சீனாவில் உள்ள பௌத்த விகாரை ஒன்றில் துறவியின் இறந்த உடல் தங்க முலாம் பூசபட்டு பொதுமக்களின் பார்வைக்காக வைக்கப்பட்டுள்ளது. தென்கிழக்கு சீனாவின் மலை மேல் உள்ள நகரம் க்வான்சவ்.

இங்கு சோங்பு என்ற பௌத்த விகாரை ஒன்றுள்ளது. இந்த விகாரையில் தனது 94 வயது வரை சேவை செய்த பௌத்த துறவி பூ ஹ_வ் 2012 ஆம் ஆண்டு காலமானார்.

3012FD7800000578-0-image-m-6_1452595128671Fu Hou died in 2012 after spending most of his life at the Chongfu Temple

இவர் இந்த விகாரையில் தனது 17 வயதில் பௌத்த மத பயிற்சியை தொடங்கினார். 2 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் இந்தியாவில் இருந்து கொண்டுவரப்பட்ட பௌத்த மதத்தை மற்றவர்கள் தழுவுவதற்கு ஒரு முன்மாதிரியாக இருந்துள்ளார்.

பூ ஹ_வ் மரணத்தையடுத்து பௌத்த விகாரை நிர்வாகம் அவரது உடலை உடகார்ந்த நிலையில் ஒரு மண்பானையில் வைத்திருந்தது.

3 வருடங்களுக்கு, பிறகு அந்த மண்பானையை திறந்து பார்த்த போது பௌத்த பிக்குவின் உடல் அப்படியே இருந்தது.

மேலும் அவரது தோல் உலர்ந்த நிலையில் இருந்தது.பின்னர் உடலை மதுவால் கழுவி துணியால் சுற்றி பின்னர் தங்க முலாம் பூசபட்டுள்ளது.

தற்போது இந்த சிலையை திருடர்களிடம் இருந்து பாதுகாக்க கண்ணாடி பெட்டியில் வைக்கபட்டுள்ளது.

China Mummified MonkChina Mummified MonkChina Mummified MonkChina Mummified Monk

Share.
Leave A Reply