ஊவா மாகாண சபை அமைச்சர் செந்தில் தொண்டமானை கைது செய்யுமாறு பண்டாரவளை மஜிஸ்திரேட் நீதிமன்றம் பிடியாணை உத்தரவு பிறப்பித்துள்ளது.

 ஊவா மாகாண அமைச்சர் செந்தில் தொண்­டமான், தபால் ஊழியர் ஒரு­வரைத் தாக்­கி­யதாக பதுளை – எல்ல பொலிஸ் நிலை­யத்தில் முறைப்­பாடு செய்­யப்­பட்­டுள்­ளது.

பதுளை – எல்ல தபால் நிலை­யத்தைச் சேர்ந்த பெரி­ய­சாமி ஞான­சே­கரன் என்ற தபால் ஊழி­யரே இவ்­வாறு தாக்­கு­த­லுக்­குள்­ளாகி பதுளை வைத்­தி­ய­சா­லையில் அனு­ம­திக்­கப்­பட்­டுள்ளார்.

குறித்த தபால் ஊழியர் எல்ல நியூபோர்ட் தோட்­டத்தில் வாக்­காளர் அட்டை தபால்­களை விநி­யோ­கித்து விட்டுத் திரும்­பிக்­கொண்­டி­ருந்­த­வே­ளை­யி­லேயே இவ்­வாறு தாக்­கப்­பட்­டுள்ளார்.

தன்னைத் தாக்­கும்­போது தன்­னிடம் 35 வாக்­காளர் அட்­டைகள் இருந்­த­தா­கவும், அந்த வாக்­காளர் அட்­டை­களும் தன்­னி­ட­மி­ருந்த கைய­டக்கத் தொலை­பேசி மற்றும் கழுத்­தி­லி­ருந்த தங்கச் சங்­கிலி என்­ப­வற்­றையும் காண­வில்லை எனவும் அவர் பொலிஸ் நிலை­யத்தில் முறை­பாடு செய்­துள்ளார்.

இதே­வேளை, தனது மகனின் முகத்தில் செந்தில் தொண்­டமான் தாக்­கி­ய­தா­கவும் அதன்­போது , மகன் மயங்கி வீழ்ந்­த­தா­கவும் முகத்­தி­லி­ருந்து இரத்தம் கொட்­டி­ய­தா­க­வும்­த­னது கண­வரைப் பறி­பொ­டுத்து இரண்டு மாத கால­மா­க­வில்லை. இந்­நி­லை­யி­லேயே மகன் மீது தாக்­குதல் நடத்­தப்­பட்­டுள்­ளது என தாக்­கு­த­லுக்­குள்­ளா­ன­வரின் தாயார் கண்ணீர் மல்கத் பொலிஸாரிடம் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, அமைச்சர் செந்தில் தொண்டமான் இந்தத் தாக்குதலை தான் மேற்கொள்ளவில்லையென மறுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

இலங்கை: எதிர்க்கட்சி ஆதரவாளர்கள் 3 பேர் துப்பாக்கிச்சூட்டில் காயம்
04-01-2014
150102163437_maithripala_attack_pelmadulla_512x288_bbc_nocredit

இலங்கையின் இரத்தினப்புரி மாவட்டம் கஹவத்த நகரில் எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவின் கூட்டத்துகான ஏற்பாடுகளை மேற்கொண்டிருந்த எதிர்க்கட்சி ஆதரவாளர்கள் மீது திங்களன்று அதிகாலை துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப் பட்டுள்ளதாக தேர்தல் கண்காணிப்பில் ஈடுபட்டுள்ள கபே அமைப்பு தெரிவித்துள்ளது.

திங்களன்று அதிகாலை 2.15 மணியளவில் இந்த துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டதாக அந்த அமைப்பின் நிறைவேற்று பணிப்பாளர் ரஜித் கீர்த்தி தென்னகோன் தெரிவித்தார்.

ஜீப்களில் வந்த சிலர் இந்த துப்பாக்கிப் பிரயோகத்தை மேற்கொண்டுள்ளதாக கூறிய அவர் முன்று எதிர்க் கட்சி ஆதரவாளர்கள் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப் பட்டுள்ளதாக தெரிவித்தார்.

அந்த சம்பவத்துக்குப் பிறகு எதிர்த்தரப்பு ஆதரவாளர்கள் கஹவத்த நகரில் சுமார் நான்கு மணி நேரத்துக்கும் மேலாக ஆர்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளதாக தெரிவித்த கீர்த்தி தென்னகோன், அருகில் அமைக்கப் பட்டிருந்த ஆளும் சுதந்திர கூட்டமைப்பின் தேர்தல் பிரச்சார அலுவலகமொன்றை தாக்கி தீக்கிரையாக்கியுள்ளதாகவும் தெரிவித்தார்.

இதற்கு மேலதிகமாக அயகம , கம்போல, ககிராவ, கலேவெல, வெல்லம்பிட்டி, கொலன்னாவ ஆகிய பகுதிகளில் இருந்தும் எதிர்க் கட்சிகளின் பொது வேட்பாளரின் ஆதரவாளர்களுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட வன்முறை சம்பவங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் ரஜித் கீர்த்தி தென்னகோன் தெரிவித்தார்.

திருகோணமலையிலும் தாக்குதல்

இந்த சம்பவங்கள் குறித்து விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக தெரிவித்த இலங்கை காவல்துறையின் ஊடக பேச்சாளர் அஜித் ரோகன, திருகோணமலைப் பகுதியில் பிரதித் தேர்தல் அதிகாரியொருவர் தாக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

திருகோணமலை பகுதியில் அமைக்கப்பட்டிருந்த ஜனாதிபதி வேட்பாளர் ஒருவரின் டிஜிட்டல் விலம்பரப் பலகையொன்று தொடர்பாக ஆராய்வதற்கு சென்ற தேர்தல் அதிகாரி ஒருவரே இவ்வாறு தாக்கப்பட்டுள்ளதாகக் கூறிய அஜித் ரோகன, இந்த தாக்குதல் தொடர்பாக, காவல்துறை விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் தெரிவித்தார்.

Share.
Leave A Reply