சிறி­லங்கா சுதந்­திரக் கட்­சியின் 10 இற்கும் மேற்பட்ட பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்கள் ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேனவுக்கு ஆத­ர­வ­ளித்­துள்­ள­துடன் கட்­சியின் புதிய தலை­வராக அவரை தெரிவு செய்­துள்­ள­தா­கவும் அறி­வித்துள்­ளனர்.

அத்­துடன் கட்­சியின் செய­லா­ள­ராக துமிந்த திசா­நா­யக்­கவும் தேசிய அமைப்­பா­ள­ராக ஜனக பண்­டார தென்­னக்­கோனும் பொரு­ளா­ள­ராக

எஸ்.பி. நாவின்­னவும் போஷ­கர்­க­ளாக முன்னாள் ஜனா­தி­ப­தி­க­ளான சந்­தி­ரிகா குமா­ர­துங்க மற்றும் மஹிந்த ராஜ­பக் ஷ ஆகியோரும் தெரிவு செய்­யப்­பட்­டுள்­ள­தா­கவும் அறி­விக்­கப்­பட்­டது.

மைத்­தி­ரி­பால சிறி­சே­னவின் உத்­தி­யோ­க­ பூர்வ இல்­லத்தில் சிறி­லங்கா  சுதந்­திரக் கட்­சியின் மத்­திய குழுக் கூட்டம் நேற்று மாலை இடம்­பெற்­ற­தா­கவும் அதில் குழுவின் பெரும்­பான்மை உறுப்­பி­னர்கள் ஆத­ர­வுடன் இந்த நிய­ம­னங்கள் செய்யப்பட்டதா­கவும் தகவல் அளிக்­கப்­பட்­டது.

பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்­க­ளான எஸ்.பி.நாவின்ன, பிய­சேன கமகே, சரத் அமு­னு­கம, ரெஜினோல்ட் குரே, அதா­வுட செனவிரத்ன, ஜனக பண்­டார தென்­னகோன்,

விஜித் விஜி­த­முனி சொய்சா, ஜகத் புஷ்­ப­கு­மார மற்றும் வட மேல் மாகாண முத­ல­மைச்சர் தயா­சிறி ஜய­சே­கர இச் செய்தியாளர் மாநாட்டில் கலந்து கொண்டு தமது ஆத­ரவை ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சே­ன­வுக்கு அளிப்பதாக அறிவித்தனர்.

அந்த செய்­தி­யாளர் மாநாட்டில் கட்­சியின் செய­லா­ள­ராக அறி­விக்­கப்­பட்­டுள்ள துமிந்த திசா­நா­யக்க குறிப்­பி­டு­கையில்;

சிறீ­லங்கா சுதந்­திரக் கட்­சிக்கு இன்று புனித நாள். மத்­திய குழுவின் பெரும்­பான்மை உறுப்­பி­னர்கள் ஒன்­று­கூடி சில தீர்­மானங்களை எடுத்­துள்ளோம்.

அதன்­படி ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன கட்­சியின் புதிய தலை­வ­ராக மத்­திய குழுவால் ஏக­ம­ன­தாக நியமிக்கப்பட்டுள்ளார். இது கட்­சிக்கு புதிய விட­ய­மல்ல.

சுதந்­திரக் கட்­சியின் உறுப்­பினர் ஒருவர் நாட்டின் உயர் பத­விக்கு போட்­டி­யிட்டு வெற்றி பெற்றால் அவர் சுதந்­திரக் கட்­சியின் தலை­வ­ராக வர வேண்டும் என்­பது கட்­சியின் யாப்பில் உள்ள விட­ய­மாகும்.

அந்த வகை­யி­லேயே முன்னாள் ஜனா­தி­பதி மகிந்த ராஜ­பக்ச ஜனா­தி­ப­தி­யா­கி­யதும் சந்­தி­ரி­கா­வுக்கு பதி­லாக தலை­வ­ராக தெரிவானார்.

இந்­நி­லையில் தற்­போதும் அதே நிலைமை ஏற்­பட்­டுள்­ளது. கட்­சியின் செய­லா­ள­ரா­க­வி­ருந்த மைத்­தி­ரி­பால சிறி­சேன ஜனாதிபதி தேர்­தலில் போட்­டி­யிட்டு வெற்றி பெற்­றதால் அவரை கட்­சியின் தலை­வ­ராக யாப்பின் படி நிய­மித்­துள்ளோம்.

அத்­துடன் கட்­சியின் செய­லா­ள­ராக துமிந்த திசா­நா­யக்க ஆகிய நானும் தேசிய அமைப்­பா­ள­ராக ஜனக பண்­டார தென்­ன­கோனும் பொரு­ளா­ள­ராக எஸ்.பி. நாவின்­னவும் நிய­மிக்­கப்­பட்­டுள்ளோம். முன்னாள் ஜனா­தி­ப­தி­க­ளான மகிந்த ராஜ­பக்ச, சந்தி­ரிகா குமா­ர­துங்க ஆகியோர் கட்­சியின் போஷ­கர்­க­ளாக நிய­மிக்­கப்­பட்­டுள்­ளனர்.

எமது இந்த தீர்­மா­னங்­க­ளுக்கு பெரும்­பான்­மை­யான மத்­திய குழு உறுப்­பி­னர்கள் அங்­கீ­காரம் வழங்­கி­யுள்­ளனர். அந்த வகையில் சுதந்­திரக் கட்சி இன்று புதிய யுகம் படைக்­கி­றது.

ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பா­லவின் தெரி­வா­னது அனைத்து மக்­க­ளி­னாலும் மேற்­கொள்­ளப்­பட்­டுள்­ளது. அனைத்து இன மக்­களும் இணைந்து எமது தலை­வரை தெரிவு செய்­துள்­ளனர். எனவே அவ­ருக்கு அனை­வரும் செவி சாய்க்க வேண்டும் என்றார்.

MPsபைசர் முஸ்தபா கருத்து

பாரா­ளு­மன்ற உறுப்­பினர் பைசர் முஸ்­தபா குறிப்­பி­டு­கையில், சுதந்­திரக் கட்­சியின் யாப்பின் 12 அ (1) பிரிவின் படி ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சே­னவை சுதந்­திரக் கட்­சி­யி­லி­ருந்து விலக்­கி­யதை மத்­திய குழுவின் பெரும்­பான்மை உறுப்­பி­னர்கள் சூன்யப்­ப­டுத்­தி­யுள்­ளனர்.

அவ்­வாறு சூன்­யப்­ப­டுத்­தப்­பட்ட பின்னர் அதற்குப் பின்னர் எந்த செயற்­பாடும் செல்­லு­ப­டி­யா­காது. உதா­ர­ண­மாக ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பா­லவை கட்­சி­யி­லி­ருந்து விலக்­கி­யமை சூன்­யப்­ப­டுத்­தப்­பட்­டுள்­ளதால் அதன் பின்னர் அக் கட்­சிக்கு புதிய செய­லாளர் நிய­மிக்­கப்­பட்­டமை என்­பன செல்­லு­ப­டி­யற்­ற­தா­கி­விடும்.

அது மட்­டு­மன்றி சுதந்­திரக் கட்சியின் உறுப்பினர் ஒருவர் நாட்டின் உயர் பதவிக்கு போட்டியிட்டு வெற்றி பெற்றால் அவர் சுதந்திரக் கட்சியின் தலைவராக வர வேண்டும் என்பது கட்சியின் யாப்பில் உள்ள விடயமாகும். அதன்படியே நாங்கள் இதனைச் செய்துள்ளோம்.

அந்த வகையில் கட்சியின் யாப்பின் படி தற்போது நாங்கள் கட்சிக்கான ஏனைய நிர்வாக உறுப்பினர்களையும் தெரிவு செய்துள்ளோம். மத்திய குழு உறுப்பினர்களில் பெரும்பாலானோர் எம்முடன் இணைந்து இந்தத் தீர்மானத்தை எடுத்துள்ளனர் என்றார்.

சுதந்­திரக் கட்­சி மஹிந்த ராஜ­பக்ஷவே! மத்திய குழு தீர்மானம் என்கிறார் சிறி­பால டி சில்வா
makintha-7

ஸ்ரீலங்கா சுதந்­திரக் கட்­சியின் தலை­வ­ராக முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜ­பக் ஷ நீடிப்­ப­தற்கு கட்­சியின் மத்­திய குழு அனு­மதி வழங்கி­யுள்­ள­தா­கவும் 41 மத்­தி­ய­குழு உறுப்­பி­னர்­களே இந்த அனு­ம­தியை நேற்று மாலை 4.00 மணிக்கு ஏகமன­தாக வழங்­கி­ய­தா­கவும் முன்னாள் அமை ச்சர் நிமல் சிறி­பால டி சில்வா தெரி­வித்தார்.

ஸ்ரீ லங்கா சுதந்­திர கட்­சியின் தலை­மை­யக கட்­டி­டத்தில் நேற்று பிற்­பகல் முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜ­பக்ஷ தலை­மையில் இடம்­பெற்ற கட்­சியின் நிறை­வேற்று சபை கூட்­டத்தின் பின்னர் இடம்­பெற்ற ஊட­க­வி­ய­லாளர் சந்­திப்பில் கல்ந்­து­கொண்டு கருத்து தெரி­விக்கும் போதே அவர் இதனை தெரி­வித்தார்.

இதன் போது அவர் மேலும் தெரி­வித்­த­தா­வது,

ஸ்ரீ லங்கா சுதந்­திர கட்­சியின் தலை­வ­ராக மைத்­தி­ரி­பால சிரி­சே­னவும், செய­லா­ள­ராக துமிந்த திஸா­நா­யக்­கவும் நிய­மிக்­கப்­பட்­டுள்­ள­தாக சில உறுப்­பி­னர்கள் சேர்ந்து ஊட­கங்­க­ளுக்கு தெரி­வித்­துள்­ளனர்.

இது முற்­றிலும் பொய்­யான தக­வ­லாகும். ஸ்ரீ லங்கா சுதந்­திர கட்­சியின் பெரும்­பா­லான மத்­திய சபை உறுப்­பி­னர்கள் அதா­வது 41 பேர் ஒன்று கூடி நாம் மஹிந்த ராஜ­ப­க்ஷவை கட்­சியின் தலை­வ­ராக நாம் தெரிவு செய்­துள்ளோம்.

ஸ்ரீ லங்கா சுதந்­திர கட்­சியின் தலைமை பத­விக்கு ஐக்­கிய மக்கள் சுதந்­திர கூட்­ட­மிப்பு சார்பில் ஜனா­தி­பதி பத­விக்கு போட்டியிட்ட ஒரு­வ­ரையே தெரிவு செய்ய முடியும். மாற்­ற­மாக கட்சி அங்­கீ­க­ரித்த உறுப்­பி­னரை எதிர்த்து போட்­டி­யிட்ட ஒருவர் தெரிவு செய்­யப்­பட முடி­யாது. அதற்­கான வாய்ப்பும் இல்லை.

சிலர் கூடி ஸ்ரீலங்கா சுதந்­திர கட்­சியின் செய­லாளர், தலை­வரை அறி­வித்­துள்­ளமை போலி­யா­ன­தாகும். எங்­க­ளு­ட­னேயே பெரும்­பான்­மை­யானோர் உள்­ளனர். 53 உறுப்­பி­னர்­களில் 41 பேர் எம்­மு­ட­னேயே உள்­ளனர். என்றார்.

இதன் போது உரை­யாற்­றிய முன்னாள் அமிச்சர் அனுர பிரி­ய­தர்­ஷன யாப்பா கருத்து தெரி­விக்­கையில்:

ஸ்ரீலங்கா சுதந்­திர கட்­சியின் செய­லாளர் நானே. தலை­வ­ராக மஹிந்த ராஜ­பக்ஷ தொடர நாம் அனு­ம­தி­ய­ளித்­துள்ளோம். எமது மத்­திய குழு இங்கு கூடி இதற்­கான அனு­ம­தியை வழங்­கி­யுள்­ளது. என்றார்.

இதனை அடுத்து உரை­யாற்­றிய ஐக்­கிய மக்கள் சுதந்­திர கூட்­டைப்பின் செய­லாளர் சுசில் பிரேம் ஜயந்த இவ்­வாறு தெரிவித்தார்.

சிலர் எங்கோ ஒரு இடத்தில் ஒன்று கூடி­விட்டு ஸ்ரீலங்கா சுதந்­திர கட்­சியின் தலைவர், செய­லாளர் என சில­ரது பெயர்­களை அறி­வித்­துள்­ளனர்.

இது ஒரு சதி முயற்­சி­யாகும். 40 வரு­டங்கள் ஸ்ரீலங்கா சுதந்­திர கட்­சியின் உறுப்­பி­ன­ரா­கவும் 13 வரு­டங்கள் செய­லா­ள­ரா­கவும் இருந்த செய­லாளர் ஜனா­தி­பதி தேர்­தலில் போட்­டி­யிட சென்ற போது நாம் அந்த சதி மு­யற்சி தொடர்பில் எதிர்வு கூறினோம்.

இப்­போது துமிந்த திஸா­னா­யக்­கவை ஸ்ரீலங்கா சுதந்­திர கட்­சியின் செய­லா­ள­ராக அவர்கள் சிலர் ஊட­கங்­க­ளிடம் அறி­வித்துள்­ளனர்.

இதி­லி­ருந்து ஸ்ரீலங்கா சுதந்­திர கட்­சியை இரண்­டாக பிளவு படுத்த எடுக்­கப்ப்டும் சதி அம்­ப­ல­மா­கின்­றது அல்­லவா? இங்கே 113 பாரா­ளு­மன்ற உருப்­பி­னர்கள் உள்­ளனர்.
SLFP(1)அனுர பிரியதர்ஷன யாப்பா.
இவர்கள் அனை­வரும் மஹிந்த ராஜப்ச்க்ஷவையே ஆதரிக்கின்றனர். கட்சியின் மத்திய குழுவின் பெரும்பான்மையானோரின் ஆதர்வுடன் மஹிந்த ராஜபச்க்ஷவையே தலைவராக நாம் தெரிவு செய்துள்ளோம். தலைவர் மஹிந்த ராஜபக்ஷ, செயலாளர் அனுர பிரியதர்ஷன யாப்பா. இதில் எந்த மாற்றமும் இல்லை. என குறிப்பிட்டார்.

Share.
Leave A Reply