¨ராஜீவ்காந்தி திடீர் முடிவுகளையே எடுத்தார். அவருக்கு கொள்கை வகுப்பாளர்களின் கருத்துக்களை செவிமடுக்க நேரமிருக்கவில்லை…”
விடுதலைப்புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரனின் உறுதிப்பாட்டைப்புரிந்து கொள்ள இந்திய அரசு, புலனாய்வு அமைப்புகள், இராணுவம் என்று எல்லோருமே தவறிவிட்டதாக இராணுவப் புலனாய்வுத் துறையின் முன்னாள் அதிகாரியான கேணல் ஹரிகரன் தெரிவித்துள்ளார்.
முன்னாள் மத்திய அமைச்சர் நட்வர்சிங் எழுதியுள்ள நூலில், இந்தியப் படைகளை இலங்கைக்கு அனுப்புவ தற்கு முன்னர் அமைச்சரவையின் அனுமதியைப்பெறவில்லை என்று கூறப்பட்டுள்ளது. அதுதொடர்பில் கரு த்து தெரிவிக்கையிலேயே கேணல் ஹரிகரன் இவ்வாறு குறிப்பிட்டார்.
இதுகுறித்து அவர் மேலும் தெரிவித்ததாவது,
ராஜீவ்காந்தி திடீர் முடிவுகளையே எடுத்தார். அவருக்கு கொள்கை வகுப்பாளர்களின் கருத்துக்களை செவிமடு க்க நேரம் இருக்கவில்லை.
இலங்கை – இந்திய உடன்படிக்கையில் கையெழுத்திட்ட மறுநாள், அணிவகுப்பு மரியாதையின் போது ராஜீவ்காந்தி கடற்படைச் சிப் பாய் ஒருவரால் தாக்கப்பட்டார். அப்போது, ஜெனரல் சுந்தர்ஜியின் கருத்தை ராஜீவ் கேட்டார்.
இராணுவத்தளபதியாகவிருந்த அவர், விடுதலைப்புலிகளை 72 மணிநேரத் தில் தோற்கடித்து விட முடியும் என்று கூறினார்.
இலங்கையின் கள நிலைவரங்கள் குறித்து ஜெனரல் சுந்தர்ஜிக்கு எந்த யதார்த்தமும் தெரியாது. அதனாலேயே இலங்கையிலிருந்து 19 மாதங்களின் பின்னர், இந்திய அமைதிப்படை அவமானத்துடன் திரும்பியது.
ஆனால், வடக்கில் இந்திய அமைதிப்படை நிலை கொண்டிருந்தமை, தனது இராணுவத்தை திசை திருப்புவதற்கும், நாட்டின் பிறபகுதிகளில் கிளர்ச்சிகளை அடக்குவதற்கும் ஜனாதிபதி ஜே.ஆர். ஜெயவர்த்தனவுக்கு உதவியது.
தெரிவுகள் இல்லாத இலங்கை
குறிப்பாக, யாழ்ப்பாணத்தில் 1987 ஆம் ஆண்டு ஜூனில் `ஒப்பரேசன் பூமாலை’ நடவடிக்கை மூலம், இந்தியா உணவுப்பொதிகளை வீசிய பின்னர், எந்த வெளிநாட்டு உதவிகளும் வராத நிலையில், உடன்படிக்கையில் கையெழுத்திடுமாறு ஜே.ஆரின் கையை இந்தியா முறுக்கியபோது, அவருக்கு சிறியளவு தெரிவுகளே இருந்தன.
இந்தியாவின் கவலைகளை இலங்கை புறக்கணித்தால், இந்தியா படைபலத்தைப் பயன்படுத்த தயங்காது என்பதை இது வெளிப்படுத்தியது.
இந்த நடவடிக்கை, இலங்கையில் தமிழர்களின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றும் வகையில் பங்களாதேஷ் பாணியில், இந்தியா சுதந்திர தமிழீழத்தை ஏற்படுத்தி விடுமோ என்ற அச்சத்தையும் மூட்டியது. ஆனால், உடன்படிக்கை ஒன்றுபட்ட இலங்கைக்கு இந்தியாவின் ஆதரவை உறுதிப்படுத்தியதுடன், சுதந்திர தமிழீழத்துக்கான போரையும் தணித்தது.
அடிபணிய மறுத்த பிரபாகரன்
இறுதியில், ஜே.ஆர்.ஜெயவர்த்தன, விடுதலைப்புலிகளுடன் இந்தி யாவைப் போரிட வைத்தார். இந்தியாவிலிருந்து திரும்பியதும், இந்தியாவின் வரிசையிலுள்ள கால் விரலாக இருக்கமாட்டேன் என்று விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவர் பிரபாகரன் சுதுமலையில் நிகழ்த்திய உரையை இந்திய அரசு கவனமாக எடுத்துக்கொண்டிருக்க வேண்டும்.
புலிகள் தமது ஆயுதங்களை பெயரளவுக்கே ஒப்படைத்தனர். பயன்படுத்த முடியாத, பயனற்ற ஆயுதங்களே ஒப்படைக்கப்பட்டன. இந் திய அரசும், புலனாய்வு அமைப்பு கள், இராணுவம் என்று எல்லோருமே தமிழீழத்தை உருவாக்குவதற்கான போராட்டத்துக்குத் தலைமை தாங்கும் பிரபாகரனின் உறுதிப்பாட்டைப்புரிந்து கொள்ளத் தவறி விட்டனர்” என்று தெரிவித்துள்ளார்.