மட்டக்களப்பு மாவட்டம் வாழைச்சேனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கிரான்-கோரகல்லிமடு பிரதேசத்தில் வசித்து வந்த மனநலம் குன்றிய யுவதியை பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தினார் என்ற குற்றச்சாட்டின் பேரில் யுவதியின் மாமா முறையான நபரைக்கைது செய்ய நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக வாழைச்சேனை பொலிஸார் தெரிவித்தனர்.
இச் சம்பவம் பற்றித்தெரிய வருவதாவது,
மனநலம் பாதிக்கப்பட்ட குறித்த யுவதி சம்பவ தினமான இரவு பதினொரு மணியளவில் வீட்டில்தூங்கிக்கொண்டிருந்த நிலையில் வீட்டில் யாரும் இல்லாத சந்தர்ப்பத்தைப் பார்த்து பக்கத்து வீட்டில் வசித்துவந்த அந்த யுவதியின் மாமா முறையான சந்தேகநபர் குறித்த யுவதியை பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தியுள்ளார்.
இதுதொடர்பாக குறித்த யுவதியின் பாதுகாவலர்கள் பொலிஸில் முறைப்பாடு செய்யவே சந்தேகநபரைக்கைது செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக வாழைச்சேனை பொலிஸார் தெரிவித்தனர்.
வாழைச்சேனை வைத்தியசாலையில் குறித்த யுவதி அனுமதிக்கப்பட்டு மேலதிக பரிசோதனைகளுக்காக மட்டக்களப்பு வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளதாக வாழைச்சேனை பொலிஸார் தெரிவித்தனர்.