சுன்னாகம் புகையிரத நிலையத்திற்கு அருகில் இடம்பெற்ற புகையிரத விபத்தில் வயோதிபர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

கொழும்பில் இருந்து காங்கேசன்துறை நோக்கி சென்று கொண்டிருந்த புகையிரதம் மோதியே குறித்த வயோதிபர் உயிரிழந்துள்ளார்.

சுன்னாகம் புகையிரத நிலையத்திற்கு அருகில் இருந்த பாதுகாப்பான புகையிரத கடவையிலையே இவ்விபத்து இடம்பெற்றுள்ளது.

புகையிரதம் வருவதற்காக குறித்த கடவை மூடப்பட்டு இருந்தபோதிலும் கடவையின் கீழால் குனிந்து சென்று புகையிரத கடவையை கடக்க முற்பட்ட போதே குறித்த விபத்து இடம்பெற்றதாக தெரிவிக்கப்படுகின்றது.

விபத்து சம்பவம் தொடர்பில் சுன்னாகம் பொலிசார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

Share.
Leave A Reply