இது­வரை வர­லட்­சுமி நடித்­தி­ருப்­பது மொத்­த­மாக மூன்றே படங்­கள்தான். அதிலும் ஒன்று இன்­னமும் வெளி­வ­ர­வில்லை. ஆனாலும், வர­லட்­சுமி தமிழின் தவிர்க்­க­மு­டி­யாத நடிகை. இந்­நி­லையை எட்­டி­யி­ருப்­பது, அவர் சரத்­கு­மாரின் மகள் என்­பதால் மட்டும் அல்ல.

தன்­னு­டைய தனித்­து­வ­மான உழைப்பால். சரத்­கு­மாரின் மகள் என்­கிற விசிட்டிங் கார்டை பயன்­ப­டுத்தி மட்­டுமே அவர் சினி­மாவில் நுழைந்­தி­ருந்தால் பத்­தொன்­பது வய­தி­லேயே சினி­மாவில் அறி­மு­க­மாகி பத்து வரு­டத்­துக்குள் ஐம்­பது படங்­க­ளி­லா­வது நடித்து முடித்திருப்பார்.

ஆனால், அவர் தன் உழைப்­பாலும், திற­மை­யாலும் மட்­டுமே மேலே வர­வேண்டும் என்று நினைத்தார். ஆரம்­பத்தில் அவ­ருக்கு சினி­மாவில் நடிக்க வேண்டும் என்­கிற ஆசை­யெல்லாம் இல்லை.

மேற்­கத்­திய நட­னத்தில் பெயர் சொல்­லும்­ப­டி­யான இடத்­துக்கு வர­வேண்டும் என்றே நினைத்தார். அதை நோக்­கியே தன் பய­ணத்­தையும் அமைத்துக் கொண்டார்.

ஒரு கட்­டத்தில் நடி­கை­யாக வேண்டும் என்று முடிவு செய்த உட­னேயே, தன் அப்­பா­விடம், “எனக்­காக ஒரு படம் எடுங்கள்.

இன்­னாரை ஹீரோ­வாக போடுங்கள்” என்­று­கூட  கேட்­டி­ருக்­கலாம். அதையும் நிச்­சயம் சரத்­குமார் செய்து கொடுத்­தி­ருப்பார்.

ஆனால், வர­லட்­சு­மியோ அனு­பம்­கேரின் நடிப்பு பயிற்சிக் கல்­லூ­ரியில் சேர்ந்து முறை­யாக நடிப்பு பயின்றார். எல்லா புது­முக நடி­கை­க­ளையும் போல தனக்­கான வாய்ப்­புக்­காக காத்து நின்றார்.

Podaa_Podi_Movie_Team_Press_Meet_03

நீண்ட காத்­தி­ருப்­புக்குப் பின்பே ‘போடா போடி’ படத்தில் அறி­மு­க­மானார். நடனம் தொடர்­பான கதை­யம்சம் கொண்ட அந்தப் படத்­துக்கு வர­லட்­சுமி ‘நச்’­சென பொருந்­தினார். தன்­னு­டைய நடிப்புத் திற­மை­யையும் வெளிப்­ப­டுத்­தினார்.

அடுத்த வாய்ப்­புக்­காக அவ­ச­ரப்­ப­ட­வில்லை. கமர்­ஷியல் ஹீரோ­யி­னா­கவும் தன்னால் மிளி­ர­மு­டியும் என்­பதை வெளிப்­ப­டுத்த நல்ல வாய்ப்பை எதிர்­பார்த்துக் காத்­தி­ருந்தார். அதுதான் ‘மத­க­ஜ­ராஜா’.

கிளா­மரில் அவர் பட்­டையைக் கிளப்­பி­யி­ருக்கும் இப்­படம் துர­தி­ருஷ்­ட­வ­ச­மாக இந்த கட்­டுரை எழு­தப்­படும் நொடி­வரை வெளி­வ­ர­வில்லை. அப்­ப­டத்தின் நாயகன் விஷால் முயற்­சியால் விரைவில் வெளி­வ­ரலாம் என்­கி­றார்கள்.

இப்­படம் வெளி­வ­ரா­ததால் சோர்ந்து போகாமல் தன்­னு­டைய நடிப்­புக்கு தீனி போடும் வாய்ப்­புக்கு மீண்டும் காத்­தி­ருந்தார். கிடைத்­தது. அதுதான் பாலா இயக்­கிய ‘தாரை தப்­பட்டை’.

வர­லட்­சுமி, இப்­ப­டத்தில் நடித்­தி­ருந்த ‘சூறா­வளி’ கதா­பாத்­திரம், தமிழ் சினி­மாவின் சாத­னை­களில் ஒன்­றாக விமர்­ச­கர்­களால் மதிப்­பி­டப்­ப­டு­கி­றது. தேசிய விரு­துக்குத் தகு­தி­யான நடிப்பை வர­லட்­சுமி வழங்­கி­யி­ருந்தார்.

நடிப்பு தன் ரத்­தத்தில் ஊறி­யி­ருக்­கி­றது என்­பதை கவ­னப்­ப­டுத்தி அப்­பா­வுக்கு பெருமை சேர்க்கும் மக­ளானார்.

அச்­சு­அ­ச­லாக கிரா­மப்­புற நடன மாதுவின் உடல்­மொ­ழியை எவ்­வித தயக்­கங்­களும் இன்றி திரையில் காட்­டினார்.

16912varuஇந்தப் பாத்­தி­ரத்தை ஏற்றால் தன்­னு­டைய இமேஜ் போய்­வி­டுமோ, அடுத்த வாய்ப்பு கிடைக்­குமோ என்­றெல்லாம் அவர் கவ­லைப்­ப­டவே இல்லை.

வர­லட்­சு­மியின் தனிப்­பட்ட வாழ்க்கை, ஊட­கங்­க­ளுக்கு புதிர்­வி­ளை­யாட்டு. அவர் விஷாலை காத­லிக்­கிறார், அவ­ரோடு லீவிங்-­டு­கெதர் முறையில் வாழ்­கிறார் என்­றெல்லாம் சர்ச்­சைகள் கச்சைக் கட்டிக் கொண்­டி­ருக்­கின்­றன.

அவர்கள் இரு­வரும் நல்ல நண்­பர்கள் என்­பதில் நமக்கு எவ்­வித சந்­தே­க­மு­மில்லை.

நடிகர் சங்கத் தேர்­த­லுக்கு முன்பு விஷாலும், சரத்­கு­மாரும் எதி­ரெதிர் துரு­வங்­க­ளாக நின்­ற­போது, “நான் நியா­யத்தின் பக்கம் நிற்பேன்” என்று தில்­லாக சொன்னார்.

தேர்­த­லின்­போது, “ஒரு மக­ளாக தந்­தைக்கே வாக்­க­ளிப்பேன்” என்று குடும்ப கௌ­ர­வத்­தையும் காப்­பாற்­றினார்.

பாசத்­தையும், நட்­பையும் அவர் நேர்த்­தி­யாக கையாண்ட விதம், தமிழ் சினி­மாவில் பழம் தின்று கொட்டை போட்ட பல­ருக்கும் ஆச்­ச­ரியம்.

வர­லட்­சுமி ஒப்­புக்­கொள்ளப் போகும் அடுத்த படம் என்னவென்பது நம்மைப் போலவே அவருக்கும் இந்த நிமிடம் வரை தெரியாது.

மற்ற முன்னணி நடிகைகளைப் போல, இவரது கால்ஷீட் டயரி எப்போதும் பிஸியாக இருப்பதில்லை. இதற்காக அவர் கவலைப்படவில்லை. எப்போதும் போல பளீர் சிரிப்புடனேயே வலம் வருகிறார். எந்த சமரசத்துக்கும் உட்படாத, தொழில் மீது அளவற்ற பக்தி கொண்டிருக்கும் அரிதான நடிகை இவர்.

Share.
Leave A Reply