பெஷாவர்வடமேற்கு பாகிஸ்தானில் பெஷாவர் உள்ளிட்ட நகரங்களில் பணியாற்றும் ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியைகளுக்கு போலீசார் துப்பாக்கியால் சுடுவதற்கு பயிற்சி அளித்து வருகின்றனர்.

மேலும், அவர் கள் பள்ளிகளுக்கு செல்லும்போது துப்பாக்கி எடுத்து செல்ல போலீசார் அனுமதி வழங்கி வருகின்றனர்.

பெஷாவர் நகரில் இருக்கும் ராணுவ பள்ளியின்மீது தலிபான் தீவிரவாதிகள் கடந்த மாதம் 16&ம் தேதி தீவிர துப்பாக்கி தாக்குதல் நடத்தினார்கள். இத்தாக்குதலில் 132 பள்ளி குழந்தைகள் உட்பட 151 பேர் பலியாகி விட்டனர்.

இதைத் தொடர்ந்து, வடமேற்கு மற்றும வடக்கு பிராந்தியங்களில் தலிபான் உள்ளிட்ட பல்வேறு தீவிரவாத இயக்கங்களை ஒழிக்கும் பணியில் பாகிஸ்தான் ராணுவம் ஈடுபட்டு வருகிறது.

பெஷாவர் நகரில் நடைபெற்ற தலிபான் தாக்குதலை தொடர்ந்து, அங்குள்ள பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்களுக்கு பெஷாவர் போலீசார் பாதுகாப்பு பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.

அத்துடன், பள்ளி மற்றும் கல்லூரிகளின் சுற்றுச் சுவர்களை மேலும் உயர்த்தி, அவற்றின் மேல் இரும்பு கம்பி களை பொருத்தும்படி கல்வி நிறுவனங்களுக்கு போலீசார் அறிவுறுத்தி உள்ளனர்.

இந்நிலையில், பாகிஸ்தானின் வடமேற்கே கைபர் பக்துன்கவா பிராந்தியத்தில் இருக்கும் அனைத்து அரசு மற்றும் தனியார் பள்ளி, கல்லூரி ஆசிரியர் மற்றும் ஆசிரியைகளுக்கு நேற்று முதல் துப்பாக்கி சுடும் பயிற்சியை பிராந்திய போலீசார் மேற்கொண்டு வருகின்றனர்.

பெஷாவர் நகரில் நேற்று நடைபெற்ற துப்பாக்கி சுடும் பயிற்சியில் தனியார் பள்ளிகளை சேர்ந்த 150 பெண் ஆசிரியைகள் கலந்து கொண்டனர். அவர்களுக்கு பெஷாவர் போலீசார் நவீன ரக துப்பாக்கிகள் மூலம் பயிற்சி அளித்தனர்.

வடமேற்கு பிராந்தியத்தில் தீவிரவாதிகளின் தாக்குதலை சமாளிக்க, அனைத்து பள்ளிகளுக்கும் பே £லீசார் பாதுகாப்பு அளிப்பது சிரமம். அதனால் அனைத்து ஆசிரியர்களுக்கும் துப்பாக்கி பயிற்சி அளிக் கப்படும். அவர்கள் பள்ளிகளுக்கு துப்பாக்கியை எடுத்து செல்ல உரிமமும் வழங்கப்படும் என்று அப்பிரா ந்திய கல்வி அமைச்சர் அதீப் கான் கூறினார்.

வகுப்புக்குள் ஆசிரியர் பாடம் எடுக்கும்போது, ஒரு கையில் துப்பாக்கியையும் மறுகையில் பேனாவையும் வைத்துக்கொண்டு எப்படி பாடம் எடுக்க முடியும்? இது எங்கள் வேலையல்ல.

அவ்வாறு ஆசிரியர் துப்பாக்கியை எடுத்து சென்றால், மாணவர்களிடையே எதிர்விளைவை ஏற்படுத்திவி டும் என்று தனியார் பள்ளி ஆசிரியர்கள் சங்கத் தலைவர் மாலிக் காலித் கான் எதிர்ப்பு தெரிவித்திருக்கிறார்.

Share.
Leave A Reply