வடமாகான சபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிங்கம் கொண்டுவர முனைந்த மூன்று பிரேரணைகளால் வட மாகாண சபை அமர்வில் பெரும் அமளி ஏற்பட்டது.
வடமாகாண சபையின் 14ஆவது அமர்வு இன்று காலை 9.30 மணியளவில் கைதடியில் உள்ள வடமாகாண பேரவை கட்டடத்தில் நடைபெற்றது.
இவ் அமர்வில் மாகாண சபை உறுப்பினரான எம்.கே.சிவாஜிங்கம் தமிழ் மக்களை இனப்படுகொலையில் இருந்து பாதுகாக்க சர்வதேச பொறிமுறையை ஏற்படுத்த வேண்டும் விசாரணை கால எல்லையை நீடிக்க வேண்டும் மற்றும் விசாரணை குழு இலங்கையில் விசாரணை நடத்த அனுமதிக்க வேண்டும் என மூன்று பிரேரணைகளை முன்வைக்க இருந்தார்.
(எம்.கே.சிவாஜிங்கம் முன்வைத்த இதே கோரிக்கைகளை தானே அமெரிக்கா ஐ.நா. மனிதவுரிமை பேரவையில் முன்வைத்து, தீாமானமும் நிறைவேற்றி இலங்கையரசுக்கு எதிராக சர்வதேச விசாரணை குழுவொன்றை அமைத்து விசாரணைகள் நடக்கதொடங்கியுள்ளன. நிலமை இப்படியிருக்க…. கேமாளி சிவாஜிலிங்கம் சும்மா கோமாளித்தனமான கோரிக்கைகளை முன்வைத்து வடமாகான சபை அமர்வுகளை குழப்புகின்ற நடவடிக்கையே தவிர வேறேன்றுமில்லை )
அந்த பிரேரணைகளை இச் சபையிலே முன்வைக்க முடியாது எனவும் நடைமுறை சாத்தியமான பிரேரணைகளை முன்வைக்கவும் என எதிர்கட்சி தலைவர் சி.தவராசா தெரிவித்தார் .
இப் பிரேரணை தொடர்பில் இச் சபையில் பிரஸ்தாபிக்கபாட்டால் தாம் வெளிநடப்பு செய்வதாக கூறி எதிர்கட்சி உறுப்பினர்கள் 8 பேரில் 7 பேர் வெளிநடப்பு செய்தனர்.
ஆயினும் முஸ்லீம் காங்கிரஸ் உறுப்பினர் முஹமட் ரபீஸ் சபை அமர்வில் தொடர்ந்து கலந்து கொண்டார். அதேவேளை சிவாஜிங்கத்தின் பிரேரணை தொடர்பில் ஆளும் கட்சி உறுப்பினர்கள் இடையிலும் வாத பிரதிவாதங்கள் நிகழ்ந்தன.
அதன் போது முதலமைச்சர் அப் பிரேரணை தொடர்பில் கருத்து தெரிவிக்கும் போது சர்வதேச விசாரணை குழு தமது விசாரணைகளை ஆரம்பித்துள்ளது அது ஒரு வரையறைக்குள் இருந்தே விசாரணைகளை மேற்கொள்ள முடியும்.
எனவே இந்த பிரேரணைகள் இக் காலப்பகுதியில் தேவையானதா பொருத்தமானதா என நாம் சிந்திக்க வேண்டும் என கோரி இருந்தார்இ
அதனை ஏற்றுக்கொண்ட உறுப்பினர் சிவாஜிங்கம் முதமைச்சரின் வேண்டுகோளுக்கு இணங்க தமது இரு பிரேரணைகளை திரும்ப பெற்றுக்கொள்வதாகவும் தமிழ் மக்களை இனப்படுகொலையில் இருந்து பாதுகாப்பதற்கான சர்வதேச பொறிமுறையினை ஏற்படுத்த வேண்டும் என்ற பிரேரணையை மாற்றத்துடன் முன்மொழிவதாக தெரிவித்தார்.
அதனை ஏற்றுக்கொண்ட அவைத்தலைவர் சி.வி.கே.சிவஞானம், சிவாஜிலிங்கத்தின் மாற்றம் செய்யப்பட்ட பிரேரணையை விஷேட அமர்வு ஒன்றினை கூட்டி அதில் மாற்றம் தொடர்பான விவாதங்கள் இடம்பெற்று அவ் அமர்வில் அப் பிரேரணையை முன்மொழியும் மாறு கூறினார்.
வடமாகாண சபை இன்றைய 14 ஆவது அமர்வின் போது 8 பிரேரணைகள் ஏற்றுக்கொள்ளப்பட்டன. அதனை அடுத்து சபை அமர்வு எதிர்வரும் செப்டெம்பர் மாதம் 10ம் திகதிக்கு ஒத்தி வைக்கப்பட்டது.