யாழ்.வைத்தீஸ்வரா சந்திப்பகுதியில் விபத்தில் உயிரிழந்ததாக கூறப்பட்ட இளைஞன் அடித்தே கொலை செய்யப்பட்டுள்ளார் என யாழ்.போதனா வைத்தியசாலையின் திடீர் மரண விசாரணை அதிகாரி மு.உதயசிறி தெரிவித்தார்.
கடந்த 31 ஆம் திகதி இரவு யாழ். வைத்தீஸ்வரா சந்திப் பகுதியில் ஆட்டோ விபத்தில் ஓட்டுமடம் அராலி வீதியைச் சேர்ந்த புவனேந்திரராஜா ஜீவசாந்தன் (வயது 23) என்பவர் உயிரிழந்திருந்தார்.
இவ்இளைஞன் முச்சக்கர வண்டி விபத்தினாலேயே உயிரிழந்தார் என ஆரம்பத்தில் கூறப்பட்டது.
சம்பவ தினமன்று பிரஸ்தாப இளைஞன் குறித்த பகுதியிலுள்ள கடைக்கு வீதியால் நடந்து சென்றுள்ளார்.
இதன்போது ஆட்டோ ஒன்று வேகமாக வந்ததாகவும், பின்னர் அப்பகுதியில் பலத்த சத்தம் கேட்டதாகவும் இதன்பின் அயலவர்கள் அங்கு சென்று பார்த்தபோது குறித்த இளைஞர் இரத்த வெள்ளத்தில் குற்றுயிராக வீழ்ந்து கிடந்ததாகவும் கூறப்பட்டது.
பின்னர் யாழ்.போதனா வைத்தியசாலையில் குறித்த இளைஞன் உடனடியாக அனுமதிக்கப்பட்டு சிகிச்சையளிக்கப்பட்ட போதிலும் சுயநினைவற்ற நிலையிலேயே குறித்த இளைஞன் நேற்று மதியம் உயிரிழந்துள்ளார்.
குறித்த இளைஞனின் பிடரிப்பகுதியில் பெரியகாயம் காணப்பட்டதாகவும், அக்காயம் ஆயுதமொன்றினால் தாக்கப்பட்டதனை போன்றுள்ளது.
மூளைப் பகுதியில் இரத்தப் பெருக்கு ஏற்பட்டுள்ளதோடு, சுயநினைவினை இழக்கும் அளவுக்கு காயம் ஏற்பட்டுள்ளது எனவும் மரண விசாரணையில் தெரியவந்துள்ளது.
இவ் உயிரிழப்பானது விபத்தால் ஏற்பட்டதல்ல என்பதால் யாழ்.பொலிஸ் நிலைய குற்றவியல் பொலிஸாருக்கு இது தொடர்பில் விசாரணை மேற்கொண்டு நீதி மன்றில் அறிக்கை சமர்ப்பிக்குமாறு திடீர் மரண விசாரணை அதிகாரி பொலிஸாரிடம் தெரிவித்துள்ளார்.
வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த இளைஞனுக்கு வாள் வெட்டு! வடமராட்சியில் சம்பவம்!!
04-01-2015
வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த இளைஞனை வீடு புகுந்து வேறு இரு இளைஞர்கள் வாளால் வெட்டிக்காயப்படுத்தியுள்ளனர்.
இச்சம்பவம் புலோலி மத்தி அல்வாயில் நேற்றுமுன்தினமிரவு இடம்பெற்றுள்ளது.
சம்பவத்தில் அதேயிடத்தைச் சேர்ந்த நவரட்ணம் கமலநாதன் (வயது 23) என்பவரே வாள் வெட்டுக்கு இலக்கானவராவார். வாள்வெட்டுக்கு இலக்கான பிரஸ்தாப நபர் உடனடியாக மந்திகை அரசினர் வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டார்.
இதேவேளை சந்தேக நபர் களைத்தேடும் பணியில் பொலிஸார் ஈடுபட்டுள்ளதாகவும், குறித்த சந்தேக நபர்கள் பல்வேறு குற்றச் செயல் களுடன் தொடர்புபட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
சுழிபுரத்தில் பரிதாபம் – தாயுடன் சோ்ந்து கிணற்றில் வீழ்ந்த இரண்டு வயதுக் குழந்தை பலி
05-01-2014
கிணற்றுக்குள் தாயுடன் தவறிவிழுந்த 2 வயதுக் குழந்தை ஒன்று பரிதாபமாக உயிரிழந்துள்ளது. இச்சம்பவம் நேற்று பிற்பகல் 3 மணியளவில் சுழிபுரம் பகுதியில் இடம்பெற்றது.
தனது குழந்தைத் தூக்கியவாறு அயல் வீட்டிற்குச் செல்வதற்காக வேலி எல்லையில் உள்ள கிணற்றுக் கப்பியின் கயிற்றைப் பிடித்தவாறு சென்ற தாய், கப்பி கட்டியிருந்த மரம் முறிந்ததில் கிணற்குள் பிள்ளையுடன் விழுந்தார்.
சத்தம் கேட்டு விரைந்து வந்த அயவலர்கள் அவரைக் காப்பாற்றியுள்ளனர். பின்னர் அவரது குழந்தையையும் மீட்டுள்ளனர்.
உடனடியாக சுழிபுரம் வைத்தியசாலைக்குக் கொண்டு செல்லப்பட்ட குழந்தை மேலதிக சிகிச்சைச்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு எடுத்துச்செல்லப்பட்டது.
எனினும் அந்தக் குழந்தை உயிரிழந்துவிட்டதாக அங்கு தெரிவிக்கப்பட்டது. சுழிபுரம் மேற்கைச் சேர்ந்த வேணுதாஸ் டார்வின் என்ற இரண்டு வயதுக் குழுந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளது.