உகண்டாவுக்கான பயணத்தை முடித்துக் கொண்டு முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இன்று (15) காலை நாடு திரும்பியுள்ளார்.
இன்று காலை 8.50 மணியளவில் எமிரேட்ஸ் விமான சேவை நிறுவனத்துக்குச் சொந்தமான விமானத்தில் நாட்டை வந்தடைந்துள்ளார்.
அவரது உகண்டா விஜயத்தின் போது கம்பாலா நகரில் உள்ள “கெபே சிலோன்” எனும் இலங்கை வியாபாரிக்குச் சொந்தமான தேனீர் கடையொன்றில் தேனீர் அருந்தியுள்ளார்.
13 ஆம் திகதியன்று இவர் இந்த கடையில் தனது காலை உணவை பரிமாறியுள்ளதாகவும் அவரது ஊடகப் பிரிவு குறிப்பிட்டுள்ளது.