தலை வலியை போலவே பல் வலியும் தனக்கு வந்தால் தான் தெரியும் என்பார்கள் பல்லை அழகுக்கான ஒரு உறுப்பாக நாம் பார்க்கிறோம். இது தவறு பல் எம்முடைய உடல் ஆரோக்கியத்தினை எடுத்தியம்பும் இன்டிகேட்டர் என்று தான் கூறவேண்டும்.
அது மேல் வரிசைப் பற்களாக இருந்தாலும் சரி, அல்லது கீழ் வரி சைப் பற்களாக இருந்தாலும் சரி பற்கள் உடல் உறுப்புகளின் ஆரோக்கிய நிலையை எடுத்துக்காட்டுகின்றன.
குறிப்பாக முன் நான்கு பற்கள் சிறு நீரகம், சிறுநீர்ப்பை ஆகியவற்றையும், அதற் கடுத்துள்ள சிங்கப்பல் என குறிப்பிடப்படும் ப்ரீமோலர் பற்கள் இரண்டும் கல்லீரல் மற்றும் பித்தப் பையினையும், அதற்கடுத்துள்ள இரண்டு பற்கள் பெருங்குடல் மற்றும் நுரையீரலையும், கடைவாய் பற்களுக்கு முன் உள்ள இரண்டு பற்கள் வயிறு மற்றும் மண்ணீரலையும், கடைவாய் பற்கள் இதயம், சிறு குடலையும் பிரதிபலிக்கிறது.
எனவே பற்கள் பாதிக்கப்பட்டால் எந்த பற்கள் பாதிக்கப் பட்டிருக்கிறதோ அது தொடர்பான பகுதியில் ஏற்பட்டிருக்கும் சிக்கலுக்கும் சேர்த்தே சிகிச்சை பெறவேண்டும்.
அதனைவிடுத்து பற்களுக்கும் மட்டும் சிகிச்சைப் பெற்றால் மீண்டும் மீண்டும் வலி ஏற்படக்கூடும். அதனால் பற்களுக்குச் சிகிச்சை எடுக்கும் போது, அது தொடர்பான பகுதிகளிலும் சிகிச்சை எடுத்துக்கொள்வது நல்லது.
இது தொடர்பாக அக்கு பிரஷர் சிகிச்சை மிகவும் எளிமையானது. குழந்தைகளுக்கும் செய்யக்கூடிய அளவில் இருக்கக்கூடியது.
ஒரு சில குழந்தைகளுக்கு பால் பற்கள் விழத்தொடங்கி எட்டு அல்லது ஒன்பது வயது வரை கூட அவ்விடத்தில் பற்கள் முளைத் திருக்காது.
அல்லது அங்கு முளைப்பதற்கு தாமதமாகலாம். இந்நிலையில் உள்ள குழந்தைகளுக்கு மற்ற சிகிச்சைகளை விட, நீங்கள் அக்கு பிரஷர் சிகிச்சையை மேற்கொள்ளும் போது உடனடியாக பலன் காணலாம்.
குறிப்பாக குழந்தைகளின் குதிகால் பகுதிகளில் உள்ள சிறுநீரகத்திற்கான சக்தி புள்ளிகளை தினசரி மூன்று முறை விரல் விட்டு அழுத்தி வந்தால் போதும். பால் பற்கள் விழுந்த இடத்தில் பற்கள் தோன்றுவதுடன் , விரைவாகவும் பற்கள் முளைப்பதை காணலாம்.
குழந்தைகளை விடுத்து ஏனையவர்கள் அதிகளவில் முகம் கொடுக்கும் மற்றொரு பிரச்சினை பல் வலி. உடனடியாக பலா தங்களுக்கு தெரிந்த கை வைத்தியத்தை செய்வார்கள்.
உதாரணமாக கிராம்பை எடுத்து அதனை பொடியாக்கி பல்லில் நேரிடையாக வைத்துக்கொள்வர். மேலும் ஒரு சிலர் கொய்யா மர இலைகளில் ஐந்து இலைகளை மட்டும் பறித்து,. அதனை வாயில் போட்டுக்கொண்டு அதன் சாறை உண்ணாமல், வாயில் மென்று கொன்றே இருப்பார்கள்.
சிறிது கால அவகாசத்திற்கு பிறகு அதனை துப்பிவிடுவார்கள். இவையெல்லாம் செய்ய விரும்பாத பலருக்கு உதவுவது தான் விரல் நுனி அழுத்த சிகிச்சை.
முன் நான்கு பற்களில் வலி என்றால் கட்டை விரலின் நுனியை தொடர்ச்சியாக இரண்டு நிமிடங்கள் வரை அழுத்தி விட வேண்டும்.
அதே போல் முன் நான்கு பற்கள் அல்லாமல் அடுத்த நான்கு பற் களில் வலி என்றால் ஆட்காட்டி விரலை தொடர்ச்சியாக இரண்டு நிமிடங்கள் வரை அழுத்திவிட வேண்டும்.
அடுத்த நான்கு பற்களுக்கு மோதிர விரலையும், கடை வாய் பற்களுக்கு சுண்டு விரலையும் தொடர்ச்சியாக இரண்டு நிமிடங்கள் வரை அழுத்திவிட்டுக்கொண்டிருந்தால் பல் வலி குறைவதை உணரலாம்.
அதே தருணத்தில் பல் வலியை குணப்படுத்த மற்றொரு முறையையும் அக்கு பிரஷர் உணர்த்துகிறது. அதாவது கை கட்டைவிரல் மற்றும் ஆள்காட்டி விரல்களுக்கு இடையே உள்ள சிறிய பகுதியில் சிறிய அளவிலான ஐஸ் கட்டியை வைத்து தொடர்ந்து இரண்டு நிமிடம் அழுத்தினால் பல் வலி பறந்து போகும்.
பற்குழி பிரச்சினையால் அவதிப்படு பவர்கள் பல் மருத்துவர்களிடம் சென்று பற்குழிகளை சுத்தம் செய்து கொண்டு அதனை அடைத்துக்கொள்வது தான் சிறந்த வழி.
ஆனால் பற்குழியை சுத்தம் செய்து அடைக்கும் போது எதைக் கொண்டு அடைக்கிறோம் என்பதில் தான் கவனம் செலுததவேண்டும்..ஏனெனில் பொதுவாக சில மருத்துவமனைகளில் பற்குழியை அடைக்க அமால்கம் முறையை கடைபிடிக்கிறார்கள்.
இம்முறையிலான பற்குழி அடைப்பில் வெள்ளி மற்றும பாதரச கலவை குறிப்பிட்ட சதவீதத்தில் பயன்படுத்தப்படுகிறது. இதனை பல நாடுகள் தற்போது தடைவிதித்துள்ளன.
ஏனெனில் இம்முறையால் சிகிச்சை பெறுவோர்களில் பெரும்பாலானவர்கள் பாதரசம் ஓக்ஸைடு என்ற விஷத் தன்மையுள்ள வேதிப்பொருளை உணவோடு சேர்த்து சாப்பிடுவதாக ஆய்வு களில் கண்டறியப்பட்டிருககிறது.
குறிப்பாக சூடாக உணவோ அல்லது பானங்களே அருந்தும் போது இவை நடைபெறுவதாகவும் கண்டறியப்பட்டுள்ளது. இதனால் உடலுக்குள் சென்ற பாதரச ஓக்ஸைடு நரம்பு மண்டலத்தை பாதிக்கக் தொடங்குகிறது.
அதனால் இம்முறையிலான பற்குழி அடைப்பை விடுத்து, செராமிக் முறையிலான பற்குழி அடைப்பை மேற்கொள்வது தான் நன்மை பயக்கும்.
டாக்டர் M.N.சங்கர். M.D.,
தொகுப்பு: அனுஷா