இந்துமதத் தலை­வர்­களை கொலை செய் தால், கை நிறைய பணம், தென் ஆபி­ரிக்­காவில் தொழில் வாய்ப்பு வழங்க மும்பை தாதா தாவூத் இப்­ராஹிம் சதித் திட்டம் தீட்­டிய தகவல் அம்­ப­ல­மாகி உள்­ளது.

கடந்த ஆண்டு நவம்பர் 2-ஆம் திகதி குஜ­ராத்தில் இந்து அமைப்பை சேர்ந்த பரூச் ஷிரிஷ் பன்­காலி, பிரக்னேஷ் மிஸ்­திரி ஆகிய 2 பேரை மும்பை தாதா தாவூத் இப்­ரா­ஹிமின் ஆட்கள் சுட்டுக் கொன்­றனர்.

இதில் தொடர்­பு­டைய 10 பேரை கைது செய்து விசா­ரணை நடத்­தி­யதில், 1993 ஆம் ஆண்டு மும்பை தொடர் குண்­டு­வெ­டிப்பு வழக்கில் யாகூப் மேமனை தூக்­கி­லிட்­ட­தற்கு பழிக்குப் பழி­யாக 2 பேரை கொலை செய்­த­தாக கூறி­யுள்­ளனர்.

எனினும் தேசிய புல­னாய்வு முகாமை (என்­.ஐ.ஏ) அதி­கா­ரிகள், கைதான தாவூத் இப்­ரா­ஹமின் ‘டி கம்­பெனி’ (தாவூத்தின் திரை­

ம­றைவு வேலை­களை குறிப்பது) ஆட்­க­ளிடம் தீவிர விசா­ரணை நடத்­தி­யதில் பல திடுக்­கிடும் தக­வல்கள் வெளி­யாகி உள்­ளன. பிர­தமர் மோடி அர­சுக்கு அவப்­பெயர் ஏற்­ப­டுத்­தவும்,  இந்­தி­யாவில் மதக்­க­ல­வ­ரத்தை   தூண்டி விடவும் தாவூத் சதி திட்டம் தீட்டி உள்­ளதும், அந்த தீவி­ர­வாத செயல்­களில் ஈடு­ப­டு­ப­வர்­க­ளுக்கு கை நிறைய பணம், தென் ஆ­பிரிக்­காவில் வேலை தரு­வ­தா­கவும் ஆசை காட்டி உள்­ளனர்.

குறிப்­பாக பாகிஸ்­தானை சேர்ந்த ஜாவேத் சிக்னா, தென் ஆ­பி­ரிக்­காவின் ஜஹித் மியான் என்­கிற ஜாவோ இரு­வ­ரையும் தாவூத் இப்ராஹிமின் ‘டி- கம்­பெனிக்காக களமிறக்கியமை தெரியவந்துள்ளது.

இதற்­காக ரூ.50 லட்சம் குஜ­ராத்­துக்கு ஹவாலா மூலம் வழங்­கப்­பட்­டுள்­ளது.

அவர்­க­ளுக்கு துப்­பாக்­கியும் தரப்­பட்­டுள்­ளது. உள்ளூர் தலை­வர்கள் 15 பேரின் பெயர் பட்­டி­ய­லையும் அவர்கள் தயா­ரித்­துள்­ளனர்.

அவர்­களை கொல்­வ­தற்கு சதித் திட்டம் தீட்டி செயற்படுத்துவதற்கு முன்னர் என்.ஐ.ஏ. அதிகாரிகள் தாவூத்தின் ஆட்களை கைது செய்துள்ளனர்.

Share.
Leave A Reply