மாத்தறை ஊறுபொக்க தலபலாகந்த, தந்தெனிகந்த பிரதேசத்தில் சடலம் ஒன்று நேற்று 12.00 மணியளவில் மீட்கப்பட்டது.
இச்சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது,
கடந்த 13ம் திகதி இரவு மகன் தனது தந்தையின் கழுத்தை நெரித்து கத்தியால் 3 துண்டுகளாக வெட்டி இறப்பர் சீட்டினால் சுற்றி காட்டு செடிகள் நிறைந்த நீரோடை ஒன்றில் எறிந்துள்ளார்.
அதன் பின்னர் துர்நாற்றம் வீசியதையடுத்து, பிரதேசவாசி ஒருவர் சடலம் கிடப்பதை கண்டு கிராமசேவகரின் ஊடாக ஊறுபொக்க பொலிஸ் நிலையத்திற்கு அறிவித்துள்ளனர்.
இதனையடுத்து, சடலம் நேற்று எடுக்கப்பட்டு மரண பரிசோதனைக்காக மாத்தறை வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
இச்சம்பவத்தில் உயிரிழந்தவர் 55 வயதுடைய நான்கு பிள்ளைகளின் தந்தையாகிய யக்காகே ஆரியதாச என்பவராவார்.
தந்தையை கொலை செய்த இவருடைய மகன் சிந்தக குமார என்பவராவார். வயது 28 திருமணமானவர்.இவரை ஊறுபொக்க பொலிஸார் கைது செய்துள்ளனர்.
குடும்ப தகராறினால் இச்சம்பவம் ஏற்பட்டிருக்கலாம் என பொலிஸார் சந்தேகம் வெளியிட்டதுடன், மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.