கடந்த மார்ச் வர்த்­த­மானி மூலம் 16 புலம்­பெயர் தமிழ் அமைப்­புகள் மற்றும் 424 தனி நபர்­க­ளுக்கு இலங்கை அரசு தடை விதித்­த­மையின் சூடு ஆற­வில்லை.  இவ்­வாரம் இவ ர்­களின் மொத்தநிதி ஏனைய நிதிச் சொத்­து கள், பொரு­ளா­தார வளங்கள் என்­ப­ன­வற்றை முடக்கும் வர்த்­த­மானி அறி­வித்­த­லை யும் இலங்­கை­ய­ரசு வெளியிட்டுள்­ளது.

இலங்­கையில் பயங்­க­ர­வாத நட­வ­டிக்­கை­களை புலம்­பெயர் சமூ­கமும் அமைப்­பு­க ளும் மீளு­ரு­வாக்கம் செய்­கி­ன்றன என்ற குற்­றச்­சாட்டை முன்­வைத்தே இந்த தடையை இலங்கை அர­சாங்கம் விதித்­தி­ருந்­தது. அதன் தொடர்­நி­லை­யா­கவே இந்த சொத்து முடக்கம் தற்­பொ­ழுது செய்­யப்­பட்­டுள்­ளது.

இதற்­க­மைய பயங்­க­ர­வா­தத்­துக்கு நிதி­ய­ளிப்போர் என்று பிர­க­ட­னப்­ப­டுத்­தப்­பட்ட அமைப்­புகள் மற்றும் தனி­ந­பர்கள் ஆகி­யோரின் எல்லா சொத்­து­களும் மற்றும் நிதி, பொரு­ளா­தார வளங்கள் இவர்­க­ளினால் சட்டரீதி­யாக நிய­மிக்­கப்­பட்­ட­வர்­களின் கைவ­ச­முள்ள சொத்­துகள் அனைத்தும் முடக்­கப்­ப­டு­மென தெரிய வரு­கின்றது.

ஏற்­கெ­னவே, புலம்­பெயர் அமைப்­பு­க­ளையும் மற்றும் தனி­ந­பர்­க­ளையும் தடை செய்­தமை தொடர்பில் சர்­வ­தேச மனித உரிமை காண்­கா­ணிப்­பகம், கனேடிய தமிழ் காங்­கிரஸ் மற்றும் அமெ­ரிக்கா, கனடா போன்ற நாடுகள் தமது எதிர்ப்பைக் காட்­டி­யி­ருப்­ப­தோடு குறித்த தடையை தாம் ஏற்றுக்கொள்ளப்போ­வ­தில்­லை­யென்ற கரு த்தையும் வெளி­யிட்­டி­ருக்கின்றன.

sampanthanஇந்தத் தடை  சம்­பந்­த­மாக தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பு பின்­வரும் கோரிக்­கையை அர­சாங்­கத்­திற்கு அண்­மையில் விடுத்­தி­ருந்­தது. இலங்கை அரசு பயங்க­ர­வா­தத்தை மீள எழு ச்சி பெறவைப்­ப­தற்கு உத­வு­கின்­றன என்ற குற்­றச்­சாட்டின் பேரில் புலம்­பெயர் தமிழ் அமைப்­பு­களை தடை செய்­துள்­ளது.

தேசிய பிரச்­சி­னைக்கு தீர்வு காண வேண்டுமென்ற சிந்­த­னையை கூட்­ட­மை ப்பு கொண்­டுள்­ளது. இந்த அணு­கு­மு­றைக்கு தடைப்­பட்­டி­யலில் சேர்க்­கப்பட்டுள்ள சில அமைப்­புக்கள் துணை நிற்­கின்­றன.

எனவே, புலம் பெயர் தமிழ் அமைப்­புகள் மீதான தடை குறித்து இலங்கை அரசு மீள் பரி­சீ­லனை செய்ய வேண்­டு­மென்று தமிழ்த்­தே­சியக் கூட்­ட­மைப்பின் தலைவர் இரா.சம்­பந்தன் அண்­மையில் கோரி­யி­ருந்தார்.

இதே­வேளை, 16 புலம்­பெயர் அமைப்­பு­க­ளுக்கு அர­சாங்கம் கடந்த மார்ச் மாதம் தடை விதித்­தது சம்ப­ந்­த­மாக கூட்­ட­மைப்பின் முக்­கி­யஸ்தர் எம்.ஏ.சுமந்திரன் இவ்­வா­றா­ன­தொரு கருத்தைத் தெரி­வித்­தி­ருந்தார்.

sumanthiranஜெனீவா தீர்­மா­னத்­துக்கு பழி தீர்க்கும் வகை­யி­லேயே புலம் பெயர் அமைப்­பு­க­ளுக்கு இலங்கை அர­சாங்கம் தடை செய்­து ள்ள அமைப்­பு­களில் சில­வற்­றையே நாம் அறிவோம்.

அவர்கள் இலங்­கையில் நிலை­யான அர­சியல் தீர்வும் சமா­தா­னமும் ஏற்­பட வேண் டும் என்­ப­தற்­காக அர்ப்­ப­ணிப்­புடன் செயற்­பட்­ட­வர்கள். அவ்­வா­றான அமைப்­புக்­க ளையும் பயங்­க­ர­வா­தத்­துடன் தொடர்­பு­ப ட்டவை என்று ஒரு தலைப்­பட்­ச­மாக கூறு­வதை ஏற்றுக் கொள்­ள­மு­டி­யாது என சுமந்­திரன் தெரி­வித்­தி­ருந்தார்.

இவ்­வா­றான எதிர்ப்­புக்கு மத்­தியில் மீண்டும் சொத்து முடக்கம் என்ற பிர­க­டனம் மேற்­கொள்­ளப்­பட்­டி­ருக்­கி­றது. 2009 ஆம் ஆண்டு மே மாதம் யுத்தம் முடிவுக்கு கொண்­டு­வ­ரப்­பட்­ட­தாகக் கூறப்­படும் காலப் பகு­தி­யி­லி­ருந்து பல்­வேறு சர்­வ­தேச மயப்­ப­டுத்­தப்­பட்ட சம்­ப­வங்­களும் நிகழ்­வு­களும் நடந்­தேறிவிட்­டன. நடந்து கொண்­டி­ருக்­கின்­றன.

யுத்த முடிவின் பின் நாடு கடந்த தமி­ழீழ அர­சாங்கம் உரு­வாக்­கப்­பட்டு செயற்­பட ஆரம்­பித்­தது. இது போல யுத்­தத்­துக்குப் பின்­னரே புலம் பெயர் நாடு­களில் பல்­வேறு அமைப்­புகள் உரு­வாகி அவை தீவி­ர­மாக செயற்­பட ஆரம்­பித்­தன.

இந்த அமைப்­பு­களை பொறுத்த வரை புலம் பெயர் நாடு­க ளில் இவை செயற்­பட ஆரம்­பிக்­க ப்­ப ட்ட போதும் இவற்றின் அடிப்­ப­டை­யான நோக்கம் தாயக மண்ணில் மீண்டும் அமை ­தியும் சமா­தா­னமும் வர­வேண்டும்.

அதற் ­கான அடிப்­ப­டை­யாக ஏற்றுக் கொள்­ளக்­கூ­டிய அர­சியல் தீர்­வொன்று காணப்­பட வேண்டும் என்­பதை மேற்­படி அமைப்­புகள் தம் அமைப்பின் தார­க­மந்­தி­ர­மாக கொண்­டி­ருக்­கி­ன்றன என்று சொல்­லலாம்.

துர்ப்­பாக்­கிய வச­மாக இந்த அமைப்­பு கள் மீதும் புலம்­பெயர் சமூ­கத்தின் மீதும் சாட்­டப்­ப­டு­கின்ற குற்­றச்­சாட்­டுகள் இன்று அவர்கள் தாய­கத்­திற்கு திரும்ப முடி­யாத நிலை­யொன்றை உரு­வாக்­கி­யி­ருப்­ப­துடன் அவர்­க­ளுக்கும் தாய­கத்­துக்கும் இருக்­கின்ற பந்­தங்­க ­ளுக்கு ஆப்பு வைக்கும் நிலை­யொன்றே உருவாக்­கப்­பட்­டுள்­ளது என்று கரு­தப்­ப­டு­கி­றது.

புலம்பெயர் அமைப்­பு­களின் சொத்து முடக்கம் விவ­கா­ரத் தில் எல்லா சொத்­து­க்களும் மற்றும் நிதி, பொரு­ளா­தார வளங்கள் அவர்­க­ளினால் சட்ட ரீதி­யாக நிய­மிக்­கப்­பட்­ட­வர்­களின் கைவ­ச­முள்ள சொத்­துகள் என்ற பல்­வேறு முடக்­கங்கள் சுட்டிக் காட்­டப்­பட்­டுள்­ளன.

இவர்­க­ளுக்கு தாயக மண்­ணி­லு ள்ள அசையும் சொத்­துகள் அசையா சொத்­து கள், நிதி, பொரு­ளா­தார வளங்கள் என்ற பரப்­ப­ளவைப் பார்க்­கின்ற போது ஒரு குண்­டு­ம­ணி­ய­ளவு சொத்தைக் கூட இவர்கள் தாயக மண்ணில் வைத்­தி­ருக்க முடி­யாது உரி­மைப்­ப­டுத்த முடி­யாது என்ற சட்­ட­ரீ­தி­யான பிர­க­ட­ன­மாக இது அமுல் படுத்­தப்­ப­ட­வுள்ளன.

எல்­லா­வற்­றுக்கும் மேலாக இவர்­களால் சட்­ட­ரீ­தி­யாக நிய­மிக்­கப்­பட்­ட­வர்­க ளின் வச­முள்ள சொத்­துக்கள் அனைத்தும் முடக்­கப்­பட்­டுள்­ளன என இந்தப் பிர­க­ட னம் கூறு­கி­றது.

பொது­வாக கூறப் போனால் சர்­வ­தே­ச­ரீ­தியில் புலம் பெயர்ந்த தமிழ் மக்­களின் இத்­த­கைய அமைப்­புக்கள் அந்­தந்த நாடு­க ளின் சட்ட திட்டங்­க­ளுக்கு அமை­வா­கவும் குறித்த நாட்டின் இணக்­கப்­பாட்­டு­டனும் செயற்­பட்டு வரு­வ­தா­கவே எடுத்துக் கூறப்­படு­கி­றது.

இதன் கார­ண­மாக இலங்­கை­ய­ர­சாங்­கத்தின் இந்த அறி­விப்பை அல்­லது கோரிக்­கையை பெரும்­பா­லான நாடுகள் ஏற்று கொண்டு நடை­மு­றைப்­படுத்துவதாக தெரி­ய­வில்லை.

கனடா, அமெ­ரிக்கா இந்த அறி­விப்பை கண்டு கொள்­ளாத நிலை யில் ஜெனீ­வாவும் இலங்­கைக்கு ஆத­ரவு நல்­கிட்ட அவுஸ்­தி­ரே­லி­யாவும் இதனை ஏற் றுக் கொள்­ள­வில்­லை­யென்றே சொல்ல வேண் டும்.

தமது நாட்டின் சட்­ட­திட்­டங்­க­ளுக்கு அமை­வாக செயற்­பட்டு வரும் கார­ணத்­தி னால் அந்த அமைப்­பு­களின் செயற்­பா­டு­க­ளு க்கு தடை விதிக்க முடி­யாது என பல­நா­டு கள் காரணம் காட்­டு­கின்­றன.

இதே­வேளை, ஈழத் தமி­ழர்கள் புலம் பெயர்ந்து வாழும் நாடுகள் இலங்கை அர­சா ங்­கத்தால் தடை­செய்­யப்­பட்ட புலம்­பெயர் அமைப்­புகள், தனி­ந­பர்கள் ஆகியோர் பற்­றிய குற்­றச்­சாட்­டு­க­ளுக்கு போதிய ஆதா­ரங்­களை சமர்ப்­பிக்க வேண்­டு­மென இலங்கை அரசை கோரி வரு­கின்ற போதும் இலங்கை அர­சாங்கம் ஆதா­ரங்­களை சமர்ப்­பிப்­பதில் கால தாமதம் செய்து வரு­கின்­றது என சுட் டிக் காட்­டப்­ப­டு­கி­றது.

இவ்­வகை தடை விதிப்பும் சொத்து முடக்­கலும் கொண்டு வரப்­பட்­ட­மைக்­கான மூல கார ணம் புலம் பெயர் அமைப்­பு­களின் பின்­ன­ணி­யி­லேயே சர்­வ­தேசம் செயற்­பட்டு வரு­கின்­றது.

ஜெனீ­வாவில் கொண்டு வரப்­பட்ட தீர்­மானம் புலி­களின் மீள் உரு­வாக்­கத்­துக்கு இவர்கள் உதவி வரு­கின்­றார்கள் என்ற பிர­தான குற்­றச்­சாட்­டுக்கள் இந்த புலம் பெயர் அமைப்­புகள் மீது பொறிக்­கப்­ப­டு­கின்­றன.

இலங்­கையில் இன நெருக்­க­டிகள் ஏற்­ப ட்ட காலத்­தி­லி­ருந்து கடந்த மூன்று தசாப்த காலத்­துக்கு மேலாக வட கிழக்­கி­லி­ருந்து இடம் பெயர்ந்தும் புலம் பெயர்ந்தும் சென்ற தமிழ் மக்­களில் புலம்­பெயர் சமூகம் என்ற வகையில் சுமார் 1.5 மில்­லி­ய­னுக்கு மேற்­பட்ட மக்கள் 40 க்கு மேற்­பட்ட நாடு­களில் அடைக்கலம் கோரி அந்­தஸ்து பெற்று வாழ்­ப­வர்­க­ளா­கவும் அந்த நாட்டுப் பிர­ஜைகள் ஆகிக் கொண்­ட­வர்­க­ளா­கவும் இரட்டை நாட்டு பிர­ஜை­க­ளாக வாழுகின்­ற­வர்­க­ளா­கவும் காணப்­ப­டு­கின்­றார்கள் என்று கணக்­கிட்டுக் காட்­டப்­ப­டு­கின்­றது.

இதில் அமெ­ரிக்கா, கனடா, பிரித்­தா­னியா, பிரான்ஸ், ஜேர்மன், டென்மார்க், அவுஸ்­தி­ரே­லியா போன்ற நாடு­களில் வாழும் புலம்­பெயர் சமூகம் சர்­வ­தேச ரீதி­யாக இலங்­கைக்கு பல்­வேறு அப­கீர்த்­தி­க­ளையும்   கெடு­தி­க­ளையும் உண்­டாக்கி வரு­கின்­றன என்று இலங்­கை­ய ­ர­சாங்கம் அவர்கள் மீது பழி சுமத்தி வரு­வது ஒரு­பு­ற­மி­ருக்க தமிழ்த் தேசியக் கூட்­ட­ மைப்பு குறிப்­பிட்­டது போல் அமெ­ரிக்­கா வால் கொண்­டு­வ­ரப்­பட்ட 2012, 2013, 2014 ஆகிய பிரே­ரணை நிறை­வேற்றம்  முழு­வ­தற்­கு­மான பின்­னணி வகிப்­ப­வர்கள் புலம் பெயர் அமைப்­பு­களும் சமூ­க­மு­மாகும் என்ற அபிப்­பி­ரா­யத்தின் கார­ண­மா­கவே இலங்­கை­ய­ர­சாங்கம் சீற்­றமும் சினமும் கொண்­டி­ருக்­கின்­றது என்­பது பொது­வான அபிப்­பி­ரா­ய­மாகும்.

அதிலும் இவ்­வ­ருடம் மார்ச் மாதம் ஜெனீ­வாவில் நிறை­வேற்­றப்­பட்ட தீர்­மா­னமும் அதன் பிர­தி­ப­லிப்­பாக உரு­வாக்­கப்­பட்­டி­ருக்­கின்ற சர்­வ­தேச விசா­ர­ணையும் இலங்­கைக்கு நெருக்­கடி நிலை­யொன்றைக் கொண்­டு­வரப் போகின்­றது என எதிர்க்­கட்­சி கள் எச்­ச­ரித்து வரு­கின்ற நிலையில் ஆட்­சி­ யா­ளர்கள் இந்தப் போக்கை மக்கள் மத்­தி­யி­லி­ருந்து திசை திருப்ப புலம்­பெயர் அமை ப்­பு­களின் தடை விதிப்பை மேற்­கொள்­கின்­றார்கள் என்ற அபிப்­பி­ரா­யமும் பொது­வாகக் கூறப்­ப­டு­கின்­றது.

இருந்த போதிலும் அண்மைக் காலங்­களில் புலம் பெயர் தேசங்­களில் புலி­களை மீள் உரு­வாக்கம் செய்­வ­தற்கு அந்­தந்த நாட்டில் இயங்கிக் கொண்­டி­ருக்­கின்ற அமை ப்­புகள் தீவிர முயற்­சி­களை மேற்­கொ ண்டு வரு­கின்­றன என்­ப­தற்கு அடை­யா­ள­மாக அண்­மையில் மலே­சி­யா­வி­லி­லி­ருந்து மூவர் நாடு கடத்­தப்­பட்டு இலங்­கையின் பயங்­க­ர­வாத தடுப்புப் பிரி­வி­ன­ரிடம் ஒப்­ப­டைக்­கப்­பட்­டுள்­ளனர்.

இது­போ­லவே விடு­த­லைப்­புலி அமைப்பை மீள உரு­வாக்கம் செய்யும் முயற்­சியில் ஈடு­பட்­டுள்­ள­தாகக் கரு­தப்­படும் 40 புலம் பெயர் தமி­ழர்­க­ளுக்கு எதி­ராக ரெட்­நோட்டீஸ் சிவப்பு அறி­வித்தல் விடுக்­கப்­பட்­டுள்­ள­தாக பொலிஸ் ஊட­கப்­பேச்­சாளர் அஜித் ரோஹண தெரி­வித்­தி­ருந்தார்.

showImageInStoryஇந்­த­வ­கையில் தான் கடந்த 15 ஆம் திகதி மலே­சி­யாவில் வைத்து சாவ­கச்­சேரி மீசா­லையைச் சேர்ந்த சங்­க­ர­லிங்­க­ராஜா குசாந்தன் (வயது 45), நல்­லூரைச் சேர்ந்த மகா­தேவன் கிரு­பா­கரன் (வயது 42), அதே­யூரைச் சேர்ந்த செல்­லத்­துரை கிரு­பா­னந்தன் ஆகிய மூவரும் மலே­சி­யாவில் வைத்து கைது செய்­யப்­பட்டு இலங்­கையிடம் ஒப்­ப­டைக்­கப்­பட்­டுள்­ளனர்.

மலே­சிய நாட்டின் இந்த நட­வ­டிக்­கைக்கு அங்­குள்ள மனித உரிமை அமைப்­புக்கள் ஆர்­வ­லர்கள் கடும் எதிர்ப்பு தெரி­வித்­துள்­ளனர். மலே­சி­யாவைப் பொறுத்­த­வரை அதன் செயற்­பா­டுகள் அனைத்தும் கடந்த இரண்டு தசாப்த காலத்­துக்கு மேலாக இலங்­கை­ய­ர­சாங்­கத்­துக்கு சார்­பா­கவே இருந்து வந்­துள்­ளன என்­பது கவ­னத்­துக்­கு­ரிய விட­ய­மாகும்.

இரண்டாம் உலக மகா யுத்­தத்தைத் தொடர்ந்து இலங்­கை­யி­லி­ருந்து குறிப்­பாக வட கிழக்­கி­லி­ருந்து பெருந்­தொ­கை­யான ஊழிய நகர்­வுகள் மலே­சி­யாவை நோக்கி இடம்­பெற்­றுள்­ளன. அங்கு வாழு­கின்­ற­வர்­களில் குறிப்­பிட்ட சத­வீ­தத்­தினர் இலங்கை மண்ணைச் சேர்ந்­த­வர்கள் என்­பதும் குறிப்­பி­டத்­தக்­கது.

புலம்­பெயர் அமைப்­புகள் உரு­வாக்­கப்­ப ட்ட உரு­வா­கிய நோக்கம் பற்றி புலம்­பெயர் தமிழ் செயற்­பாட்­டாளர் பர­மேஸ்­வரன் வழ ங்­கிய செவ்­வி­யொன்றில் பின்­வ­ரு­மாறு சுட்­டிக்­காட்­டி­யி­ருந்தார்.

முன்­னைய நாட்­களில் தாயக மண்­சார்ந்த பிர­தேச அபி­வி­ருத்தி, மீள்­கு­டி­யேற்றம், கல்வி மேம்­பாடு, உள­வியல் பரி­க­ரணம், பொரு­ளா­தா­ர­வி­ருத்­திகள் என்ற அடிப்­ப ­டை­யி­லேயே புலம் பெயர் அமைப்­புக் கள் இயங்கி வந்­தன 2009 ஆம் ஆண்டு போருக்­குப்பின் ஏற்­பட்ட தாயக நிலைகள் சர்­வ­தேச பின்னணியில் அகிம்சைப் போராட்­டங்­களை முன்­னெ­டுப்­பதன் மூலம் அர­சியல் தீர்வை நோக்கி நகர முடி­யு­மென்ற இலட்­சி­யத்­துடன் செய ற்­பட்டு வருகின்றோம்.

கவன ஈர்ப்புப் போராட்­டங்­களும் அகிம்சை போராட்­ட ங்­க­ளுமே எங்கள் பரி­க­ர­ண­மாக பயன்­ப­டுத்­தப்­ப­டு­கி­றது என சுட்டிக் காட்­டப்­பட்­டி­ருந்­தது. இன்­றைய நிலையில் புலம்­பெயர் அமைப்­பு­களை முற்­றாக துவம்ஷம் செய்­து­விட வேண்­டு­மென்ற நோக்கில் இலங்­கை­ய­ர­சாங்­கமும் இலங்­கை­ய­ர­சாங்­கத்தின் கெடுபி­டி­க­ளுக்கு முடி­வு­கட்ட வேண்­டு­மென்ற நோக்கில் புலம் பெயர் அமைப்புக்களும் செயற்பட்டு வருவதாக விமர்சனங்கள் செய்யப்படுகின்றன.

எது எவ்வாறு இருந்த போதிலும் புலம் பெயர் அமைப்புகளின் நலம் சார்ந்த விடயத்தில் அவை தம் மண்ணில் தம் மக்கள் நல்லதொரு தீர்வைப் பெற்று அமைதியாகவும் சுதந்திரமாகவும் வாழ வேண்டுமென்பதில் அதிக கரிசனை கொண்டவர்களாகக் காணப்படுகின்றார்கள் என்பது அரசாங்கத்தைப் பொறுத்தவரை அது ஒரு கசப்பான உண்மையே.

வட கிழக்கிலிருந்து இடம்பெயர்ந்து இன்னும் தம் சொந்த மண்ணுக்கு திரும்ப முடியாமலிருக்கும் தம் உறவுகளின் மீள் குடியேற்றம், மறுவாழ்வு, வாழ்வாதாரம், கல்வி என்பவற்றில் அதிக அக்கறைப்பாடு கொண்டவர்களாகவே அவர்கள் இன்னும் இருந்து கொண்டிருக்கும் நிலையில் அவ ர்களின் தொப்புள்கொடி உறவை வெட்டி விடுவது போல் புலம் பெயர் சமூகத்துக்கு எதிராக பல்வேறு கெடுபிடிகளும் தடைக ளும் சவால்களும் ஏற்பட்டுக் கொண் டே யிருக்கின்றன.

ஒரு கிராமத்தவர் சொன்னது போல் போற போக்கைப் பார்த்தால் வெளி நாடு சென்ற எவருமே இனி தாய கத்தை நினைத்துப் பார்க்க முடியாத அளவுக்கு நிலைமைகள் கடுமையாகிக் கொண்டு போகின்றன எனக் குறிப்பிட்டார்.

எனவே புலம் பெயர் அமைப்புக்கள் மீது கண்டன கணைகளை வீசுவதைத் தவிர்த்து ஆரோ க்கியமிக்க அரசியல் சூழலை உரு வாக்கும் வகையில் அரசியல் தீர்வொன்று கொண்டு வரப்படு மானால் எல்லாம் ஓடி அடங்கி விடுமென் பதை அரசு உணர்ந்து நடக்க வேண்டும்.

Share.
Leave A Reply