அவுஸ்தி­ரே­லிய அர­சினால் இலங்­கை­யிடம் ஒப்­ப­டைக்­கப்­பட்ட தமிழ் புக­லிடக் கோரிக்­கை­யா­ளர்கள் மிக மோச­மாகச் சித்­தி­ர­வதை க்குள்ளாக்கப்பட்டுள்ளதாக ‘கார்­டியன்’ பத்திரிகை தெரிவித்துள்ளது.

கடந்த மாதம் மட்­டக்­க­ளப்பு கடற்­ப­ரப்பில் வைத்து இலங்கை அதி­கா­ரி­க­ளிடம் ஒப்­ப­டைக்­கப்­பட்­ட­வர்­களில் தமி­ழர்­களே இவ்­வாறு சித்­தி­ர­வதை செய்­யப்­பட்­டுள்­ளனர் எனக் கூறப்­ப­டு­கின்­றது.

இவ்­வி­டயம் தொடர்பில் குறிப்­பிட்ட பத்திரிகை மேலும் தெரி­வித்­துள்­ளவை வரு­மாறு:-

அவுஸ்­தி­ரே­லிய அர­சினால் இலங்­கை­யிடம் ஒப்­ப­டைக்­கப்­பட்ட புக­லி­டக்­கோ­ரிக்­கை­யா­ளர்­களில் தமி­ழர்கள் 4 பேரும் தனி­யாக பிரிக்­கப்­பட்­டனர். நெல்சன் என அழைக்­கப்­படும் தமி­ழரின் முகத்தின் மீது அதி­காரி ஒருவர் தாக்­கி­யதில் அந்த தமி­ழரின் முகத்­தி­லி­ருந்து இரத்தம் கொட்­டி­யது.

அதி­கா­ரிகள் தொடர்ந்து அவ­ரிடம் ஆவே­ச­மாக கேள்வி கேட்­டனர். “விடு­தலைப் புலி­க­ளுக்கு நீ பணம் கொடுத்­தாயா? அவர்­களை உனக்கு தெரி­யுமா?” – என கேட்டு தாக்­கினர். காலால் உதைத்­தனர்.

இன்­னொ­ருவர் தண்ணீர் போத்­தலால் அவ­ரது முகத்தில் அறைந்தார். தமி­ழர்­களை பின்னர் ஓர் இடத்­திற்கு கூட்டிச் சென்று வரி­சை­யாக இருக்­கு­மாறு உத்­த­ர­விட்­டனர். பின்னர் இன்­னொரு இடத்­திற்கு கூட்டி வந்­தனர். அதன் பின்னர் தொடர்ந்து கேள்­வி­களை கேட்­டனர்.

நெல்சன் தனது வீட்டு முக­வ­ரியை தெரி­விக்க வேண்­டிய நிலைக்குத் தள்­ளப்­பட்டார். அதே நாளில் இரண்டு பொலிஸ் அதி­கா­ரிகள் தனது வீட்டுக் கதவை தட்­டி­ய­தாக நெல்னிசன் மனைவி குறிப்­பிட்டார். காலியில் நெல்­சனை விசா­ரித்துக் கொண்­டி­ருந்த அதி­கா­ரி­களே அவர்­களை இங்கு அனுப்பி இருந்­தார்கள்.

அவ்­வேளை அவர் தனது 14 வயது மக­னுடன் வீட்டில் தனி­யாக இருந்தார். வீட்­டுக்குள் வந்த நபர்கள் நெல்சன் எங்கே எனக் கேட்­டனர். அதில் ஒருவர் மகன் முகத்தில் ஓங்கி அறைந்தார். அப்பா எங்கே எனக் கேட்­டனர். நான் தெரி­யாது என சொன்னேன் என அந்த சிறுவன் தெரி­வித்தான்.

நெல்சன் ஜூலை மாதம் 9 ஆம் திகதி விடு­விக்­கப்­பட்டார். அவர் தனது கிரா­மத்­திற்கு திரும்பி உள்ளார். நெல்­சனும் படகில் இருந்த ஏனைய 3 தமி­ழர்­களும் உள்­நாட்டு யுத்தம் முடி­வ­டைந்த பின்­னரும் தாங்கள் இன அடிப்­ப­டையில் துன்­பு­றுத்­தப்­ப­டு­கின்­றனர்எனத் தெரி­விக்­கின்­றனர்.

ஒவ்­வொரு தமி­ழரும் புலி ஆத­ர­வா­ளர்­களோ எனச் சந்தேகிக்கப்படுகின்றனர்.

Share.
Leave A Reply