சூப்பர் ஸ்டார் ரஜினியுடன் நடிக்க வேண்டும் என்ற கனவு இன்னும் அப்படியே உள்ளது. அதற்குள் திருமணம் என்று யாராவது புரளி கிளப்பிவிடுகிறார்களே, என்று கோபப்பட்டுள்ளார் த்ரிஷா. அஜீத்தின் 55 – வது படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார் திரிஷா. தொடர்ந்து ஜெயம் ரவி ஜோடியாகவும் நடிக்கிறார். இரண்டு தெலுங்கு படங்களிலும் நடித்துக் கொண்டிருக்கிறார். நடிக்க வந்து பல ஆண்டுகள் ஆகியும் திரையுலகில் அவருக்கான முக்கியத்துவம் குறையவில்லை.
திரிஷாவுக்கு விரைவில் திருமணம் நடக்கப் போவதாக செய்திகள் அடிக்கடி வெளியாவது வழக்கம். இப்போதும் அவருக்கு குடும்பத்தினர் மாப்பிள்ளை பார்ப்பதாக செய்திகள் வெளியாகின.
திருமணம் பற்றி இன்னும் முடிவு செய்ய வில்லை. திருமணம் செய்து கொள்ள எப்போது விரும்புகிறேனோ அப்போது அதை உடனடியாக ரசிகர்களுக்கு தெரிவிப்பேன்.
தமிழ், தெலுங்கில் முன்னணி நடிகர்களுடன் நடித்து விட்டேன். ரஜினியுடன் மட்டும் நடிக்கவில்லை. அது நிறைவேறினால் மகிழ்ச்சி அடைவேன். அதற்குள் நிச்சயம் திருமணம் செய்ய மாட்டேன்.
இந்தி படங்களில் நடிப்பது கஷ்டமாக உள்ளது. இந்தி படத்தில் நடிக்கும் போது நிறைய நாட்கள் அங்கேயே தங்க வேண்டி இருக்கிறது.
தமிழில் தயாராகும் குயின் படத்தில் நான் நடிக்கப் போவதாக கூறப்படுவது உண்மையல்ல. அதில் நடிக்க யாரும் என்னை அணுகவில்லை. கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள கதையம்சம் உள்ள படங்களில் நடிக்கவே விரும்புகிறேன்.