வீட்டில் யாரும் இல்லாத சமயத்தில், அத்துமீறி நுழைந்து அவ்வீட்டிலிருந்த பாடசாலை மாணவியொருவரை துஷ்பிரயோகம் செய்வதற்கு முயன்ற ஒருவரின் நாக்கை மாணவி ஒருவர் துண்டாடியுள்ளார்.
குறித்த சம்பவம் மாவத்தகம பகுதியில் இடம்பெற்றுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மேலும், நாக்கின் ஒரு துண்டை கடித்தெடுத்த குறித்த மாணவி, பெற்றோருடன் நாக்குத் துண்டை எடுத்துக் கொண்டு சென்று பொலிஸில் ஒப்படைத்துள்ளார்.
இதனடிப்படையில் வாக்குமூலத்தை பதிவு செய்த பொலிஸார், நாக்கின் ஒருதுண்டை இழந்த நபரை இன்னும் கண்டறிய முடிவில்லை என்றும் தெரிவித்துள்ளனர்.
அந்த நாக்குத் துண்டை வைத்தியாலையில் பாதுகாப்புடன் ஒப்படைக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
இந்த சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை மாவத்தகம பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.