறு சந்­தே­கங்­களை வெளி­யிட்டு வரு­கின்­றார்கள். அச்சிறு­வனின் உற­வி­னர்­களும், ஊர்­மக்­களும், விளை­யாடிக் கொண்­டி­ருந்த சிறு­வனை யார் அழைத்துச் சென்­றார்கள் என்ற விடயம் கண்­ட­றி­யப்­ப­ட­வில்லை என்றும் இது­வி­டயம் தொடர்பில் பொலி­ஸாரால் தீவிர விசா­ர­ணைகள் முடக்கி விடப்­பட்­டி­ருப்­ப­தாக தெரி­விக்­கப்­ப­டு­கி­றது.

கொலை­யாளி சிறு­வனின் கழுத்தில் கயிற்றால் இறுக்கி கொலை செய்து விட்டு மறைப்­ப­தற்­காக கல்­லுடன் கட்டி கிணற்றுக்குள் போட்­டி­ருக்­க­லா­மென ஒரு சாராரின் சந்­தே­கமும் சிறுவன் எதை­யா­வது கண்­டு­விட்டான்.

அந்த உண்­மையை தெரி­யப்­ப­டுத்தி விடுவான் என்ற பயத்தின் கார­ண­மாக இது நடந்­தி­ருக்­க­லா­மென இன்­னொ­ரு­சா­ராரும் இவ்­வாறு சந்­தே­கங்­களும் ஊகங்­களும் வளர்ந்து கொண்டே போகி­றது.

இனி பிரேதப் பரி­சோ­தனை அறிக்கை எதைத் தெரி­விக்­கி­றது எனப் பார்ப்போம். திரு­கோ­ண­மலை பொது வைத்­தி­ய­சாலை சட்­ட­வைத்­திய அதி­காரி டபிள்யூ.ஆர்.கே.எஸ். ராஜபக் ஷவே மேற்­படி சிறு­வனின் பிரேத பரி­சோ­த­னை­களை செய்துள்ளார்.

அவ­ருடன் தொலை­பே­சியில் தொடர்பு கொண்டு வின­வி­ய­போது சிறு­வனின் மரணம் சந்­தே­கத்­துக்கு இட­மா­ன­துதான் இயற்­கை­யாக ஏற்­பட்ட மர­ண­மாக இருக்க முடி­யாது.

மர­ணத்­துக்­கான கார­ணங்­களை மருத்­துவ முறையில் பரி­சோ­த­னைக்கு உட்­ப­டுத்­தப்­பட்டு வரு­கி­றது. ஆதா­ரங்­களை பரி­சீ­லித்து வரு­கிறோம்.

உரிய காலத்தில் மருத்­துவ அறிக்கை வழங்­கப்­ப­டு­மென சுருக்­க­மாக தெரி­வித்தார். நீரில் மூழ்கியமையால் ஏற்பட்ட மூச்சுத் திணறலே மரணத்துக்கு காரணம் என்று தற்போது தெரியவந்துள்ளது.

சிறுவனின் ஊரவர்கள் சிலர் இப்படியொரு சந்தேகத்தையும் வெளியிட்டார்கள். சிறுவன் உயிருடன் கல்லில் கட்டி கிணற்றில் இறக்கப்பட்டிருக்கலாம். அதனால் அவன் மூச்சுத் திணறி இறந்திருக்கலாம்.

இல்லையாயின் அரைகுறை உயிருடன் கிணற்றுக்குள் போடப்பட்டிருக்கலாம். ஆழமான கிணறு அவனுக்கு எமனாக மாறியிருக்கலாமென பல்வேறு சந்தேகங்களைத் தெரிவிக்கின்றனர்.

பொதுவாகவே மீள்குடியேறிய மக்கள் பயத்துடனும் பீதியுடனுமே இருந்து கொண்டிருக்கிறார்கள் என்பதே நிதர்சனம். மீள்குடியேறிய இடத்திலிருந்து தற்பொழுது இயங்கி வரும் பாடசாலைகளுக்கு நூற்றுக் கணக்கான மாணவ மாணவிகள் நடந்தே சென்று கொண்டிருக்கிறார்கள்.

எங்கள் பிள்ளைகளுக்கு மீண்டுமொரு ஆபத்து இப்படி ஏற்பட்டு விடக்கூடாது என அஞ்சுகின்றனர். எப்படியிருந்த போதிலும் இச்சிறுவனின் மரணம் மூதூரை பீதி கொள்ள வைத்திருக்கிறது என்பதேயுண்மை.

பாடசாலைக்கு இந்தப் பாலகன் போய் மூன்று வாரம் கூட ஆகாத நிலையில் இவனின் மரணம் சோகத்தையும் பீதியையும் சந்தேகங்களையும் உருவாக்கியுள்ளது என்பதேயுண்மை.

-திரு­மலை நவம்-

Share.
Leave A Reply