இலங்கை அரசு, அமெரிக்காவிடமிருந்து நவீன ராணுவ தொழில்நுட்ப உதவியாக Night Vision கருவிகளை கேட்டபோது, எந்த ரக கருவிகளை கேட்டார்கள்?

3) AN/PVS-10: Night Vision Sniper Scope

இது கொஞ்சம்   வித்தியாசமான செயல்முறையுடைய கருவி. அத்துடன் Night Vision Devices என்ற பொதுவான பிரிவுக்குள் வந்தாலும், இரவில் மட்டும் பயன்படும் கருவியல்ல. மிகக் குறைவான வெளிச்சம் உள்ள போர்க்களங்களிலும் பயன்படும், அதே நேரத்தில் மிக அதிக வெளிச்சமுடைய இடங்களிலும் உபயோகப்படும்.

அது ஒரு 3-ம் தலைமுறை கருவி. இரவுத் தாக்குதல்களில் எப்படிப் பயன்படும் என்று உங்களுக்கு தெரிந்திருக்கும். பகலில் எப்படி பயன்படும்?

யுத்தம் நடைபெறும் இடங்களில் சில சமயங்களில் தாக்கவேண்டிய இலக்குகளில் அதீத வெளிச்சம் இருந்தால் – அதாவது இலக்கு இருக்கும் திசையிலிருந்து தாக்குதல் வரும் திசையை நோக்கிய நேரடி சூரிய வெளிச்சம் இருந்தால் அதன் உபயோகம் தேவை.

அத்துடன், இலக்கு இருக்குமிடத்தில் இருந்து, தாக்குதல் இடத்தை நோக்கி அதீத வெளிச்சம் பாய்ச்சப்பட்டாலோ (Light Beaming) அதீத வெளிச்சம் பட்டுத் தெறித்தாலோ (Light Reflection) அப்படியான அதீத வெளிச்சத்தை நோக்கி குறிபார்த்துச் சுடுவது கஷ்டம். அப்போதும், இந்தக் கருவி பயன்படும்.

யுத்தம் நடைபெறும் இடங்களில் இப்படியான சூழ்நிலைகள் எல்லாம் உள்ளனவா என்ற சந்தேகம் உங்களுக்கு எழலாம். ஆம். இப்படியான சூழ்நிலைகள் ஏற்படுவது சகஜம்.

சில ராணுவ தளங்களை இலக்கு வைப்பதிலிருந்து குழப்புவதற்கு, தளங்களில் இருந்து பிரகாசமான Light Beam அடிப்பதும் பெரிய அலுமினிய திரைகள் முலமாக வெளிச்சத்தை எதிர்த்திசையில் பட்டுத்தெறிக்க வைப்பதும் சகஜமாக நடப்பதுண்டு.

அப்போதெல்லாம் குறுகிய தூர இடைவெளியில் நின்றுகொண்டு வெறும் கண்ணால் இலக்கை ஜட்ஜ் பண்ணி சுடமுடியாது. அந்த சந்தர்ப்பங்களில் இந்த AN/PVS-10 அருமையாக கைகொடுக்கும்.

in our sights 3

அதேபோல கடல் போரிலும், இலக்கு வைக்கப்படும் கப்பலில் உள்ளவர்கள், தாக்க வருபவர்களை நோக்கி அதீதமான வெளிச்சத்தை பீம் பண்ணி அல்லது ரிஃப்ளெக்ட் பண்ணி இலக்கு வைக்கவிடாமல் குழப்பியடிக்கும் போர்முறையையும், இந்த AN/PVS-10ஐ வைத்து முறியடிக்க முடியும்.

குறி வைப்பது பற்றி சொன்னோமல்லவா? இந்த AN/PVS-10 அநேகமாக பொருத்தப்படும் ஆயுதம் M-24 Sniper Rifleதான்!

ஸ்னைப்பர் என்பது தொலைவில்  இருந்து டெலாஸ்கோப் லென்ஸ் மூலம் ஒற்றை இலக்கை குறிபார்த்து அடித்து வீழ்த்துவது என்று ஏற்கனவே மற்றொரு ராணுவ ஆய்வு கட்டுரையில் விளக்கமாக எழுதியிருந்தோம் என்பதால், மீண்டும் விளக்க தேவையில்லை.

இலங்கையில் இறுதி யுத்தம் நடந்தபோது, இரு தரப்பினரும் சில மீட்டர் ஆளற்ற பகுதியின் இந்தப் பக்கமும், அந்தப் பக்கமுமாக இருந்த சந்தர்ப்பங்கள் பல தடவைகள் ஏற்பட்டன.

அப்போதெல்லாம், எதிர்த் தரப்பு முன்னரண் பகுதியை பார்வையிட, முக்கிய தளபதி யாராவது வருகிறாரா என, ஸ்னைப்பர்கள் தமது துப்பாக்கியில் பொருத்தப்பட்ட லென்ஸ் மூலம் பார்த்துக்கொண்டே இருப்பார்கள். சில வேளைகளில் மணிக் கணக்கில் லென்ஸ் வழியாக பார்த்துக்கொண்டு இருக்க வேண்டியிருக்கும்.

திடீரென அதிஷ்டம் அடிக்கும். எதிர்த் தரப்பு தளபதி ஒருவருடைய தலையாவது முன்னரணில் தென்படும்.

அப்படியான அபூர்வ சந்தர்ப்பத்தில், எதிரேயிருந்து அதீத வெளிச்சம் அடிக்கப்பட்டு, குறி வைத்து காத்திருப்பவரின் பார்வை விசிபிளிட்டியை குழப்பினால், மீண்டும் அப்படியொரு சந்தர்ப்பம் வாய்க்குமா? அதற்காகவே, இந்த சாதனம் AN/PVS-10.

size0
M24 Sniper Rifle
-ல் உள்ள பாரலின் கீழ்ப்பகுதி ரெயிலிங்கில், AN/PVS-10-ஐ கச்சிதமாக பொருத்தலாம். ஒருமுறை பொருத்தி விட்டால் தொடர்ந்து பகலிலும் இரவிலுமாக பயன்படுத்தும்படியாக Day use – Night Use என்று ஒரு பட்டன் உண்டு. அதன்பின் காரியம் மிகச் சுலபம்.

சுவிட்சை Night Use பக்கமாக தட்டிவிட்டால், Image Intensification தொழில் நுட்பம் மூலம் இருளில் இலக்குத் தெரியும்.

சுவிட்சை Day use பக்கமாக தட்டிவிட்டால், Direct view system மூலமாக எதிரே அதீத வெளிச்சம் இருந்தால், அவற்றை கண்களுக்கு ஏற்ற விதத்தில் ஆட்டோமேட்டிக்காக அட்ஜஸ்ட் செய்து, இலக்கை துல்லியமாக காட்டும்.

இரவு பகல் இரு ஆபரேஷனுக்குமான magnification power maximum 8.5 அளவு வரை உள்ளது. கருவியின் அதிகூடியஎடை, சுமார் 2.2 கிலோ.. அருமையான 3-ம் தலைமுறை தொழில்நுட்பம். ஆனால் விலைதான் கொஞ்சம் அதிகம். Overpriced என்றுகூட சொல்லலாம்.

இருப்பினும், அமெரிக்கா போன்ற ஒரு நாடு, ராணுவ உதவி என்ற பெயரில் இலவசமாக கொடுக்க முன்வந்தால், இரு கரம் நீட்டி வாங்கிக் கொள்ளலாம்.

இலங்கையும் அப்படித்தான் வாங்கி கொண்டது! விடுதலைப் புலிகளுக்கு எதிரான இறுதி யுத்தத்திலும் பயன்படுத்தியது!!

(தொடரும்)

 

தமிழுக்கு இது புதிது: Military Technology – இருளில் பார்க்ககூடிய ராணுவ சாதனங்கள் அல்லது NVG-2

தமிழுக்கு இது புதிது: Military Technology – இருளில் பார்க்கக்கூடிய ராணுவ சாதனங்கள் அல்லது NVG-1

 

Share.
Leave A Reply