ஜனாதிபதி தேர்தலுக்கான வாக்களிப்பு நடவடிக்கைகள் இடம்பெற்று வருகின்ற நிலையில் அம்பாந்தோட்டை, மெதமுலன வாக்களிப்பு நிலையத்துக்குச் சென்ற ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் மகன்களில் ஒருவரான யோசித்த ராஜபக்ஷ வாக்குச் சாவடிக்குள் வைத்து தனது குடும்பத்தினருடன் செல்பி எடுத்துள்ளார்.

mahinda-family

வாக்குச் சாவடிகளுக்குள் யாரும் புகைப்படங்கள் எடுக்க முடியாது என தேர்தல்கள் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்திருந்த போதும் வாக்குச் சாவடிக்குள் வைத்தே இவர் செல்பி எடுத்திருப்பது குறிப்பிடத்தக்கது.

யாழில் சுமூகமான முறையில் வாக்களிப்பு
08-01-2014
police-2யாழில் சுமூகமான முறையில் வாக்களிப்பு நடவடிக்கைகள் நடைபெற்று வருகின்றன.

மக்கள் அனைவரும் ஆர்வத்துடன் வாக்களித்து வருகின்றனர்.

இதன்படி தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா யாழ். கொல்லங்கலட்டி சைவத்தமிழ் வித்தியாலயத்தில் வாக்களித்தார்.

jaffna

இதேவேளை கட்டைப்பிராய் கலைமதி சனசமூக நிலையத்தில் சுரேஷ் பிரமேசந்திரன் வாக்களித்தார்.

 

Share.
Leave A Reply