கடந்த 2004ஆம் ஆண்டு ஏற்பட்டு சுனாமியில் இறந்ததாக கருதப்பட்ட இந்தோனேஷிய சிறுமி பத்து ஆண்டுகளுக்கு பின்னர் உயிரோடு இருப்பது தற்போது தெரிய வந்தது. 10 ஆண்டுகளுக்கு பின்னர் அவர் தன் பெற்றோருடன் சேர்ந்த நிகழ்ச்சி மிகவும் நெகிழ்ச்சியான சம்பவமாக இருந்தது.

sunamகடந்த 2004ஆம் ஆண்டு இந்திய பெருங்கடலில் சுமத்ரா தீவில் ஏற்பட்ட பயங்கர சுனாமியால் இந்தியா, இலங்கை, இந்தோனேஷியா ஆகிய நாடுகள் பயங்கரமாக பாதிக்கப்பட்டது.

sunamiஇந்த சுனாமியில் இந்தோனேஷியாவை சேர்ந்த Jamaliah மற்றும் Raudhatul Jannah, ஆகியோரின் 4 வயது மகள் Jamaliah அடித்து செல்லப்பட்டார். Jamaliah அவர்களை சுனாமிக்கு பின் ஒருமாதமாக தேடியும் கிடைக்கவில்லை. அதனால் சிறுமியின் பெற்றோர் தங்கள் மகள் இறந்திருப்பார் என்ற முடிவுக்கு வந்தனர்.

sunami1இந்நிலையில் கடந்த வாரம் Aceh Barat Daya district of Aceh province என்ற பகுதியில் தங்கள் மகள் ஒரு வயதான பெண்ணுடன் உயிரோடு இருப்பதாக Jamaliah மற்றும் Raudhatul Jannah, அவர்களுக்கு தெரிய வந்தது. ஃபேஸ்புக் மூலம் புகைப்படத்தை பார்த்து அது தங்கள் மகள்தான் என்பதை உறுதி செய்துகொண்ட பெற்றோர் அந்த முதிய பெண்ணிடம் தொடர்பு கொண்டு பத்து வருடங்களுக்கு பின்னர் தங்கள் மகளை சந்தித்தனர்.

sunami2இந்த நெகிழ்ச்சியான சம்பவத்தை அந்த பகுதியில் உள்ளவர்கள் பார்த்து ஆனந்தக்கண்ணீருடன் ரசித்தனர். இவர் எங்கள் மகள்தான் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை. நாங்கள் டி.என்.ஏ சோதனைக்கும் தயார் என அவர்கள் தெரிவித்தனர்.

sunami32004ஆம் ஆண்டு ஏற்பட்ட சுனாமியில் இந்தியா, இந்தோனேஷியா மற்றும் இலங்கை ஆகிய நாடுகளை சேர்ந்த சுமார் 230,000 பேர் கொல்லப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Share.
Leave A Reply