கொழும்பில் இன்று மாலை நடைபெற்ற சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் கூட்டத்தில், கட்சியின் புதிய தலைவராக சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவின் இல்லத்தில் நடந்து வரும், இந்தக் கூட்டத்தில் கட்சியின் புதிய பொதுச்செயலராக துமிந்த திசநாயக்கவும், பொருளாளராக ஜனக பண்டார தென்னக்கோனும் தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.

சந்திரிகா குமாரதுங்க மற்றும் மகிந்த ராஜபக்ச ஆகியோர் கட்சியின் காப்பாளர்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர்.

இந்தக் கூட்டத்தில் உரையாற்றிய நாடாளுமன்ற உறுப்பினர் அர்ஜுன ரணதுங்க, 30இற்கும் மேற்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள் புதிய அரசாங்கத்துக்கு ஆதரவளிக்க முன்வந்துள்ளதாகத் தெரிவித்தார்.

ministers_meet-002இந்தக் கூட்டத்தில், மகிந்த ராஜபக்சவின் அரசில் அமைச்சர்களாக பதவி வகித்த 20 நாடாளுமன்ற உறுப்பினர்களும் கலந்து கொண்டனர். சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் யாப்புப் படிஅரசாங்கத்தில் உயர்பதவி வகிக்கும் கட்சி உறுப்பினரே, கட்சியின் தலைவராகப் பதவி வகிப்பார் என்று கூறப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

ministers_meet-001இதற்கிடையே, மகிந்த ராஜபக்ச தலைமையில் சுதந்திரக் கட்சியின் மற்றொரு மத்திய குழுக் கூட்டமும் நடந்து வருகிறது.

Share.
Leave A Reply