கனடாவைச் சேர்ந்த தம்பதியொன்று திருமணமாகி ஒரு வருடமாவதற்கு ஒரு மாத காலம் இருந்த நிலையில் ஒரேசமயத்தில் ஒரே உருவத் தோற்றத்தைக் கொண்ட 4 பெண் குழந்தைகளுக்கு பெற்றோராகியுள்ளது.
கடந்த வெள்ளிக்கிழமை இடம்பெற்ற மேற்படி குழந்தைகளின் பிரசவம் குறித்து சர்வதேச ஊடகங்கள் வியாழக்கிழமை செய்திகளை வெளியிட்டுள்ளன.
இவ்வாறு குழந்தைகள் பிரசவமாவது 15 மில்லியனுக்கு ஒன்று என இடம்பெறும் அபூர்வ நிகழ்வாகும்.
அல்போர்ட்டா பிராந்தியத்திலுள்ள எட்மொன்டன் நகரைச் சேர்ந்த பெதனி மற்றும் ரிம் வெப் என்ற ஜோடிக்கே அவர்களுக்கு திருமணமாகி ஒரு வருட காலமாவதற்கு முன்னர் 4 குழந்தைகள் ஒரேசமயத்தில் கருத்தரித்து பிறந்துள்ளன.
அவர்கள் இதற்காக இனவிருத்தி சிகி ச்சை எதனையும் மேற்கொள்ளவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. பிறந்த குழந்தைகளுக்கு அபிகெயில், எமிலி, கிரேஸ் மற்றும் மக்கேலா என பெயர்கள் சூட்டப்பட்டுள்ளன.