அமெரிக்காவில் North Western பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் மனிதனில் கருத்தரிக்கும்போது ஒளிச்சுடர்கள் உருவாவதை அண்மையில் அவதானித்து உள்ளனர்.
எல்லா உயிரியல் செயற்பாடுகளும் விந்து முட்டையுடன் இணையும்போதே ஆரம்பிக்கின்றன.
இக்கண்டுபிடிப்பானது மருத்துவ உலகில் மிகவும் முக்கியமானதாக கருதப்படுகின்றது. செயற்கைமுறைக் கருத்தரிப்பின் போது ஆரோக்கியமான கருவினைத் தெரிவு செய்ய கருவுறும்போது உருவாகும் ஒளியில் பிரகாசம் கருத்தில் எடுக்கப்படுகின்றது.
கூடிய பிரகாசமான ஒளியினை வெளிவிடும் கரு மிகவும் ஆரோக்கியமானதாக இருக்கும். இது செயற்கை முறைக் கருத்தரிப்பில் தற்போது ஏற்படும் 50% பலனின்மையினை நிவர்த்தி செய்யும்.
அடுத்ததாக கருக்கலைப்பு தவறானது என்பதும் சமய ரீதியில் நோக்க வைக்கும்.
கருவுருவாகும்போது ஒளிச்சுடர் உருவாவது விந்து சுரோணிதத்துடன் (முட்டை) இணையும்போது சுரோணித்தினுள் செல்லும் கல்சியம் அயன்களின் செறிவு சுரோணிதத்தின் உள்ளிருந்து நாக (zn) அயன்களை வெளியே பாய்ச்சுகின்றது.
இவை ஒளிச்சுடர்கள் உருவாக ஏதுவாக அமைகின்றன. ஒளிச்சுடர்களின் உருவாக்கத்தினபோது ஐதரசன், ஹீலியம் ஆகிய அணுக்கள் உருவாகின்றன. இவையே உயிரின் முதல் அணுக்களாக அமைகின்றன.
கரு உருவாகும்போது உள்ள ஒண்சுடரினை மனிதரில் மட்டுமல்லாது ஏனைய உயிரினங்களிலும் விஞ்ஞானிகள் அவதானித்து உள்ளனர்.
இவை எமது ஆன்மீக சிந்தனையை மிகவும் கெட்டியாகக் கொள்ள வைக்கின்றன.
உடம்பு உருவாதலைத் திருமூலர் பின்வருமாறு குறிப்பிடுகின்றார்.
“சுக்கில நாடியில் தோன்றிய வெள்ளியும்
அக்கிர மத்தே தோன்று மவ் வியோனியும்
புக்கிடும் எண்விரல் புறப்பட்டு நால்விரல்
அக்கரம் எட்டும் எண் சாணது வாகுமே”.
(திருமந்திரம் 464)
சுக்கில நாடியில் தோன்றிய வெள்ளியும் என கரு உருவாகும்போது தெரியும் ஒளியினை இன்றைய விஞ்ஞானிகள் the dim after glow of that seminal light எனவும், Genesis in cosmic microwave background எனவும் விபரிக்கின்றனர்.
உண்மையில் ஆத்மாவின் பௌதீக உயிரியல் பரிமாணத்தை சிந்திப்பவர்களுக்கு இக்கண்டுபிடிப்பு ஒரு திறவுகோலாக அமையும். ஆனால் இவை யாவும் சைவசித்தாந்த உண்மைகளாக எமது தெய்வத்தமிழில் உள்ளன.
“தௌ்ளத் தெளிந்தார்க்குச் சீவன் சிவலிங்கம்” என்ற திருமூலரின் வாசகங்கள் மெய்யுணர்வை எமக்கு ஊட்டுகின்றன. இதனையே இன்றைய விஞ்ஞானமும் எடுத்துக் காட்டுகின்றது.
மருத்துவர் சி.யமுனாநந்தா