சென்னை: உதயநிதி – நயன்தாரா நடித்துள்ள ‘நண்பேன்டா’ திரைப்படம் ஏப்ரல் 2ம் தேதி ரிலீசாவதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப் பட்டுள்ளது. பாஸ் என்கிற பாஸ்கரன் படத்தில் ஆர்யா – சந்தானம் இருவரும் பேசிக்கொள்ளும் பிரபல வசனம் ‘நண்பேன்டா’.
அந்த வார்த்தையினையே படத்தலைப்பாகக் கொண்டு, உதயநிதி, நயன்தாரா மற்றும் சந்தானம் நடிப்பில் உருவாகியுள்ளது இப்படம். எம்.ராஜேஷிடம் இணை இயக்குநராக இருந்த ஜெகதீஷ் இப்படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமாகிறார்.
இப்படத்தில் கருணாகரன், சூஸன், மனோபாலா, ஷெரீன், பட்டிமன்றம் ராஜா, லொள்ளுசபா மனோகர் ஆகியோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்1ikk1_1729370g

ஹாரிஸ் இசை…
ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்துள்ள இப்படத்துக்கு பாலசுப்பிரமணியெம் ஒளிப்பதிவு செய்துள்ளார். உதயநிதியின் ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனம் இப்படத்தைத் தயாரித்துள்ளது.07-1420603114-nanbenda-photos-60

காமெடி விருந்து…
சமீபத்தில் இப்படத்தின் பாடல்களும், டிரைலரும் வெளியிடப்பட்டது. அவற்றிற்கு ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. டிரைலர் மூலமே படம் நிச்சயம் காமெடி விருந்து தரப் போகிறது என்பது உறுதியாகி விட்டது.
07-1420603147-nayantara-udhanidhi-nanbebd

ஏப்ரல் 2ம் தேதி ரிலீஸ்…
அதனைத் தொடர்ந்து தற்போது இப்படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப் பட்டுள்ளது. இது தொடர்பாக உதயநிதி ஸ்டாலின் தனது டுவிட்டர் பக்கத்தில் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். அதில், நண்பேன்டா படம் உலகளவில் ஏப்ரல் 2ம் தேதி ரிலீஸ் செய்யப் படுவதாக அவர் தெரிவித்துள்ளார்.
07-1420603171-nanbenda--s-s-600

இப்பவே பிசி….
ஏப்ரல் 2ம் தேதி தான் படம் ரிலீஸ் செய்யப் படுகிறது என்றாலும், இப்போதே தியேட்டர்களைப் புக் செய்யும் வேலைகளில் உதயநிதி பிசியாகி விட்டதாகக் கூறப்படுகிறது.
07-1420603209-nayathara-udhayanidhi-nanbe

இது கதிர்வேலன் காதல்...
ஏற்கனவே, உதயநிதி – நயன்தாரா ஜோடி இது கதிர்வேலன் காதல் படத்தில் இணைந்து நடித்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Share.
Leave A Reply