தந்தையின் இறுதிச் சடங்கில் கலந்துகொள்வதற்காக வெளிநாட்டிலிருந்து வந்த பெண்ணொருவர் நேரடியாக மரண வீட்டுக்கு செல்லாமல் அழகு நிலையமொன்றுக்கு சென்று பேஷியல் மற்றும் சிகை அலங்கரிப்பு செய்துள்ளமை பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

இச்சம்பவம் கண்டியில் இடம்பெற்றுள்ளது.

சம்பவம் தொடர்பில் மேலும் தெரிய வருவதாவது,

அசலக பிரதேசத்தைச் சேர்ந்த குறித்த பெண்ணின் தந்தை உயிரிழந்துள்ளார். இதனையடுத்து தந்தையின் மரணச் சடங்கில் கலந்துகொள்வதற்காக இலங்கை கட்டுநாயக்க விமானநிலையத்தை வந்தடைந்த பெண், தனது வீட்டுக்கு செல்லாமல் நேரடியாக கண்டியில் உள்ள அழகு நிலையமொன்று சென்றுள்ளார்.

அழகு நிலைய பெண்ணிடம், தனக்கு மிக அவசரமாக பேஷியல் மற்றும் சிகை அலங்காரம்  செய்யவேண்டுமெனவும் எவ்வளவு பணம் என்றாலும் தருவதாகவும் கூறியுள்ளார்.

எதற்காக இவ்வளவு பதற்றம் என அழகு நிலையப் பெண் கேட்டதையடுத்து வீட்டில் மரண சடங்கு உள்ளதாகவும் தான் அதற்கு உடனடியாக செல்ல வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.

மேலும் உயிரிழந்தவர் தனது தந்தை எனவும் கூரியதையடுத்து அழகு நிலைய பெண் அதிர்ச்சியடைந்துள்ளார்.

Share.
Leave A Reply