இலங்கையில் இப்போது இடம்பெறும் அரசியல் பகுப்பாய்வுகளில் பெரும்பாலானவை எதிர்வரும் ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைப் பேரவை கூட்டத் தொடரில் இடம்பெறப் போகும் இலங்கை பற்றி தீர்மானம் பற்றியதாகவே காணப்படுகின்றன.
அரசாங்கம் இப்போது இரண்டு மாற்று வழிகளை விருத்தி செய்வது பற்றி சிந்தித்து வருகின்றது. ஒன்று இலங்கை அரசாங்கத்திற்கு சார்பான நாடுகளால் ஒரு மாற்றுத் தீர்மானத்தை கொண்டுவரச் செய்வது.
அடுத்தது தென்னாபிரிக்க மாதிரியிலான உண்மை மற்றும் நல்லிணக்க செய்முறையினை சர்வதேச புலனாய்வுக்கு மாற்றீடான ஒரு செய்முறையாக தென்னாபிரிக்காவின் உதவியுடன் விருத்தி செய்தல்.
இவற்றை விட இலங்கையில் வேறு சில விருத்திகளும் இடம்பெற்று வருகின்றன. அவை பற்றிய பகுப்பாய்வு அத்தியாவசியமானவையாகும்.
மத்திய அரசாங்கத்திற்கும் மாகாண சபை நிர்வாகத்திற்கும் இடையிலான உறவுகளும் அவற்றிற்கிடையே அதிகாரங்களைப் பகிர்ந்து கொள்வதும் அவற்றில் முக்கியமானவையாகும். யுத்த குற்றங்கள் பற்றிய குற்றச் சாட்டுக்கு அடிப்படையான காரணம் யுத்தம் ஏற்பட பொறுப்பாயிருந்த அடிப்படை நிலைமைகளாகும்.
சிங்களப் பெரும்பான்மை கொண்ட மத்திய அரசாங்கத்திற்கும் தமிழ் பெரும்பான்மையைக் கொண்ட வட மாகாண சபை மற்றும் கிழக்கு மாகாண சபைக்கும் இடையிலான அதிகாரங்களை பகிர்ந்து கொள்வது தொடர்பிலேயே இப் பிரச்சினைகள் தோற்றமுற்றன.
மாகாண சபை முறையின் கீழான அதிகார பரவலாக்கம் இற்றைக்கு 26 வருடங்களுக்கு முன் அறிமுகம் செய்யப்பட்டிருந்த போதிலும் கடந்த செப்டெம்பர் மாதம் நடைபெற்ற மாகாணசபைத் தேர்தலின் பின்னரே வட மாகாண சபை முதன் முதலாக செயற்பட ஆரம்பித்தது.
அதன் பின்னர் தான் மத்திய அரசாங்கத்திற்கும் மாகாண சபைகளுக்கும் இடையேயான அதிகார பரவலாக்கம் பற்றிய பிரச்சினையும் முன்னணிக்கு வந்திருக்கிறது.
தற்போதைக்கு அது ஒன்றே எதிர்க் கட்சியினால் ஆளப்படும் மாகாண சபையாக இருக்கிறது. ஏனைய எட்டு மாகாண சபைகளும் அரசாங்கத்தினால் கட்டுப்படுத்தப்பட்டும் மேலாதிக்கம் செலுத்தப்பட்டும் வருகின்றன.
வட மாகாண சபையே தனது அதிகாரங்கள் விஸ்தரிக்கப்படல் வேண்டும் என்றும் மத்திய அரசாங்கத்திற்கு ஒரு சில வரையறுக்கப்பட்ட அதிகாரங்களை பகிர்ந்து கொள்ளக் கூட விருப்பமற்றுக் காணப்படுவதால் ஏற்பட்டுள்ள தனது அதிருப்தி காரணமாக சவால் விடுவதாகவும் வட மாகாண சபையே அரசாங்கத்திற்கு எதிரான எதிர்க்கட்சியாக செயற்பட்டு வருகிறது.
இவற்றின காரணமாக வட மாகாண சபையினால் வெளியிடப்படும் கருத்துகள் மத்திய அரசாங்கத்திற்கும் பெரும் சவாலாகக் காணப்படுகின்றன.
வட மாகாண சபை யாழ்ப்பாணத்திற்கும் , இந்தியாவின் தென் பகுதிகளுக்கும் இடையே விமான தொடர்புகளை ஆரம்பிக்கவும் , யாழ்ப்பாண தீபகற்பத்திலிருந்து தென்னிந்தியாவுடன் இணைப்புகளை ஏற்படுத்தும் வகையில் யாழ்ப்பாண துறைமுகத்தை விருத்தி செய்ய வேண்டும் என விடுக்கப்பட்டுள்ள கோரிக்கைகளாகும்.
இக் கோரிக்கைகளை பற்றி மத்திய அரசாங்கம் கூறுகையில், இவை மாகாண சபைகளின் நோக்க எல்லை (Purview)களுக்கு அப்பாற்பட்டவை என வாதிக்கின்றது.
இவ்வாறு ஒரு தரப்பு வெற்றியடைவதாகவும் மற்றைய தரப்பு தோல்வியடைவதுமான சூழ் நிலையில் செயற்படுவதனை விடுத்தும் மத்திய அரசாங்கமும் வட மாகாண சபையும் ஒன்றுக்கொன்று எதிரெதிராக செயற்படுவதனை விடுத்தும் செயற்படும் ஒரு நிலையே ஏற்பட வேண்டும்.
அனைத்து தரப்பும் கூட்டுறவாக இணைந்து செயற்பட்டு தமது இலக்கினை அடைவதே பொருத்தமான வழி. ஆனால், இவ்வாறு செயற்பட வேண்டுமனால் அவர்களுடைய உணர்வுகளிலும் எண்ணங்களிலும் மாற்றம் தேவை. ஒரு நாட்டில் வெளியுறவுகள் நிச்சயமாக மத்திய அரசாங்கத்தின் தனியுரிமை என்பதனை அனைவரும் ஏற்றுக் கொள்வர்.
ஆனால் கொள்கை பற்றிய விவாதங்களில் பங்கேற்று கருத்துக் கூற மாகாண சபைகளுக்கு உரிமை உண்டு. இச் சம்பவம் பொறுத்தும் இது தான் நடைபெற்றிருக்கிறது. வட மாகாணசபை துறைமுகத்தையோ, விமான நிலையத்தையோ நிர்மாணிக்கப் போகவில்லை.
மாறாக மத்திய அரசாங்கத்தை அவ்வாறான வசதிகளை செய்து தருமாறு தான் கோரிக்கை விடுத்துள்ளது. வடக்கு, கிழக்கு மாகாணங்களில் சமூக, பொருளாதார அபிவிருத்தி என்னும் தலைப்பில் இலங்கைப் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த மகா நாட்டில் பல்கலைக்கழக உயர் மட்ட அறிவார்ந்த வர்கள் கலந்து கொண்டு தமது ஆராய்ச்சி முடிவுகளை சமர்ப்பித்த போது இவை பற்றி மத்திய அரசாங்கம் பின்பற்ற வேண்டிய அணுகு முறைகளும் வழிகாட்டல்களும் பற்றி ஆராய்ப்பட்டு கருத்துகள் பகிர்ந்து கொள்ளப்பட்டன.
மூன்று தோல்விகள்
மகா நாட்டின் முக்கிய அம்சம் வட மாகாணசபை முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரனை முதன்மைப் பேச்சாளராக கலந்து கொள்ள அழைப்பு விடுத்திருந்தமையாகும். அந்த மகா நாட்டில் பல்கலைக்கழக புலமைசார் நிபுணர்களே பங்கு கொள்வது சம்பிரதாயமாகும்.
மகா நாட்டில் கருத்து கூறியவர்கள் நன்கு ஆராய்ச்சி செய்ததன் மூலம் பெறப்பட்ட தரவுகள் மற்றும் புள்ளி விபரங்களின் அடிப்படையிலேயே பிரச்சினைகள் பற்றியும் அவற்றிற்கான தீர்வுகள் பற்றியும் யாவற்றையும் முழுமையாக உள்ளடக்கியதாக அபிப்பிராயங்களைத் தெரிவிப்பார்கள்.
மறு புறத்தில் அணுகு முறையில் ஒரு அடிப்படை மாற்றம் ஏற்பட வேண்டும் என்பதற்கான தேவை பற்றிய உரையினை முதலமைச்சர் ஆற்றியிருந்தார்.
நாட்டில் நிலவும் கொள்கை தொடர்பான நிலைமைகளை நன்கு தெரிந்திருந்தமைக்கான சான்றினை அவரின் உரையில் காணக் கூடியதாயிருந்தது. அவர் அப்பட்டமான உண்மையினைக் கூறினார்.
எனினும் அதில் கற்பிக்கும் ஒரு நோக்கம் தென்பட்டதே யொழிய எந்த ஒரு சாராரையும் தாக்கும் எண்ணத்தில் எதனை யும் பேசியதாகத் தெரியவில்லை.
முழு நாட்டினதும் விதியை நிர்ணயிக்கும் ஆட்சி தொடர்பான அடிப்படைப் பிரச்சினைகளைப் பற்றியே அவர் முதன்மையாக தனது உரையில் கருத்துக் கூறினார்.
வட மாகாணம் பொறுத்து அரசாங்கத்தின் அணுகு முறையில் கொள்கை ரீதியாக தோல்வி மூன்று முக்கிய துறைகளில் ஏற்பட்டுள்ளதாகவும் அவற்றின் விளைவுகள் முழு நாட்டிலும் மாத்திரமன்றி சர்வதேச உறவுகளிலும் பெரும் பாதிப்புகளை ஏற்படுத்தியுள்ளதாகவும் கூறினார்.
இலங்கை ஒரு பன்மை வாத சமூகம் என்றும் அதில் வேறுபட்ட மக்கள் வாழ்ந்து வருகின்றனர் என்றும் முதலமைச்சர் விக்னேஸ்வரன் எடுத்துக் கூறினார். அவ்வாறான நிலையில் பெரும்பான்மையினத்தவரது பெறுமானங்களையும் மற்றும் அடையாளங்களையும் மட்டும் கொண்ட தேசத்தை உருவாக்க முனைவது பொருத்தமானதல்ல என்பதனை வற்புறுத்திக் கூறத் தவறவில்லை.
இவ்வாறான கருத்துகளை கூறும் போது அன்றைய நிகழ்ச்சியின் ஆரம்பத்தில் சிங்களத்தில் மாத்திரம் தேசிய கீதத்தினை இசைத்தது பொருத்தமற்ற செயல் என்பதனையும் சுட்டிக்காட்டினார்.
இதன் விளைவாக முதலமைச்சர் தேசிய கீதம் பாடும் போது அம் மொழி அவருடைய மொழி அல்லாததன் காரணமாக தன்னால் மற்றவர்களுடன் இணைந்து கொள்ள முடியாது போனமை பற்றியும் வருத்தத்துடன் எடுத்துக் கூறினார்.
தேசிய கீதத்தை நாட்டின் ஒரு பிரிவைச் சார்ந்த மக்களின் மொழியில் இசைப்பதனை தடை செய்து விட்டு இந் நாட்டில் சிறுபான்மையினர் என்று எவரும் இல்லை என்றும் நாம் அனைவரும் ஒரே மக்கள் என்றும் பிரகடனம் செய்வதால் ஏற்படக் போகும் நன்மை ஏதும் இல்லை என்றும் தெளிவாகக் கூறினார்.
“பன்மை வாத அணுகு முறைக்குப் பதிலாக பெரும்பான்மை வாத அணுகு முறையை பின் பற்றி வருகிறோம் எவ்வாறாயினும் முதலமைச்சரது கருத்துகளை கவனமாக செவிமடுத்த மகா நாட்டு ஏற்பாட்டாளர்கள் மகா நாட்டில் இறுதியில் நன்றியுரை கூறிய பேர்து அதனை தமிழ் உட்பட மூன்று மொழிகளில் கூறினர்.
அரசாங்கம் பெரிய உட்கட்டமைப்பு திட்டங்களை நிறைவேற்றுவதில் பெரும் கவனம் செலுத்துகின்ற போதிலும் அத் திட்டங்களை அடுத்து வாழும் மக்கள் மீது எதுவித முன்னுரிமையும் காட்டாது செயற்படுகின்றது.
அரசாங்கத்திற்கான பெரிய கட்டிடங்களை அடுத்துள்ள குடிசைகளில் மக்கள் வாழ்கின்றனர். வட பகுதியைப் பெரிய அகன் வீதிகள் கொழும்புடன் இணைக்கின்றன. ஆனால், அபிவிருத்தி அனைவருக்கும் நன்மையளிப்பதாக அமைய வேண்டும்.
அதற்காக நாட்டின் ஒவ்வொரு பகுதியினதும் குறிப்பிடத்தக்க பிரச்சினைகள் பொறுத்து அவ்வப் பகுதி மக்களுடன் கலந்தாலோசனை செய்வது அவசியம். வட மாகாண சபை விமான தளத்திற்கும் துறைமுகம் ஒன்றிற்குமான பிரேரணையை முன்வைத்திருப்பது அரசாங்கத்துடனான அதன் தொடர்புறும் செயல் நடவடிக்கை பற்றியதாகும். அது சார்பாக கவனிக்கப்பட வேண்டும்.
முதலமைச்சர் குறிப்பிட்ட மூன்றாவது கொள்கை தோல்வி அரசாங்கம் ஜனநாயக சுதந்திரங்களுக்கு முக்கியத்துவம் வழங்காது தேசிய பாதுகாப்பு பற்றிய சிந்தனைகளுக்கே முக்கியத்தும் கொடுக்கும் குறைபாடாகும்.
யுத்தத்தின் பின்னரான மனித பாதுகாப்புத் தேவைகளுக்கு அரசாங்கம் முக்கியத்துவம் கொடுக்காது. நாட்டின் பாதுகாப்பு பற்றிய சிந்தனையுடன் எப்போதும் பயங்கரவாதத்திற்கான எதிர் நடவடிக்கைகளிலேயே ஈடுபடும் போக்கே காணப்படுகிறது.
எனவே இராணுவத்தை முகாம்களிலேயே முடக்கி வைப்பதும் பின்னர் படிப்படியாக வட மாகாணத்திலிருந்து அகற்றுவதும் அரசாங்கம் உடனடியாக மேற்கொள்ள வேண்டிய அத்தியாவசியமான நடவடிக்கையாகும்.
இவற்றைத் தொடர்ந்து அரசாங்கம் அர்த்தமிக்க பாதுகாப்பு சீர்திருத்தங்களை மேற்கொள்ளலாம். இலங்கைக்கு இவ்வாறான ஒரு பெரிய பாதுகாப்பு அமைப்பும் அது தொடர்பான மனித வளமும் தேவையில்லை.
இராணுவ அமைப்புகள் பொதுவாக மேலிருந்து கீழ் நோக்கியதாக அதிகாரத்தின் அடிப்படையில் மத்தியப்படுத்தப்பட்ட வகையில் தீர்மானங்களை செய்யும் நிறுவனமாகும்.
அவ்வாறான அணுகு முறை இரண்டு தரப்பினர் ஒருவரை ஒருவர் தீங்கிழைக்கும் நோக்குடன் செயற்படும் கால கட்டத்திற் தேவையானதாக இருக்கலாம். ஆனால், சமாதான காலக் கட்டத்தில் இராணுவத்தினை ஒரு பங்காளராக வைத்துக் கொள்ள வேண்டிய தேவை மிகவும் குறைவானதாகும்.
யதார்த்தத்தின் உணர்வு தேசிய அரசியலின் ஒரு அங்கமாகவும் முழு தேசிய சீர்த்திருத்தத்தின் ஒரு பகுதியாகவும் தொடர்வதற்கான நல்லெண்ணத்தின் தொடர்ச்சி என்பது தமிழ் அரசியலின் பிரதான நீரோட்டத்தில் இன்றும் காணப்படுவதற்கான சான்றுகளை வட மாகாண முதலமைச்சரின் உரையிலிருந்து காணக் கூடியதாயிருந்தது.
முதலமைச்சரது உரையில் தென்பட்ட அறிவாற்றலின் ஆழம் , அவருடைய ஒழுக்கம் சார் வலிமை, என்பன மகா நாட்டில் கலந்து கொண்ட உயர் மட்ட கல்விமான்கள் மற்றும் அழைக்கப்பட்டிருந்த பார்வையாளர்கள் மத்தியில் ஒரு சார்பான தாக்கத்தை ஏற்படுத்தியது.
முதலமைச்சருக்கு இம் மகா நாட்டிற்கு அழைப்பு விடுத்திருந்தமையும் கூட சில வாரங்களுக்கு முன்னர் வட மாகாண சபை யுத்தக் குற்றங்கள் தொடர்பில் ஒரு சர்வதேச புலனாய்வினை செய்ய வேண்டும் என்ற தீர்மானத்தினை விடுத்திருந்த பின்னணியில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப் பட வேண்டிய ஒன்றாகும்.
வட மாகாண சபை அவ்வாறான ஒரு தீர்மானத்தை செய்ததன் காரணமாக அரசாங்க தலைமைத்துவம் கோபமுற்று நிலை குலைவுற்றிருக்கலாம். கடந்த காலத்துடன் தொடர்ந்தும் ஒட்டிக் கொண்டு பழம் சிந்தனைகளில் காலத்தை விரயமாக்காது அதனை விட்டு அகன்று வெளிவர வேண்டும்.
அதனை சிறப்பாகச் செய்வதானால் அதற்காக அரசியல் தீர்வினை ஏற்படுத்தி அதன் மூலம் பரஸ்பரமாக இரு தரப்பும் ஒருவரை ஒருவர் மன்னித்து மற்றும் நல்லிணக்கத்தை கொண்டு வருவதுடன் செய்த தவறுகளை திருத்தியும் கொள்வதே உகந்ததாயிருக்கும்.
இதற்கு மத்திய அரசாங்கத்தினால் வட மாகாண சபையினதும் பங்கேற்பு அத்தியாவசியமாகிறது. முதலமைச்சரது உரையின் இறுதியின் போது தான் தயாரித்து வந்த குறிப்புகளிலிருந்தும் விலகி தனது கட்சியின் தலைவர்கள் எதிர்பார்த்திருக்கும் கருத்தியல் ரீதியான வேறுபட்ட பல எதிர்ப்புகளுக்கு குறைவான ஒரு அரசியல் தீர்வு முன்வைக்கப்படும் பட்சத்திலும் அவற்றுடன் தான் செயற்படுவது பற்றி சிந்திக்க தயாராக இருப்பதாகவும் கூட கூறினார்.
ஏற்கனவே பல உடன்படிக்கைகளும், ஆணைக்குழு அறிக்கைகளும் தயாரிக்கப்பட்டு கிடைக்கக் கூடியதாக உள்ளன. அவற்றிலிருந்தும் பல கருத்தியல்களைப் பெற்றுக் கொள்ள முடியும்.
தவறான ஆட்சியாளர்களால் சிறந்த சட்டங்களையும் கூட சீர் குலையச் செய்ய முடியும். அதேபோன்று சிறந்த ஆட்சியாளர்களால் தவறான சட்டங்கள் மூலமும் மக்களுடைய ஆர்வங்களைப் பூர்த்தி செய்து ஊக்குவிக்கவும் முடியும். என்பதனையும் அவர் தனது உரையில் குறிப்பிட்டிருந்தார்.
இப்போதுள்ள வரையறைகளுக்குட்பட்ட, அதிகார பரவலாகத்திற்குட்பட்ட அதிகாரங்களுடனும் கூட வட மாகாண சபையால் மக்களுக்கு பல நன்மைகளை செய்யக் கூடியதாக இருக்கும்.
ஆனால், மத்திய அரசாங்கம் அவற்றிற்கு இடையூறு விளைவிக்காது ஆதரவாக இருக்க வேண்டும். முதலமைச்சரது உரையையும் வட மாகாண சபையினதும் தீர்மானங்களையும் அரசாங்கம் ஆக்கபூர்வமான முறையில் கவனித்து ஆவன செய்ய வேண்டியது மிக முக்கியமானதாகும்.
யாழ்ப்பாணத்தையும், திருகோணமலையையும் தென் இந்தியப் பிரதேசத்தின் கடற்போக்குவரத்து தொடர்பு வலைப் பின்னலுக்கான மிக முக்கியமான மையமாக்குவதன் மூலம் ( தமிழ் நாடு மட்டுமன்றி , கேரளா, ஆந்திரா, தெலுங்கானா, கர்நாடகா, மகாராஷ்டிரா ஆகிய மாநிலங்களுக்கும்) வட இலங்கைக்கு மாத்திரமன்றி முழு நாட்டிற்கும் ( இலங்கைக்கும்) பெரும் பொருளாதார நன்மைகளைக் கொண்டு வர முடியும் என சண்டே டைம்ஸ் பத்திரிகையின் ஆசிரிய தலையங்கக் கட்டுரையில் திட்டவட்டமாக கூறப்பட்டுள்ளது. முதலமைச்சர் விக்னேஸ்வரனின் உரையின் படி இலங்கையில் ஒரு மாதிரியுரு (Paradigm) பெயர்ச்சி தேவைப்படுகிறது.
பிரச்சினைகளை புதிய கோணத்தில் பார்க்க வேண்டும். அப்போது தான் மாகாண சபைகளால் மத்திய அரசாங்கத்துடன் இணைந்து செயற்பட முடியும்.
அதன் மூலம் அவர்கள் பொறுப்புக் கூற கடமைப்பட்ட மக்களுக்கு நன்மைகளைக் கொண்டு செல்லவும் , அரசாங்கத்தின் வேறுபட்ட மட்டங்களின் மீது மக்களுக்கு நம்பிக்கையை ஏற்படுத்தவும் முடியும்.
இவ்வாறான படைக்கும் திறனுடனும் முன்னோக்கி செயற்படும் மனப்பான்மையுடனும் மற்றும் பரஸ்பரமாக அனைத்து தரப்பினருக்கும் நன்மை பயப்பதுமான தீர்வே இன்று இலங்கைக்கு தேவைப்படுகிறது. வரப்போகும் ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் பேரவையின் ஜெனீவா கூட்டத் தொடரிலும் இவ்வாறான உணர்வுகளுடனேயே நடந்து கொள்ள வேண்டிய தேவையுண்டு.