கொழும்பு வடக்கை அச்­சு­றுத்தி வந்த பிர­பல பாதாள உலகக் குழுவின் தலை­வ­னான ஆமி சம்பத் பொலிஸ் விசேட அதி­ர­டிப்­ப­டை­யி­னரால் கைது செய்­யப்பட்டு மேல­திக விசா­ர­ணை­க­ளுக்­காக பயங்­க­ர­வாத புல­னாய்வுப் பிரி­வி­ன­ரிடம் ஒப்­ப­டைக்­கப்­பட்­டுள்ளார்.

பொலிஸ் மா அதிபர் பூஜித ஜய­சுந்­த­ரவின் உத்­த­ர­வுக்கு அமைய மேல­திக விசா­ர­ணை­களை முன்­னெ­டுக்கும் முக­மாக ஆமி சம்பத் இவ்வாறு  விஷேட அதி­ர­டிப்­ப­டையின் கட்­டளை தள­பதி பிரதிப் பொலிஸ் மா அதிபர் ஜே.கே.ஆர்.ஏ.பெரே­ரேவின் ஆலோ­ச­னைக்கு அமைய பயங்­க­ர­வாத புல­னாய்வுப் பிரி­வி­ன­ரிடம் ஒப்­ப­டைக்­கப்­பட்­டுள்ளார்.

ஆமி சம்பத் எனப்­படும் சாமர பொன்­சேகா (35 வயது), அவ­ருடன் கைது செய்­யப்­பட்ட அவ­ரது மனைவி சஞ்­ஜீ­வனீ ஜீவந்தி, ஆமி சம்­பத்தின் உத­வி­யா­ள­ரான 29 வய­து­டைய பிரதீப் குமார சுதர்­ஷன ஆகி­யோரே இவ்­வாறு விஷேட அதி­ர­டிப்­ப­டை­யி­னரால் பயங்­க­ர­வாத புல­னாய்வுப் பிரி­வி­ன­ரிடம் ஒப்­ப­டைக்­கப்ப்ட்­ட­வர்­க­ளாவர்.

நேற்று முன் தினம் மாலை கொம்­பனி வீதியில் உள்ள பிர­பல தனியார் மருத்­துவ மனைக்கு தனது மனைவி, உத­வி­யாளர் சகிதம் ஆமி சம்பத் வருகை தந்­த­தை­ய­டுத்து விஷேட அதி­ர­டிப்­ப­டையின் உளவுப் பிரி­வுக்கு கிடைத்த ரக­சிய தக­வலின் படி ஆமி சம்பத் கைது செய்யப்பட்­டி­ருந்தார்.

கடந்த 2015 பொதுத் தேர்­தலின் போது கொட்­டாஞ்ச்­சேனை பொலிஸ் பிரிவின் புளூ­மெண்டல் பகு­தியில் இடம்­பெற்ற துப்­பாக்கிச் சூட்டில் பெண் ஒருவர் கொல்­லப்­பட்ட விவ­கா­ரத்­துடன் தொடர்பு உள்­ள­தாக ஆமி சம்பத் தொடர்பில் குற்றச் சாட்டு உள்­ளது.

அத்­துடன் அவ­ரது எதிரி பாதாள உலகக் குழு­வான தெமட்­ட­கொட சமிந்­தவை மாளி­கா­வத்தை முஸ்லிம் மைய­வாடி பகு­தியில் வைத்து சிறைச்சாலை பஸ் வண்டி மீது தாக்­குதல் நடத்தி கொல்ல முற்­பட்­டமை தொட­ரிலும் ஆமி சம்­பத்தை பொலிஸார் தேடி வந்­தனர்.

இதனை விட பல்­வேறு கொள்ளை, கடத்தல், கொலை கப்பம் கோரல்­க­ளுடன் ஆமி சம்­பத்­துக்கு தொடர்­பி­ருப்­ப­தா­கவும் போதைப் பொருள் வர்த்­த­கத்­திலும் பங்­கி­ருப்­ப­த­கவும் கூறப்­படும் நிலை­யி­லேயே அவை தொடர்பில் பூர­ண­மாக விசா­ரணை செய்யும் பொறுப்பு பயங்­க­ர­வாத புல­னாய்வுப் பிரி­வி­ன­ருக்கு அளிக்­கப்­பட்­டுள்ளது.

பயங்­க­ர­வாத புல­னாய்வுப் பிரி­வுக்கு பொறுப்­பான சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் ரவி சென­வி­ரத்ன, அதன்­ப­ணிப்­பாளர் நாலக டி சில்வா ஆகி­யோரின் மேற்­பார்­வையில் சிறப்பு விசா­ர­ணைகள் ஆரம்­பிக்­கப்பட்­டுள்­ளன.

இத­னி­டையே நேற்று முன் தினம் கைதான ஆமி சம்பத், அவ­ரது மனைவி மற்றும் உத­வி­யா­ள­ரிடம் தொடர்ச்­சி­யான விசா­ர­ணைகள் இடம்­பெ­று­கின்­றன.

நேற்று வரை முன்­னெ­டுக்­கப்பட்ட விசா­ர­ணை­களில் ஆமி சம்­பத்தின் கொட்­டு­கொட, ரஜ­வத்த பகு­தியில் உள்ள வீட்டில் இருந்து 9 மில்லி மீற்றர் கைத்­துப்­பாக்­கி­யொன்றும் 14 தோட்­டாக்­களும் 9 கையடக்கத் தொலைபேசிகளும் கைப்பற்றப்பட்டுள்ளன.

பயங்கரவாத தடை சட்டத்தின் கீழ் ஆமி சம்பத்திடம் தொடர் விசாரணைகள் இடம்பெறும் நிலையில், அவனது தொலைபேசி, வங்கிக்கணக்கு தொடர்பிலும் அவதானம் செலுத்தப்பட்டுள்ளதாக உயர் பொலிஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

Share.
Leave A Reply