மேஜர் ஜெனரல் சுமித் மானவடு மரணமான செய்தியைக் கேள்வியுள்ள சிறிலங்காவின் முன்னாள் ஆட்சியாளர் மகிந்த ராஜபக்ச உடனடியாக, அவரது வீட்டுக்குச் சென்று துக்கம் விசாரித்துள்ளார்.
சிறிலங்கா இராணுவத்தின் பீரங்கிப் படைப்பிரிவுத் தளபதியான மேஜர் ஜெனரல் சுமித் மானவடு, நேற்றுமுன்தினம் மரக்குற்றியொன்று தலையில் வீழ்ந்து படுகாயமடைந்து, கொழும்பு தேசிய மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று காலை மரணமானார்.
இந்தச் சம்பவத்தைக் கேள்வியுற்றதும், முன்னாள் ஆட்சியாளர் மகிந்த ராஜபக்ச, மேஜர் ஜெனரல் மானவடுவின் இல்லத்துக்குச் சென்று, குடும்பத்தினருடன் துக்கத்தைப் பகிர்ந்து கொண்டார்.
2010ஆம் ஆண்டு அதிபர் தேர்தல் முடிந்ததும், அதில் எதிரணி வேட்பாளராக மகிந்த ராஜபக்சவை எதிர்த்துப் போட்டியிட்ட முன்னாள் இராணுவத்தளபதி சரத் பொன்சேகாவை, கைது செய்யும் நடவடிக்கைக்கு, மேஜர் ஜெனரல் மானவடுவே தலைமை தாங்கியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
மேஜர் ஜெனரல் சுமித் மானவடு உயிரிழந்தார்
அவர் தனக்கு சொந்தமான காணியொன்றில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்த வேளையில் பலகை விழுந்து திடீர் விபத்துள்ளாகி இருந்தார்.
இந்நிலையில் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று அதிகாலை உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.