வவுனியா வைரவபுளியங்குளம் பிரதேசத்தில் இருந்து ஆணொருவரின்சடலம் மீட்கப்பட்டுள்ளது என வவுனியா பொலிஸார் தெரிவித்தனர்.
வைரவபுளியங்குளத்தில் உள்ள வீடொன்றின் மொட்டை மாடியில் இருந்தே கொழும்பு வத்தளையை சேர்ந்த எஸ். சரவணன் என்ற 29 வயதுடைய இளைஞனின் சடலம் மீட்கப்பட்டதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
இதேவேளை, இம் மரணம் தொடர்பாக மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.