ஐக்­கிய தேசியக் கட்சி ஆட்­சிக்கு வந்தால், சீன ஆதிக்­கத்­துக்கு முடிவு கட்­டுவோம் என்று கடந்த புதன்­கி­ழமை பாரா­ளு­மன்­றத்தில் உரை­யாற்­றிய போது, கட்சியின் பாரா­ளு­மன்ற உறுப்­பினர் ரவி கரு­ணா­நா­யக்க தெரி­வித்­தி­ருந்தார்.

சீன நிறு­வ­னங்­க­ளுடன் தற்­போ­தைய அர­சாங்­கத்­தினால் செய்து கொள்­ளப்­பட்ட சட்­ட­வி­ரோத உடன்­பா­டுகள் அனைத்தும், செல்­லு­ப­டி­யற்­ற­தாக்­கப்­படும் என்றும், இந்­தி­யாவைப் புறந்­தள்ள அனு­ம­திக்க முடி­யாது என்றும் அவர் குறிப்­பிட்­டதை சாதா­ர­ண­மா­ன­தொன்­றாக எடுத்துக் கொள்ள முடி­யாது.

அதுவும், ஜனா­தி­பதித் தேர்­த­லுக்­கான முன்­னா­யத்­தங்கள் நடந்து கொண்­டி­ருக்­கின்ற சந்­தர்ப்­பத்தில் இந்தக் கருத்து முக்­கி­யத்­துவம் வாய்ந்­தது.

இந்­தி­யா­வுக்கும் சீனா­வுக்கும் இடை யில், பாது­காப்பு சார்ந்த போட்டி இலங்­கையை மையப்­ப­டுத்­தியே உரு­வா­கி­யி­ருக்­கி­றது.

சீன நீர்­மூழ்­கி­களின் கொழும்பு வரு­கைகள், இந்­திய –- இலங்கை உற­வு­களின் மீது நம்­பிக்­கை­யீ­னங்­களை மீண்டும் கட்­டி­யெ­ழுப்பத் தொடங்­கி­யுள்­ளது.

இந்த இரண்டு பின்­புலச் சூழல்­களின் மத்­தி­யிலும், தாம் ஆட்­சிக்கு வந்தால் சீனாவைத் துரத்தி விட்டு, இந்­தி­யாவை அருகில் வைத்துக் கொள்வோம் என்று ஐ.தே.க. கூறி­யி­ருக்­கி­றது.

இந்­த­நி­லையில், ஐ.தே.க. கூறு­வது நடை­முறைச் சாத்­தி­ய­மான விட­யமா என்ற கேள்வி எழு­கி­றது.

இலங்­கையில் சீனா செய்­துள்ள மிகப் பெரி­ய­ள­வி­லான முத­லீ­டுகள், சீனா­வு­ட­னான இலங்­கையின் உற­வு­களை அவ்­வ­ளவு இல­குவில் பிரித்து விட முடியாத நிர்க்­க­தியை ஏற்­ப­டுத்­தி­யுள்­ளது.

எந்த அர­சாங்கம் ஆட்­சிக்கு வந்­தாலும், சீனா­வுடன் செய்து கொண்ட, சட்­ட­வ­லு­வுள்ள எந்த உடன்­பாட்­டையும், இரத்துச் செய்து விட முடி­யாது.

அது இலங்­கையின் பொரு­ளா­தா­ரத்தைப் பல­வீ­னப்­ப­டுத்தி விடும்.

ஏனென்றால், இப்­போது சீனா கொடுத்­தி­ருக்­கின்ற முண்டு தான் இலங்­கையின் பொரு­ளா­தா­ரத்தை நிமிர்த்தி வைத்­தி­ருக்­கி­றது. அந்த முண்­டுத்­தடி நீக்கப்பட்டு விட்டால், பொரு­ளா­தாரம் முறிந்து விடும்.

ஏற்­க­னவே தொடங்­கப்­பட்ட சீனாவின் திட்­டங்கள் முடங்கிப் போய் விடும்.

எனவே, ஐ.தே.க. ஆட்­சிக்கு வந்தால், சீனாவின் முழு­மை­யான ஆதிக்கம் அகன்று விடும் என்று கரு­து­வ­தற்­கில்லை.

வேண்­டு­மானால், அது குறை­வ­தற்கு வாய்ப்­புகள் உள்­ளன.

இந்­தி­யா­வுக்கு முக்­கி­யத்­துவம் அளிக் கும், இந்­தி­யாவின் பாது­காப்­புக்கு இடை­யூறை ஏற்­ப­டுத்­தாத கொள்­கையை, நடை­மு­றை­களை ஐ.தே.க. நடைமுறைப்­ப­டுத்த முனை­யலாம்.

அதே­வேளை, சீனாவின் எல்லாப் பொரு­ளா­தார முத­லீ­டு­க­ளையும் இந்­தியா எதிர்க்­க­வில்லை என்­ப­தையும் இங்கு சுட்­டிக்­காட்ட வேண்டும்.

தனது பாது­காப்­புக்கு அச்­சு­றுத்தல் ஏற்­ப­டு­கின்ற சூழலில் கூட, சீனாவின் பொரு­ளா­தாரத் தலை­யீ­டுகள் தமக்குப் பாதிப்பை ஏற்­ப­டுத்தும் என்று இந்­தியா வாய் திறக்­க­வே­யில்லை.

சீனா இன்று உலகின் இரண்­டா­வது பெரிய பொரு­ளா­தா­ரத்தைக் கொண்ட நாடாக விளங்­கு­கி­றது.

அடுத்த சில ஆண்­டு­க­ளி­லேயே சீனா, அமெ­ரிக்­காவை முந்திக் கொண்டு, உலகின் மிகப்­பெ­ரிய பொரு­ளா­தா­ரத்தைக் கொண்ட நாடாக மாறும் என்று கணிப்புகள் கூறு­கின்­றன.

அந்த வகையில், உலகில் எந்­த­வொரு நாடுமே சீனாவின் பொரு­ளா­தார தலை­யீ­டு­களில் இருந்து தப்­பிக்க முடி­யாத ஒரு சூழல் உரு­வாகி விட்­டது.

கைத்­தொழிற் புரட்­சிக்குப் பின்னர், பிரித்­தா­னிய உற்­பத்­தி­களும், இரண்டாம் உல­கப்­போ­ருக்குப் பின்னர், ஜப்­பானின் இலத்­தி­ர­னியல் சாத­னங்­களும், எப்­படி உலகம் முழு­வ­தற்கும் தேவைப்­பட்­டதோ, இப்­போது சீனப் பொருட்கள் உலகம் முழு­வ­தற்கும் தேவைப்­ப­டு­கின்­றன. சீன உற்­பத்­திகள் தான், அமெரிக்காவையும் இந்­தி­யா­வையும் கூட ஆட்டிப் படைக்­கின்­றன.

இந்­தி­யாவில் கூட இலட்­சக்­க­ணக்­கான கோடி ரூபாவை முத­லீடு செய்யத் தயா­ராக இருக்­கி­றது சீனா. அதற்­கான கத­வு­களை இந்­தி­யாவும் திறந்து விட்டிருக்­கி­றது.

ஆந்­தி­ராவில் தான், மிகப் பெரி­ய­ளவில் சீனா முத­லீடு செய்­வதில் ஆர்வம் கொண்­டி­ருக்­கி­றது.

மோடியின் வரு­கைக்குப் பின்னர், குஜ­ராத்தின் மீதும், அதன் கண் விழுந்­தி­ருக்­கி­றது. சீன நிறு­வ­னங்­களைப் பொறுத்­த­வ­ரையில், அவை எந்த உற்பத்திப்பெய­ரையும் தக்­க­வைத்துக் கொள்­வது அவற்றின் நோக்­க­மல்ல.

அவை உற்­பத்தி அதி­க­ரிப்பை மட்­டுமே கவ­னத்தில் கொள்­பவை.

அதனால் எந்த நிறு­வ­னத்தின் பெய­ருக்­கா­கவும், தமது உற்­பத்திப் பெயர்­களை விட்­டுக்­கொ­டுக்கத் தயா­ராக இருக்­கின்­றன.

pm_prez_2113840fதற்­போ­தைய இந்­திய அர­சாங்­கத்தின் மேக் இந்­தியா கொள்­கையும் கூட, சீனாவின் இந்த கொள்­கைக்கு ஏற்­றது தான். எந்தப் பொரு­ளாக இருந்­தாலும், எந்த நாட்டு நிறு­வ­னமும் உற்­பத்தி செய்­யலாம், ஆனால், அதனை இந்­தி­யாவில் செய்ய வேண்டும் என்­பதே மோடியின் திட்டம்.

சீனா அதற்குத் தயா­ரா­கவே இருக்­கி­றது.

எனவே, அடுத்து வரும் ஆண்­டு­களில் இந்­தி­யாவில் கூட சீனாவின் மிகப் பெரிய முத­லீ­டுகள் கொட்­டப்­படும் சூழல் உரு­வாகும்.

பொரு­ளா­தார ரீதி­யாக சீனா வளர்ந்து விட்ட நிலையில், அதன்­போக்கில் சென்றே தாமும் தலை நிமிர வேண்டும் என்று அமெ­ரிக்­காவும் இந்­தி­யாவும் நினைக்­கின்­றன.

இது விரும்­பியோ விரும்­பா­மலோ வந்து விட்­ட­தொரு சூழ்­நிலை.

சீனாவின் வளர்ச்சி, அத­னையும் அர­வ­ணைத்தே செல்ல வேண்­டிய சூழலை முக்­கிய வல்­ல­ர­சு­க­ளுக்கு ஏற்­ப­டுத்தி விட்­டது. அதனால், சீனாவின் பொருளாதா­ரத்­துடன் ஒத்­து­ழைக்க அமெ­ரிக்­காவும் சீனாவும் முடிவு செய்து விட்­டன.

இது பொரு­ளா­தா­ரத்தில் மட்டும் தான், பாது­காப்பில் அத்­த­கைய நிலைப்­பாட்டை இரு நாடு­களும் கொண்­டி­ருக்­க­வில்லை.

Chinas-Nuclear-Submarines_0அண்­மையில் சீன நீர்­மூழ்­கிகள் இரண்டு தடவை கொழும்பு வந்து சென்­றதை இந்­தியா மட்டும், உன்­னிப்­பாக கண்­கா­ணிக்­க­வில்லை.

அமெ­ரிக்­காவும் கூட அதனை எச்­ச­ரிக்­கை­யுடன் அவ­தா­னித்துக் கொண்­டி­ருக்­கி­றது. அண்­மையில் வொஷிங்­டனில் நடந்த இரு­நாட்டு அதி­கா­ரி­க­ளுக்கும் இடை­யி­லான பாது­காப்பு சார்ந்த உயர்­மட்டக் கூட்­டத்தில், இது­பற்றிக் கலந்­து­ரை­யா­டப்­பட்­டுள்­ளது.

அதன் விளை­வாக, அமெ­ரிக்க, இந்­தியக் கடற்­ப­டை­யினர் ஆண்டு தோறும் நடத்தி வரும், மலபார் பயிற்சி என்ற கடற்­படைப் போர் ஒத்­தி­கையை மேலும் விரி­வாக்கிக் கொள்ள இரண்டு நாடு­களும் தீர்­மா­னித்­துள்­ளன.

இதன்­படி விமா­னந்­தாங்கி கப்­பல்கள், அணு­சக்தி நீர்­மூழ்­கி­களும் இந்த மலபார் போர்ப்­ப­யிற்­சியில் பங்­கேற்­க­வுள்­ளன.

அடுத்த கட்­ட­மாக இரு­நாட்டு விமா­னப்­படை, கடற்­ப­டையை இணைத்துக் கொள்­ளவும், வேறும் சில நாடு­களை இதில் சேர்த்துக் கொள்­ளவும் முடிவு செய்யப்­பட்­டுள்­ளது.

இது கொழும்பில், சீனாவின் ஆதிக்­கத்தை பாது­காப்பு ரீதி­யாக எதிர்­கொள்­வ­தற்­கான திட்டம்.

ஆனால், இதற்கும் பொரு­ளா­தார ரீதி­யான முத­லீ­டு­க­ளுக்கும் இடையில் குழப்­பத்தை எற்­ப­டுத்திக் கொள்ள அமெ­ரிக்­காவும் சரி, இந்­தி­யாவும் சரி தயா­ராக இல்லை. அண்­மையில் ஜவ­ஹர்லால் நேரு நினைவுப் பேரு­ரை­யாற்­று­வ­தற்­காக கொழும்பு வந்­தி­ருந்த, பா.ஜ.க.வின் முக்­கிய பேச்­சா­ளர்­களில் ஒரு­வ­ரான எம்.ஜே.அக்பர், இலங்­கையில் சீனாவின் பொரு­ளா­தார முத­லீ­டுகள் குறித்து இந்­தியா கவலை கொள்­ள­வில்லை என்று குறிப்­பிட்­டி­ருந்தார்.

இதே கருத்து முன்­னரும் பல தட­வைகள் வெளி­யா­னது தான்,

நீர்­மூழ்­கிகள் பொருட்­களைக் கொண்டு வர­வில்லை என்றும் பாது­காப்­புடன் விளை­யாட வேண்டாம் என்றும் குறிப்­பிட்ட அவர், பொரு­ளா­தார ரீதி­யான உற­வு­களை துண்­டிக்க வேண்டும் என்று வலி­யு­றுத்­த­வில்லை.

எந்த நாடும் எல்லா நாடு­க­ளு­டனும் பொரு­ளா­தார உற­வு­களை வைத்துக் கொள்ளும் உரிமை கொண்­டவை என்­பதை சுட்­டிக்­காட்டி, சீனா­வு­ட­னான பொருளா­தார உற­வு­க­ளுக்கு குறுக்கே இந்­தியா நிற்­காது என்று அவர் கூறி­யி­ருந்தார்.

எனவே, சீனாவைத் துரத்தி விட்டு, இலங்கை தன்­னுடன் நெருக்­க­மாக இருக்க வேண்டும் என்று இந்­தியா எதிர்­பார்ப்­ப­தாக கருதக் கூடாது.

பொரு­ளா­தா­ரத்தில் போட்டி தான், வளர்ச்­சியைத் தீர்­மா­னிக்கும்.

போட்­டி­யில்லா விட்டால், எந்த நாட்­டி­னாலும் வளர முடி­யாது என்­பதை, இரண்டு தசாப்­தங்­க­ளுக்கு முன்­பி­ருந்த இந்­தியா நன்­றா­கவே உணர்ந்து கொண்டிருக்­கி­றது.  இப்­போது இந்­தி­யா­வுக்கு சீனா ஒரு சவா­லா­கவே இருந்தாலும், சீனா கொடுக்கின்ற கடும் போட்டி தான், இந்தியாவை இந்தளவுக்கு வளர்ச்சி பெறத் தூண்டியுள்ளது என்பதை மறுக்க முடியாது. சீனாவின் பிரமாண்ட வளர்ச்சி இந்தியாவுக்கு கொடுத்த அச்சம் தான், அது தன்னைச் சுய பரிசோதனை செய்து கொள்ளத் தூண்டியது.

அதன் விளைவு தான், இந்தியா தொழிற்துறையில் வளர்ந்து கொண்டிருப் பதற்குக் காரணம்.

எனவே, இலங்கையில் இருந்து சீனாவில் முதலீடுகளை துரத்துவதென்பது நடக்கக் கூடிய காரியமல்ல.

அதனை இந்தியா வரவேற்கப் போவது மில்லை. நீண்டகாலத் திட்டங்கள், முதலீடுகளுடனும் கடன்களுடனும் சீனா தொடர்புபட்டுள்ளதால், இது குறுகிய காலத்தில் நடந்து விடக் கூடிய காரியமல்ல. ஐ.தே.க. ஆட்சிக்கு வந்தாலும் சரி, வராது போனாலும், சரி, இலங்கை சீனாவின் பொருளாதார நிழலுக்குள் இருந்து இப்போதைக்கு விடுபடப் போவதில்லை.

– ஹரி­கரன்

Share.
Leave A Reply