அதிபர் தேர்தலில் வெற்றி பெற்றால் வடக்கில் இருந்து இராணுவத்தை விலக்கிக் கொள்ளும் எண்ணம் தமக்குக் கிடையாது என்று எதிரணியின் பொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
கொழும்பில் இன்று நண்பகல் நடந்த செய்தியாளர் சந்திப்பில் கருத்து வெளியிட்ட அவர்,

“வரும் வியாழக்கிழமை நடக்கவுள்ள அதிபர் தேர்தலில் நான் வெற்றி பெற்றால், தேசிய பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டியது எனது முழுப் பொறுப்பாகும்.

தேசிய பாதுகாப்புக்கே முன்னுரிமை கொடுக்கப்படும். நாட்டைப் பிரிக்கவோ, விடுதலைப் புலிகள் மீண்டும் தலைதூக்கவோ இடமளிக்கப்படமாட்டது.

நாட்டைப் பிரிப்பது தொடர்பாகவோ, அதிகாரங்களைப் பகிர்வது தொடர்பாகவோ, தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடனோ அல்லது சிறிலங்கா முஸ்லிம் காங்கிரசுடனோ நாம் எந்த உடன்பாடு செய்து கொள்ளவில்லை.

100 நாள் செயற்திட்டத்தை அடிப்படையாக கொண்ட தேர்தல் அறிக்கையின் கீழ் தான் அரசியல் கட்சிகள் எமக்கு ஆதரவளிக்க இணக்கம் தெரிவித்தன.

சிறிலங்காவின் வெளிவிவகாரக் கொள்கையை நான் பலப்படுத்துவேன். எல்லா நாடுகளுடனும் நல்ல உறவுகைளைப் பேணி, அவற்றின் இதயத்தில் இடம்பிடிப்பேன்.

பௌத்த மதத்துக்கு முன்னுரிமை அளிக்கப்படும். ஏனைய மதங்களுக்கு மதிப்பளிக்கப்படுவதையும், அங்கீகாரம் அளிக்கப்படுவதையும், எதிரணி உறுதி செய்யும்” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

தமிழர்களின் கவனத்துக்கு..


mahinda-maithiri-620x348

//”வடக்கில் இருந்து இராணுவத்தை விலக்கமாட்டோம்”,  நாட்டைப் பிரிக்கவோ அல்லது அதிகாரங்களை பகிரமாட்டோம் …பௌத்த மதத்துக்கு முன்னுரிமை அளிப்போம் //

இதுதான்… மைத்திரி  அணியினரின் உறுதியான  கொள்கை. இதுவே  மகிந்தவின் கொள்கையும் கூட.  இதைவிட  தமிழர்கள் அவர்களிடமிருந்து  பெரிதாக எதையும்  எதிர்பார்க்க முடியாது என்பது  தெட்டத் தெளிவாக தெரிகின்றது.

திரும்ப திரும்ப  மைத்திரி, மகிந்த   அணியினர் பிரச்சார மேடைகளில்  இதைதான் கூறிக்கொண்டிருக்கிறார்கள்.  தமிழர்களாகிய  நாங்கள் இதை கவனத்தில்  எடுத்துக்கொள்ளவேண்டும்.

சகல வசதிகளுடனும்  வாழும்…சம்பந்தன , சுமந்திரன் , விக்கினேஸ்வரன், மனோகணேசன் போன்ற கொழும்பு வாசிகள்  சொல்லுகிறார் என்பதற்காக  மைத்திரிக்காக வாக்களிக்கவேண்டாம்.

மைதிரிக்கோ, மகிந்தவுக்கோ வாக்களிப்பதை தவிர்த்து… தமிழர்கள்  இத்தேர்தலில் வாக்களிப்பதிலிருந்து விலகியிருக்கவேண்டும்.  இன்று  நம்மிடமிருக்கும்   ஒரே   சொத்து   நமது  “வாக்குகள்”   மட்டுமே.

இதுவரை  காலமும்.. தமிழ் தலைமைகள்  “சிங்கள  ஆட்சியாளர்களை  ஆட்சியில் அமர்த்துவதற்கும் அல்லது அவர்களை ஆட்சியிலிருந்து  அகற்றுவதற்கும்  தமிழர்களின்  வாக்குகளை  பயன்படுத்தினார்களேயொழிய, அவர்களிடமிருந்து எதையாவது..  60வருடகால  “அரசியல், ஆயுத”  போராட்டத்தில்  பெற்றுத்  தந்திருக்கிறார்களா?

ஆகவே … நமது பொன்னான வாக்குகளை   பயன்படுத்தி  “சிங்கள பேரினவாதிகளை”  ஆட்சியில் அமர்த்திவிட்டு, பின்பு அவர்களிடம்  பிச்சை பாத்திரம் ஏந்தி நிற்கவேண்டாம்

Share.
Leave A Reply