இராணுவத்தில் இணைந்த தமிழ்யுவதியின் சகோதரனின் இறுதிக் கிரிகைகளில் படைதளபதியால் நடாத்தப்பட்டன. முல்லைத்தீவில் இராணுவத்தில் பணியாற்றிய தமிழ்யுவதியின் ஒரு வயதான சகோதரனின் இறுதிச் சடங்கு முல்லைத்தீவு கட்டளைத் தளபதி மேஜா் ஜெனரல் N.A.J.C டயஸ் அவா்களின் தலையில் நடைபெற்றது.
குறித்த தமிழ் இராணுவ பெண் சிப்பாயின் இறுதிச் சகோதரன் கடும் சுகவீனம் காரணமாக யாழ் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு நேற்று முந்தினம் உயிரிழந்தான்.
இந்த மரணச்சடங்கு முல்லைத்தீவு இராணுவத் தளபதியின் பொறுப்பில் அவா்களது முழுச் செலவிலும் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.
அத்துடன் இராணுவத் தளபதியால் குறித்த பெண் சிப்பாயின் தாயாருக்கு உதவிப் பொருட்களும் வழங்கப்பட்டன.
இராணுவத்தில் இணைந்த தமிழ் பெண் மரணம்: இராணுவ மரியாதையுடன் நல்லடக்கம்
இராணுவத்தில் இணைந்த தமிழ் பெண்ணொருவர் சுகயீனம் காரணமாக உயிரிழந்த சம்பவமொன்று முல்லைத்தீவு ஒட்டுசுட்டான் பகுதியில் இடம்பெற்றுள்ளது. ஒட்டுசுட்டான் செல்வபுரம் கிராமத்தைச் சேர்ந்த ஒரு பிள்ளையின் தாயான பிரசாத் அஜந்தா என்ற பெண்ணே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
குறித்தப் பெண் கடந்து மே மாதம் 22ஆம் திகதி இராணுவத்தில் இணைந்துள்ளார். இவர் இராணுவ பயிற்சிகளில் ஈடுபடும் போதே சுகயீனம் ஏற்பட்டதாகவும் பின்னர் யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதித்து சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாகவும் இராணுவத்தினர் தெரிவிக்கின்றனர்.
குறித்தப் பெண்ணின் சடலம் செல்வபுரத்தில் உள்ள உயிரிழந்த பெண்ணின் கணவரிடம் ஒப்படைக்கப்பட்டதுடன் இராணுவ மரியாதையுடன் நேற்று நல்லடக்கம் செய்யப்பட்டுள்ளது.