மத்திய அமெரிக்க நாடான பனாமாவிலுள்ள உணவகமொன்றில் அமைதியாக தின் பண்டங்களை அருந்திக் கொண்டிருந்த நபரொருவரை துப்பாக்கிதாரியொருவர் தலையில் சுடுவது அங்கிருந்த சி.சி.ரி.வி கண் காணிப்பு வீடியோ கருவியில் பதிவாகியுள்ளது.
நெதர்லாந்து பிரஜையான ஜாகொப் வான் டெர் ஹார்ட் பனாமாவின் தலைநகருக்கு அண்மை யில் பெல்லா விஸ்டாவிலுள்ள திரைட்டன் உணவகத்தில் நொறுக்குத் தின் பண்டங்களை உண்டு கொண்டிருந்த போது துப்பாக்கிதாரியொருவர் அந்த உணவகத்திற்குள் பிரவேசித்துள்ளார்.
இதன்போது படுகொலைக்காக கட்டணம் செலுத்தி அமர்த்தப்பட்டவர் என நம்பப்படும் அந்த துப்பாக்கிதாரி, ஹார்ட்டின் பின்புறமாக துப்பாக்கியுடன் நடந்து வந்து அவரது தலையில் துப்பாக்கிச் சூட்டை நடத்துகிறார்.
இதனையடுத்து ஹார்ட் கதிரையிலிருந்து சரிந்து விழவும் துப்பாக்கிதாரி உணவகத்துக்கு வெளியே தயாராக காத்திருந்த சகாவின் மோட்டார் சைக்கிளில் தாவி ஏறி தப்பிச் சென்றுள்ளார்.
மேற்படி சம்பவத்தில் ஹார்ட் உயிர் தப்பியுள்ள போதும், அவரது உடல் நலம் கவலைக்கிடமாகவுள்ளதாக கூறப்படுகிறது.
அவர் பனாமா மருந்துவமனையொன்றின் அவசரசிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப் பட்டுள்ளார்.