யாழ்.அளவெட்டி பகுதியில் பாடசா லை மாணவன் ஒருவன் கராத்தே பழக தந்தை அனுமதிகொடுக்காமையினால் தூக்கிட்ட நிலையில் மீட்கப்பட்டு யாழ்.போதனா வைத் தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் இன்றைய தினம் குறி த்த சிறுவன்உயிரிழந்துள்ளான்.
கடந்த 16ம் திகதி அளவெட்டி வடக்கு அளவெட்டியை சேர்ந்த யதீஸ் தேனியன்(வயது 11)என்ற பாடசா லை மாணவன் பாடசாலையில் கராத்தே பழக அனுமதி கேட்டு தந்தையிடம்அனுமதி கேட்டுள்ளான்.
எனினும் தந்தை அனுமதி கொடுக்காத நிலையில் மறுநாள் தாய்20 ரூபாய் பணம் கொடுத்து சிறுவனை பாடசாலைக்கு அனுப்பிவைத்துள்ளார்.
இந்நிலையில் குறித்த சிறுவன் தாய் கொடுத்த பணத்தினை வீதியில் எறிந்துவிட்டுசென்றுள்ளான். இதனை சிறுவனின் தமையன் பார்த்துவிட்டு வந்து தாயிடம்கூறியதையடுத்து சிறுவனை தாய் மிரட்டியுள்ளார்.
இதனையடுத்து வீட்டிற்குபின்புறம் உள்ள ஆட்டு கொட்டிலில் வாழை குலை கட்டும் கயிற்றில் சிறுவன்தூங்கி தற் கொலைக்கு முயன்றுள்ளான்.
இதனை சிறுவனின் தமையன் கண்டு கூச்சலிட்டதைதொடர்ந்து சிறுவன் மீட்கப்பட்டு தெல்லிப்பழை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட் டு யாழ்.போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்ட நிலையில் இன்றைய தினம் காலைகுறித்த சி றுவன் உயிரிழந்துள்ளான்.
குறித்த மரணம் தொடர்பான மரண விசாரணையினையாழ்.போதனா வைத்தியசாலையின் திடீர் மரண விசாரணை அதிகாரி ந.பிறேம்குமார்மேற்கொண்டதன் பின்னர் சிறுவனின் உடல் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
உடுப்பிட்டியில் வயோதிபப் பெண் கழுத்து வெட்டிக் கொலை
உடுப்பிட்டி கிழக்குப் பகுதியில் வீட்டில் கணவருடன் தனியாக வாழ்ந்து வந்த வயோதிபப் பெண் இனம் தெரியாத நபரினால் கழுத்து வெட்டிக் கொலை செய்யப்பட்டள்ளார்.
இந்தச் சம்பவம் நேற்றிரவு இரவு இடம்பெற்றுள்ளது.
உடுப்பிட்டி கிழக்குப் பகுதியைச் சேர்ந்த 64 வயதுடைய சுப்பிரமணியம்.அசுபதி என்ற வயோதிபப் பெண்ணே இனம் தெரியாத நபரினால் கழுத்து வெட்டிக் கொலைசெய்யப்பட்டுள்ளார்.
நேற்றிரவு உணவை உண்ட பின் கைகழுவச் சென்ற வேளை பின்னால் வந்த இனந்தெரியாத நபரினால் இவரின் கழுத்து அறுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மேலும் உயிரிழந்தவர்களின் பிள்ளைகள், வெளிநாட்டில் வசித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்தச் சம்பவம் குறித்து வல்வெட்டித்துறைப் பொலிஸார் மேலதிக விசாரணைகளைப் மேற்கொண்டு வருகின்றனர்.