பெங்களூர்: இணையதளத்தில் பார்த்து ரசிக்கும் காட்சிகளை நேரிடையாக பார்க்க விரும்பிய பெண், தனது கணவருடன் பாலியல் உறவு வைத்துக் கொள்ளும்படி தோழியை மிரட்டினார். இந்த வழக்கில் கணவனும், மனைவியும் கைது செய்யப்பட்டனர். கர்நாடகாவில் பாலியல் பலாத்கார சம்பவங்கள் தொடர்கதையாகி விட்டது.

இதையடுத்து, பாலியல் குற்றங்களை தடுக்க மாநில அரசு குண்டர் தடுப்பு சட்டத்தை நடைமுறைபடுத்தியது. அப்படி இருந்தும் குற்றங்கள் குறைந்தபாடில்லை. தினமும் விசித்தர பாலியல் பலாத்கார வழக்குகள் காவல் நிலையத்தில் பதிவாகி வருகின்றன.

இந்நிலையில், பெங்களூர் ஜாலஹள்ளி காவல் நிலையத்தில் விநோதமாக பலாத்கார வழக்கு பதிவாகியுள்ளது. இதற்கு ஒரு பெண்ணே உடந்தையாக இருந்துள்ளதை அறிந்து போலீசார் அதிர்ச்சிடைந்து உள்ளனர்.

பெங்களூர் சிக்கபானவாரா அருகேயுள்ள கங்கம்மனகுடியில் வசிப்பவர் திலீப் (27). இவரது மனைவி ஆஷா (25). ஆஷா எப்போதும் இணையதளத்தில் விதவிதமான செக்ஸ் படங்களை பார்த்து ரசித்து வருவார். இதனால் அதற்கு அடிமையானார்.

அதில் அலுத்துப்போன ஆஷா, இணையதளத்தில் நடப்பது போன்ற காட்சிகளை நேரில் பார்த்து ரசிக்க விருப்பப்பட்டார். தனது விருப்பத்தை கணவர் திலீபிடம் கூறியுள்ளார். அதற்கு அவரும் ஒப்புக் கொண்டுள்ளார். இதையடுத்து, அதே பகுதியில் வசிக்கும் தோழி ஒருவரை தனது வீட்டிற்கு ஆஷா அழைத்து வந்துள்ளார். அவரிடம் செக்ஸ் குறித்து ஆஷா வெளிப்படையாக பேசியுள்ளார்.

இதனால் பயந்துபோன தோழி, ஆஷா வீட்டில் இருந்து புறப்பட தயாரானார். ஆனால், ஆஷா அவரை மடக்கி வலுக்கட்டாயமாக படுக்கை அறைக்கு அழைத்து சென்றார். அங்கே திலீப் தயாராக இருந்தார். பின்னர் ஆஷா தனது தோழியை மிரட்டி, திலீபுடன் பாலியல் உறவு வைத்துக் கொள்ள கூறினார்.

பின்னர் இருவரும் உல்லாசமாக இருந்ததை பார்த்து ரசித்தார். இச்சம்பவம் ஜூலை 27ம் தேதி இரவு 9.30 மணிக்கு நடந்துள்ளது.

பயந்துபோன தோழி, இதை யாரிடமும் சொல்லாமல் மறைத்து விட்டார். கடந்த 10ம் தேதி மீண்டும் தனது தோழியை சந்தித்த ஆஷா, வீட்டுக்கு வலுக்கட்டாயமாக அழைத்து வந்து தனது கணவனுடன் உல்லாசமாக இருக்கும்படி கூறினார். இதற்கு அவரது தோழி மறுத்தார்.

ஆனால், ஒத்துழைப்பு கொடுக்காவிட்டால், உனது கணவன் மற்றும் 5 வயது குழந்தையை கொன்று விடுவோம் என்று ஆஷா மிரட்டியுள்ளார். இதனால் பயந்து போன தோழி, திலீப்புடன் பாலியல் உறவு வைத்து கொண்டார்.

இதை ஆஷா பார்த்து ரசித்தார்.பாதிக்கப்பட்ட பெண், இந்த சம்பவம் குறித்து தனது கணவரிடம் தெரிவித்தார். அதிர்ச்சியடைந்த அவர் கெங்கம்மனகுடி போலீசில் புகார் அளித்தார்.

இதன்பேரில் வழக்கு பதிந்த போலீசார் திலீப், ஆஷா தம்பதியரை கைது செய்து வழக்கு பதிந்து பரப்பனஅக்ரஹாரா சிறையில் அடைத்தனர். பெங்களூரில் நடந்த இந்த விசித்திர பாலியல் சம்பவம் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

Share.
Leave A Reply