அமெரிக்காவில் விளையாட்டுத் தனமாக 5 வயது சிறுவன் ஒருவன் துப்பாக்கியால் சுட்டதில் பலத்த காயமடைந்த 3 வயது சிறுமி மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருகிறார்.

அமெரிக்காவின் கொலராடோ பார்கோ பகுதியை சேர்ந்த அட்ரியன் சாவேஸ் ( 22) என்ற பெண்மணி சம்பவத்தன்று தனது வீட்டிற்குள் அமர்ந்து தனது ஆண் நண்பருடன் பேசிக் கொண்டிருந்தார்.

அப்போது அவரது 3 வயது பெண் குழந்தை 9 மற்றும் 5 வயது சிறுவர்களுடன் வெளியே விளையாடிக்கொண்டு இருந்துள்ளார். அப்போது 5 வயது சிறுவன் விளையாட்டுத்தனமாக கைத்துப்பாக்கியால் சிறுமியை நோக்கி சுட்டுள்ளான்.

இதில், படுகாயமடைந்த சிறுமி உடனடியாக சிகிச்சைக்காக அருகில் உள்ள மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். சிறுமியை பரிசோதித்த மருத்துவர்கள், அவரது நிலைமைக் கவலைக்கிடமாக இருப்பதாகத் தெரிவித்துள்ளனர்.

இதற்குள்ளாக தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார், அங்கிருந்த சிறுவர்களிடம் விசாரணை நடத்தியதில், ‘சிறுமியைச் சுட்ட சிறுவன் வீடியோ கேம்களை பார்த்து துப்பாக்கி இயக்குவதை கற்றுகொண்டதாகத் தெரிய வந்துள்ளது.

இதற்கிடையே, குழந்தையைக் கவனிக்காமல் அஜாக்கிரதையாக வீட்டிற்குள் அமர்ந்து தன் ஆண் நண்பருடன் பேசிக் கொண்டிருந்த அக்குழந்தையின் தாயார் மீதும் போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

Share.
Leave A Reply