பிரான்ஸ் நாட்டில் இளம்பெண் ஒருவர் தான் தற்கொலை செய்துக்கொள்வதை நேரடியாக ’லைவ்’ வீடியோ எடுத்து சமூக வலைத்தளங்களில் வெளியிட்டுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பாரீஸ் நகரை சேர்ந்த 19 வயதான இளம்பெண் ஒருவர் சமூக வலைத்தளமான டுவிட்டரை பயன்படுத்தி வந்துள்ளார்.
சில தினங்களுக்கு முன்னர் ‘நண்பர்களே, ஒரு முக்கியமான காட்சியை நேரடியாக வீடியோ எடுத்து வெளியிடப்போகிறேன். காத்திருங்கள்’ என்ற பரபரப்பு பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
இந்நிலையில், கடந்த செவ்வாய்க்கிழமை பிற்பகல் நேரத்தில் தனது நெருங்கிய நண்பர்களுக்கு குறுஞ்செய்தி அனுப்பிய அப்பெண் புறநகர் பாரீஸில் உள்ள Egly என்ற ரயில் நிலையத்திற்கு சென்றுள்ளார்.
பின்னர், தனது கைப்பேசியை எடுத்து டுவிட்டர் மூலமாக live வீடியா எடுக்க பயன்படுத்தப்படும் Periscope என்ற அப்ளிகேஷனை இயக்கி படம் பிடித்துள்ளார்.
அப்போது, ‘ஒரு காமக்கொடூரன் என் கற்பை சூறையாடி விட்டான். என்னால் இந்த மன உளைச்சலை தாங்க முடியவில்லை. கற்பை இழந்து என்னால் வாழவும் முடியவில்லை.
எனவே, எனது வாழ்க்கையை நானே முடித்துக்கொள்கிறேன். இந்த வீடியோவை பார்க்கும் பொலிசார் அந்த காமக் கொடூரனை கைது செய்து கடும் தண்டனை வழங்க வேண்டும்’ எனக் கோரிக்கை விடுத்துவிட்டு தன்னை கற்பழித்தவன் யார் என்ற தகவலையும் கொடுத்துள்ளார்.
அப்போது, ரயில் நிலையத்திற்குள் விரைந்து வந்த RER C என்ற ரயில் மீது பாய்ந்து குதிக்கும் வரை வீடியோவில் பதிவாகியுள்ளது.
டுவிட்டரில் லைவ்வாக வெளியான இந்த வீடியோ பரபரப்பாக பகிரப்பட்டுள்ளது. ஆனால், ரயில் முன்னால் குதித்த அப்பெண் அங்கேயே உடல் நசுங்கி உயிரிழந்துள்ளார்.
பொதுமக்களை பெரும் அதிர்ச்சியில் ஆழ்த்திய இந்த வீடியோ காட்சியை டுவிட்டர் உடனடியாக நீக்கியுள்ளது.
இந்த சம்பவம் குறித்து பொலிசார் பேசியபோது, தற்கொலை செய்துக்கொண்ட பெண் தகுந்த ஆதாரங்களையும் அளித்துள்ளார். ஆனால், இது ஒரு சோகமான முடிவு.
பெண் கொடுத்த தகவல்களின் அடிப்படையில், அவரை கற்பழித்த நபரை விரைவில் கைது செய்து நீதிமன்றத்தின் முன் நிறுத்துவோம் எனக் கூறியுள்ளனர்.