எதிர்க்கட்சி அந்தஸ்து கூட கிடைக்காமல் போன விரக்தியில் இருக்கும் காங்கிரஸ் கட்சியை வலிமைப்படுத்த சோனியாவின் மகள் பிரியங்கா காந்தி தீவிர அரசியலில் இறக்கப்படலாம் என்று செய்திகள் வெளியாகி இருக்கின்றன. லோக்சபா தேர்தலில் காங்கிரஸ் கட்சி படுதோல்வி அடைந்தது. மொத்தம் உள்ள 543 இடங்களில் காங்கிரசுக்கு 44 இடங்களே கிடைத்தன. இதனால் காங்கிரசுக்கு எதிர்க்கட்சி அந்தஸ்து கூட கிடைக்கவில்லை.
காங்கிரசின் தோல்வி பற்றி ஏ.கே.அந்தோணி தலைமையில் குழு அமைத்து ஆய்வு செய்த சோனியா, காங்கிரசுக்கு புத்துணர்ச்சி கொடுக்க பல்வேறு நடவடிக்கைகளை எடுக்க திட்டமிட்டுள்ளார்.
முதல் கட்டமாக காங்கிரஸ் தேசிய அளவிலான நிர்வாகிகளை மாற்ற சோனியா ஆலோசித்து வருகிறார். இது தவிர மாநிலம் வாரியாக புதிய நிர்வாகிகளை நியமித்து கட்சியை பலப்படுத்தவும் திட்டமிடப்பட்டுள்ளது
பிரியங்காவை களம் இறக்குங்கள்..
இதற்கிடையே காங்கிரசை வலுப்படுத்த எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் பற்றி காங்கிரஸ் மூத்த தலைவர்களின் கருத்துக்களை சோனியா கேட்டு வருகிறார். காங்கிரஸ் மூத்த தலைவர்கள், மாநில நிர்வாகிகளில் பெரும்பாலானவர்கள், காங்கிரசை மீண்டும் தூக்கி நிறுத்த வேண்டுமானால், பிரியங்காவை தீவிர அரசியலுக்கு அழைத்து வரவேண்டும் என்று சோனியாவிடம் வலியுறு
தேர்தல் பொறுப்பாளர் சோனியா, ராகுல் இருவருக்காவும் ரேபரேலி, அமேதி தொகுதிகளின் காங்கிரஸ் தேர்தல் பொறுப்பாளராக பணியாற்றினார். மற்றபடி அவர் வேறு எந்த அரசியல் நடவடிக்கைகளிலும் ஈடுபட்டதில்லை.
தோல்வியால் மனநிலை மாற்றம்
பிரியங்கா தீவிர அரசியலில் ஈடுபடுவார் என்று பல முறை தகவல்கள் வெளியான போது, அதை அவர் மறுத்தே வந்தார். தீவிர அரசியலில் ஈடுபட விருப்பம் இல்லாமல் இருந்த அவரிடம் சமீபத்தில் காங்கிரசுக்கு ஏற்பட்ட தோல்வி, மாற்றத்தை ஏற்படுத்தி இருப்பதாக கூறப்படுகிறது.
காங்கிரசை மீட்டெடுக்க தீவிர அரசியலில் ஈடுபடலாம் என்ற முடிவுக்கு பிரியங்கா வந்துள்ளதாக தெரிய வந்துள்ளது. மாநில தேர்தலுக்குப் பின் இந்த ஆண்டு இறுதியில் 4 மாநில சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. அதன் பிறகு பிரியங்காவின் அரசியல் பிரவேசம் அதிரடியாக நடைமுறைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தீவிர அரசியலில் ஈடுபடுவது உறுதியாகி விட்டதால் அவர் செயல்படுவதற்கு எத்தகைய பொறுப்பை கொடுப்பது என்பது பற்றி காங்கிரஸ் மூத்த தலைவர்கள் ஆலோசித்து வருகிறார்கள்.
உ.பி. தலைவராக்குவோம்
அதே நேரத்தில் காங்கிரஸ் மூத்த தலைவர்களில் சிலர், பிரியங்காவை முதலில் உத்தரபிரதேச மாநில காங்கிரஸ் தலைவராக்கி பயிற்சி அளிக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளனர்.
இதனிடையே பிரியங்கா தீவிர அரசியலுக்கு வந்தால் அது ராகுல்காந்தியை ஓரம் கட்டுவதாக அமைந்து விடும் என்றும் கூறப்படுகிறது. ராகுல் மெதுவாக செயல்படும் நிலையில், பிரியங்கா தன் பாட்டி இந்திராகாந்தி மாதிரி அதிரடியாக செயல்படுவார் என்ற எதிர்பார்ப்பு உள்ளது.