கொள்ளுப்பிட்டியில் பொலிஸார் மேற்கொண்ட திடீர் சுற்றிவளைப்பில் தனியார் விடுதியொன்றில் விபசாரத்தில் ஈடுபட்ட 10பெண்கள்இ விடுதி முகாமையாளர் மற்றும் விபசார நிலையத்தின் உரிமையாளர் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
பொலிஸ் மா அதிபரின் பணிப்பில் பொலிஸ் தலைமையகத்தின் புலனாய்வுப்பிரிவு பணிப்பாளரும்இ திட்டமிட்ட மற்றும் போதைப்பொருள் தடுப்பு பிரிவின் பதில்பணிப்பாளருமான ரீ.கணேசநாதன் தலைமையிலான பொலிஸ் குழுவினரே சுற்றிவளைப்பில் ஈடுபட்டு கைதுசெய்தனர்.
இவ்விடயம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது,
கொள்ளுப்பிட்டிப்பகுதியில் நீண்டகாலமாக இயங்கிவந்த தனியார் விடுதியொன்றில் வெளிப்பிரதேசங்களைச் சேர்ந்த பெண்களை பயன்படுத்தி விபசாரம் மேற்கொள்ளப்பட்டு வந்துள்ளது. பெண்ணொருவரே குறித்த செயற்பாட்டை மேற்கொண்டு வந்துள்ளார்.
கைது செய்யப்பட்டவர்கள் அநுராதபுரம், அம்பாறை, மாத்தறை, அவிசாவளை, போன்ற வெளிப்பிரதேசங்களைச் சேர்ந்தவர்கள் என்பதுடன் 20,22,25 வயதுடைய யுவதிகளாவர். விடுதியின் முகாமையாளரும்இ விபசார விடுதியை நடத்திய உரிமையாளரான பெண்ணும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இவர்கள் நீண்டகாலமாக ஐயாயிரம் முதல் பத்தாயிரம் ரூபா வரையிலான பணத்துக்காக விபசாரத்தில் ஈடுபட்டதாக விசாரணைகள் மூலம் தெரியவந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளதுடன் கைது செய்யப்பட்ட அனைவரும் இன்றைய தினம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட வுள்ளதாகவும் மேலும் தெரிவித்தனர்.